தேவி ஸ்ரீ பிரசாத் உடன் ஆஷா போன்ஸ்லே & அமிதாப்பச்சன் பாடிய தேசப்பக்தி பாடல்

தேவி ஸ்ரீ பிரசாத் உடன் ஆஷா போன்ஸ்லே & அமிதாப்பச்சன் பாடிய தேசப்பக்தி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹர் கர் திரங்கா’ என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.

இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி…

“இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது.

இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் இப்பாடல் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்,” என்று கூறினார்.

“உலகெங்கிலும் நடைபெறும் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன்.

நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளது.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

எல்லா வயதினரையும், குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ள தேசபக்தி ததும்பும் இப்பாடலின் மூலம் தான் உண்மையிலேயே ஒரு இசை மேஸ்ட்ரோ என்பதை டிஎஸ்பி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்பட ஆல்பத்தில் நாம் பார்த்தது போல் தனது பாடல்களால் பார்வையாளர்களை கவர்வதில் தனித்திறமை கொண்டவராக டிஎஸ்பி திகழ்கிறார்.

பாடகரும் இசையமைப்பாளருமான இவர் தற்போது ‘புஷ்பா 2’ பல படங்களில் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

Music Composer Rockstar @ThisIsDSP ‘s Mesmerising Patriotic Song #HarGharTiranga goes viral!

It’s a proud moment that our own PAN INDIAN Rockstar has composed our National song for India.

Music Composer DSPs new song Har Ghar Tiranga goes viral

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட நடிகை

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர் & டான்’ மற்றும் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நட்ராஜ் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுது,

இது குறித்த படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் கேரளாவில் தொடங்கப்படவுள்ளது.

ஜெயம் ரவி

Priyanka Mohan to pair opposite Jayam Ravi in Director Rajesh’s next film

நான் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்க மாட்டேன்.. இனி ரோலக்ஸ் & டில்லி பாத்துப்பாங்க..- சூர்யா

நான் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்க மாட்டேன்.. இனி ரோலக்ஸ் & டில்லி பாத்துப்பாங்க..- சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது…

உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல.

25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ஆச்சரியம் உடன் பார்த்திருக்கிறேன். எதையும் எதிர்பாராமல் அவர்கள் கொடுக்கும் அன்பு, சாப்பாடு, பல நாட்கள் இங்கு சுற்றியது என்னால் மறக்கவே முடியாது. அவையும் அதற்கு இணையான அனுபவம் இங்கும் இருக்கிறது.

தென் தமிழ்நாட்டின் வாசல் மதுரை. மதுரை என்றாலே அழகர், வாடிவாசல், மீனாட்சி அம்மன் என்று கூறுவது போல, அச்சு அசலாக மக்களின் அன்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு வரம். அந்த வரத்தை அளித்த அனைவருக்கும் நன்றி.

மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக கூறுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த இயக்குனர் இமயம் ஆக முடியும் என்று பாரதிராஜா அங்கிள் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அது மட்டுமே அவருடைய சாதனை அல்ல. அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.

அவர்களுக்கு கை கொடுத்து உயர்த்தியிருக்கிறார். இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் வீட்டில் விளையாடுவதற்கும், அவர் பையன் மனோஜ் உடன் விளையாடுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் அழைத்ததற்காக இங்கு வந்திருக்கிறார். அதை நான் மிகவும் உயர்வாக பார்க்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று கூறுவார். அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.

ஆயுத எழுத்து படத்தில் நான் உங்களுக்கு நடிக்க சொல்லித் தரவில்லை. என்னை நிறைய புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். ஸ்கிரீன் டெஸ்ட் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் என்னை நடிக்க வைக்கவில்லை. உங்களுடைய வெளிச்சத்திலிருந்து தான் நான் வந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆலமரம். உங்களுடைய ஆசீர்வாதம் தான் உங்களை வழிநடத்துகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்க மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் ஷங்கர் சார் தான். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். 30 வருட காலமாக தொடர்ந்து சாதனைப் புரிவது சாதாரணமானது அல்ல. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அதிதி நீ ஜொலிக்கிறாய். நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் உங்களைச் சுற்றி அழகான உலகத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். 2D அலுவலகத்திற்கு நீங்கள் வந்த நாள் முதல் அனைவருக்குமே உங்களைப் பிடித்து விட்டது. அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தீர்கள். உங்களை தண்ணீர் குடிக்கிறீர்களா? சாப்பிட்டீங்களா? என்று அனைவரையும் கேட்க வைத்தீர்கள். நீங்கள் ஒரு ஆற்றலின் மூட்டை. உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம். அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது.

காவல் கோட்டம், வேல்பாரி நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம். எல்லோரிடமும் எடுத்துச் சென்ற மிகச்சிறந்த படைப்பு. நண்பன் என்று கூறுவதா அல்லது ஒரு என்று கூறுவதா தெரியவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் இங்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு. மதுரை மக்களின் குரல், தமிழ் மக்களின் குரல் எங்கு, எப்போது, எப்படி பதிவு செய்ய வேண்டுமோ! அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவருடன் சுவாரவசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூடிய விரைவில் கூறுகிறேன்.

பாரதிராஜா அங்கிள்,
கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை போன்ற பல படங்களில் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார். நம் முன்னாடி இருக்கும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், அதை நாம் சந்திக்கும் விதங்கள் இவற்றை நாம் அனுபவத்தில் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஒரு நல்ல படம் பார்க்கும்போது இப்படித்தான் வாழவேண்டும், உறவுகளே இப்படி தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய ஒவ்வொரு படங்களிலும் பதிவு செய்திருக்கிறார். தேவன் என்பது என்ன பட்டமா? என்று அனைவரையும் உலுக்கிப் போட்ட ஒரு கேள்வி, அதேபோல இப்படத்தில் இறுதி காட்சியில் வசனங்கள் இருக்கிறது. முத்தையாவின் வசனங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை எடுத்தோம். அந்த வசனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும். உங்களுக்கு ஒழுக்கம் எங்கிருந்து வந்ததென்று இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் டீ காப்பி கூட குடிக்க மாட்டீர்கள் என்று அலுவலகத்தில் கூறினார்கள். அதற்கான காரணத்தை இப்போது உங்கள் அப்பா அம்மா கூறிய பிறகுதான் அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தது. அதைக் கேட்ட பிறகு உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

பாலா மற்றும் அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையை விட்டு இறங்க முடியாது. எனக்கும் கார்த்திக்கும் அவர்களால் தான் அடையாளம் கிடைத்திருக்கிறது.

இந்த ஊரை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் செல்வா. இயக்குனருடன் சேர்ந்து கதை கூறும் முக்கியமான பொறுப்பு அவருக்கு இருந்திருக்கிறது. ஜாக்கி ஒரு நாடோடி. ஒரு படம் முடிந்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். பைக் பயணத்தில் அலாதி பிரியம் கொண்டவர். மிகச் சிறந்த பாடகரும் கூட. எங்கள் இருவரிடமும் அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது வாடிவாசல்- இல் பயணிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். வையாபுரி அண்ணனுக்கு நன்றி. பிதாமகன் படத்தில் பாதி நடிப்பை சொல்லிக் கொடுத்தது சிங்கம்புலி அவர்கள்தான். பேரழகன் படத்திலும் சின்னாவாக நடிக்க முடிந்ததற்கு சிங்கம்புலி அண்ணா தான் காரணம். அவரைப் பார்த்துதான் சின்னாவாக நடிக்க கற்றுக் கொண்டேன்.

இளவரசு அண்ணனுடன் என் ஜி கே வில் பயணித்தது மறக்க முடியாதது. கெட்டப்பில் மீசை தாடி மாற்றாமல் அப்படியே தான் இருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார்.

எங்கள் 2D நிறுவனம் உங்களை எப்படி நடத்தியது என்று நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் திருப்தியான, நெகிழ்வான தருணமாக இருந்தது. அதற்காக வடிவுக்கரசி அம்மாவிற்கு நன்றி.

அனல் அரசின் சண்டைக் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர் அருமையாக நடித்திருக்கிறார். டப்பிங்-லும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றக் கூடிய வல்லமை சூரிக்கு இருக்கிறது. தனக்குள் இருக்கும் திறமை முழுவதையும் கொடுத்துவிடுவார். இப்படத்திலும் அதை பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் இயக்கத்தில் அவர் நடிக்கும் விடுதலை படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கருணாஸ் மாமாவிற்கு நன்றி.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நடந்தது. படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் கொடுக்காமல் அந்த ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதுரை மக்களுக்கும் தேனி மக்களுக்கும் மிக்க நன்றி.

சரியாக நடிக்க தெரியாத போது, சென்னோரீட்டா பாடலில் என்னை ஓட விட்டவர் யுவன். சகோதரன் மாதிரி தான் நாங்கள் பழகி வருகிறோம். பருத்திவீரன் படத்தில் கதையே இசையும் பிரிக்க முடியாத அளவிற்கு கதையோடு இணைந்து இசையமைத்திருந்தார் யுவன். அவருடைய பயணம் இன்னும் தொடர வேண்டும்.

ரசிகர்களாகிய உங்களால் கமல் சார் எனக்கு கொடுத்த பரிசு இதோ இந்த ரோலக்ஸ் வாட்ச்.

கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன்.

சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.

என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும்.

டெல்லியும் ரோலெக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் நாயகன் நடிகர் கார்த்தி பேசியதாவது…

என்ன மாமா சௌக்கியமா?

இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள். அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றார்.

என்னைப் பருத்தி வீரனாக உருவாக்கி உங்கள் முன்னாள் நிறுத்தினார். இன்றுவரை தொடர்ந்து உங்கள் அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேறு வேறு விஷயங்களைத் தேடிப் போவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது.

கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்தில் இருக்கும் காதல் வேறு. ஒரு பெண்ணைப் பார்த்தால் இறுதிவரை அந்தப் பெண்ணுடன் தான் வாழ வேண்டும். மாற்றிக் கொண்டே இருக்க மாட்டோம். அண்ணன், தங்கை, தம்பி என்று பல சொந்தங்கள் இருக்கின்றது.

அவர்களுக்காக வாழ்வது தனி சுகம். அதை இங்கே கதை எடுத்தால் மட்டும் தான் சொல்ல முடிகிறது. கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல். பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார்.

எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார். ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன்.

யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்.

ஒரு வேலை செய்தால் பணம் மட்டுமே சம்பளம் இல்லை என்று கூறுவார். அவர் எல்லா படங்களுக்கும் சம்பளம் வாங்குவதில்லை. அதேபோல், சில படங்கள் நமக்கு அனுபவத்தை கொடுக்கும் என்று கூறுவார்.

அப்படி இரசித்து பணியாற்றக் கூடியவருடன் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ராஜ்கிரண் சார் போனில் அழைத்து இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அவர் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயம்.

இந்த விழாவை மதுரையில் வைத்து உங்களுக்கு எல்லாம் நேரில் நன்றி சொல்ல ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தோம்.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டார். அவரது குழந்தை பிறந்தும் கூட, இரண்டு மூன்று மாதங்கள் இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடித்து விட்டுத்தான் சென்றார்.
வடிவுக்கரசி அம்மா உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாரதிராஜா அங்கிள் இங்கு வந்திருக்கிறார். பக்கத்து வீடான அவர் வீட்டில்தான் தான் நாங்கள் வளர்ந்தோம்.

இன்றளவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் நாங்கள் பார்ப்பது அவருடைய படங்களை தான். முதல் மரியாதை படத்தை முறியடிக்கும் படியான ஒரு சிறந்த படத்தை நம்மால் எடுக்க முடியாதா என்று முத்தையாவிடம் கேட்டேன். கண்டிப்பாக எடுக்கிறோம். அப்போது தான் அங்கிள் உங்களுக்கு மரியாதை உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

அதேபோல், ஷங்கர் சார் யாரை விஞ்சுவதற்காக படம் எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாதியாவது எடுக்க முடியும்.

முத்தையா அதிதிக்கு சாதாரணமாக வாய்ப்பு கொடுத்து விடவில்லை. பல கோணங்களிலும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துதான் இந்த படத்திற்கு அழகான நாயகி கிடைத்துவிட்டார் என்று தேர்வு செய்தார். சினிமாத்துறையில் ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள்.

நான் நடிக்க வரும்போதே என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்கும்போது தன் பெண்ணை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? சினிமா துறையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்?

ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்கள் அப்பா கூறுவார். எம்ஜிஆர் அவர்கள் மற்றும் விஜயகாந்த் அவர்கள் பெண்களை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் எங்களுக்கு உத்வேகம்.

படிப்பு வரவில்லை என்றால் தான் சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அதிதி மருத்துவம் படித்துவிட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடல் வந்த புதிதில் இரவு ஒரு மணிக்கு, BAR பாரில் இருந்து போன் செய்து உங்கள் பாட்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். இப்பொழுது பகலிலும் போன் செய்து உங்கள் பாட்டுதான் ஓடுகிறது கேட்கின்றதா என்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய அடையாளம். அதைக் கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.

அதன் பிறகு பையா, நான் மகான் அல்ல என்று என் எல்லா படங்களுக்கும் அவரே இசையமைத்தார். இந்த படம் எடுக்கும்போதும் கிராமத்துக் கதை என்பதால் யுவனை விட்டு விடக்கூடாது என்று நினைத்தோம். கஞ்சா பூ கண்ணாலே பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
ரீ-ரெக்கார்டிங்கில் படம் பிளாக்பஸ்டர் ஆவது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறினேன். என்னுடைய பால்ய சினேகிதன் மனோஜ்.
பாரதிராஜா அங்கிள் பையன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இங்கு அவர் வரவில்லை. ஆனால், அவரிடம் எப்படி கேட்பது என்று தயங்கி கொண்டே இருந்தேன். உன் படம் என்றால் நான் நடிக்க மாட்டேனா என்று வந்துவிட்டார். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு அண்ணனுடன் இந்த படத்தில் இணைகிறேன். இன்று விமானத்தில் வரும்போது இந்த படத்தை ஏன் தயாரித்தீர்கள்? என்று கேட்டேன். சட்டென்று உன் மீது இருந்த நம்பிக்கை தான் என்று கூறிவிட்டார்.

இயக்குனர் முத்தையா எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு முடிந்து விட்டால் இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் ஒரே மனிதர் இவர்தான். சினிமா, குடும்பம், (ஆரோக்கியம்) உடற்பயிற்சிக்கூடம் இம்மூன்றுக்கும் தான் முக்கியத்துவம் அளிப்பார். இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. மிகச் சிறந்த உழைப்பாளி. கண்கலங்கும் படியான காட்சிகள் கூறுவார். அவருக்காகவே இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் அண்ணனும் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் இப்படம் வெற்றியடைய வேண்டும்.

பருத்தி வீரனுக்குப் பிறகு, மதுரையில் 60 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். இங்கேயே வாழ்ந்ததற்கான திருப்தி கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் பருத்திவீரனின் சாயல் இருக்கக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படத்தில் தவிர்க்க முடியவில்லை, லோக்கல் என்றாலே வேட்டியை தூக்கி மடித்து கட்ட தான் வருகிறது. சட்டை கசங்கி இருக்கிறது, தலை கலைந்து இருக்கிறதா என்று பார்க்க தேவையில்லை. அப்படியே தரையில் உட்கார்ந்து நடிக்கலாம்.

அழுக்கா அழகா இருக்கிற ஒரே ஆளு நீதான் என்று சூரி கூறுவர். இந்த படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் புதிதாக தெரிவார். மதுரை மண்ணுக்கு நன்றி. இந்த படம் வெற்றியடைய மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

Suriya speech at Vuruman Audio and Trailer launch

அதிதி இப்போதான் நடிகை.. இதற்கு முன்.; ‘விருமன்’ விழாவில் ஷங்கர் ருசிகர பேச்சு

அதிதி இப்போதான் நடிகை.. இதற்கு முன்.; ‘விருமன்’ விழாவில் ஷங்கர் ருசிகர பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’.

இதில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

#விருமன் பட விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசும்போது…

என்னுடைய ஆசை கனவு அனைத்தும் தரையிலிருந்து திரையில் வருவது தான். அது நிறைவேற துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரிக்கு நன்றி.

இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த 2D நிறுவனம் சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா சார் அவர்களுக்கு நன்றி. தேசிய விருது பெற்றதற்கு சூர்யா சாருக்கு வாழ்த்துக்கள்.

என்னை தேன்மொழியாக மாற்றிய இயக்குனர் முத்தையாவிற்கு நன்றி. முத்தையா மிகவும் நேர்மையான மனிதர். வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். அவர் ஓவ்வொரு காட்சியை விளக்கும் போதும் அந்த கதாபாத்திரமாகவே நடித்துக் காட்டுவார். அப்போது உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் கண்கள் கலங்கும்.

என்னுடைய அறிமுக படத்தில் யுவனுடன் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி. நான் யுவனின் மிக பெரிய ரசிகை. என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்த தங்கதுரைக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் செல்வா சார் என்னை மிக அழகாக திரையில் காட்டியுள்ளார்.

கார்த்தியின் நடிப்பை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் எனக்கு நிறைய கற்றுத் தந்தார்.

என்னை ஒரு புது முகம் போல் அவர்கள் நடத்தவில்லை. 2D நிறுவனம் முழுவதுமே என்னை அவர்களின் குடும்பப் பெண் போன்று தான் பார்த்துக் கொண்டார்கள்.

*அப்பா பலரை கேமரா முன் நிறுத்திப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் முதல் முறையாக கேமரா முன் நின்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?*

நான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை பயத்துடன் தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், முதல் காட்சியே பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஷோபி மாஸ்டர் தான் அந்த பாடலுக்கு நடனம் கற்றுத் தந்தார். அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.

சினிமா பின்புலம் இருக்கக் கூடிய ஒரு மிகப்பெரும் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வருவோரை மக்கள் அதிகம் கவனிப்பர். அப்படியான அழுத்தங்களை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?

நான் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என் அம்மா அப்பா இருவரும் எனக்கு ஊக்கமளித்தார்கள். ஆனால், நான் இந்த சினிமாத் துறையில் நிலைத்திருப்பது என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார்.

‘விருமன்’ பட விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசும்போது..

என்னுடைய மகளுக்கு வாய்ப்புக் கொடுத்த 2டி நிறுவனத்திற்கும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் 2டி நிறுவனத்தைச் சார்ந்த அத்தனை பேருக்கும் நன்றி. இப்படத்தில் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்று கேட்டதும், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், தொடர்ந்து நல்ல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற சூர்யாவிற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கார்த்தியை திரையில் பார்த்தாலே பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்ற தரமான நடிகர். அவருடன் அதிதி நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் சகோதரர் போல அவரும் கூடிய விரைவில் தேசிய விருது வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கஞ்சா பூ கண்ணாலே, மதுரை வீரன் போன்று பல கிராமத்து பாடல்கள் வந்துவிட்டது. இருந்தாலும், அதில் புத்துணர்ச்சி தருவது சிறப்பான விஷயம். ரிதமில் புதிதாக ஏதோ செய்கிறார் யுவன். அருமையாக இசையமைக்கும் யுவனுக்கு வாழ்த்துகள்.

முத்தையாவின் படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரத்தை அருமையாக சித்தரிப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

எனது மகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. செல்வ குமார் ஒளிப்பதிவை ஆழமாக உணர முடிந்தது. கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.

என் மகளைப் பற்றி நான் என்ன கூறினாலும், ஒரு அப்பா தன் பெண்ணைப் பற்றி பெருமையாகக் கூறுவது போலத்தான் இருக்கும். ஆனால், ஒரு இயக்குனராக அவரை கவனத்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர். அவர் மேன்மேலும், திறமையை வளர்த்துக் கொள்வது, முத்தையா மாதிரி இயக்குனர் கைகளிலும், ரசிகர்கள் கைகளிலும் தான் இருக்கிறது.

இந்த வாய்ப்புக் கொடுத்த தங்கதுரை, பத்திரமாக பார்த்துக் கொண்ட 2டி ராஜசேகர், பாபி அவர்களுக்கும் நன்றி.

உங்களைப் பார்த்து இயக்குனராக வேண்டும் என்று பலரும் நினைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் நிறைய அறிவுரை வழங்கியிருப்பீர்கள். ஆனால், உங்கள் மகளுக்கு நீங்கள் கூறிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு..

என் மகளுக்கு நான் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. மேலும், அவருக்கு அறிவுரை வழங்குவது பிடிக்காது. அதுமட்டுமில்லாமல், இக்காலத் தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.

நாங்கள் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிதி அவருடைய இருக்கையில் அமைதியாக இல்லாமல், ரோலக்ஸ் என்று கூச்சலிட்டும், கைத்தட்டி ஆரவாரத்தோடும் இருக்கிறார். அவர் என்ன வாலா? என்ற கேள்விக்கு..

அவர் இப்போது தான் நடிகை. அதற்கு முன் எல்லோரும் போல கைத்தட்டி ரசிக்கும் ரசிகை என்றார்.

இப்படத்தின் டிரைலர் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் வெற்றித் தெரிகிறது” என்றார் ஷங்கர்.

விருமன்

Director Shankar speech at Viruman Audio launch

ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கபாலி’ & ‘காலா’ & ‘சார்பட்டா பரம்பரை’ படங்களுக்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது ” எனும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித்.

இதில்… காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக் கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது.

ஆகஸ்ட் 31 தியேட்டரில் வெளியாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசை டென்மா, எடிட்டிங் செல்வா RK, கலை ரகு,
நடனம் சாண்டி, சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம்.

Natchathiram Nagargirathu release date is here

சூர்யா வந்தாலே தாங்காது.. விருமனும் கூட வந்தா..; மதுரையை கலகலப்பாக்கிய சூரி

சூர்யா வந்தாலே தாங்காது.. விருமனும் கூட வந்தா..; மதுரையை கலகலப்பாக்கிய சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொம்பன்’ படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

#விருமன் பட விழாவில் நடிகர் சூரி பேசும்போது…

சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட,்ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும். அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.

முத்தையா பிரதர் இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்திருக்கிறேன். பின் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தேன். இப்போது 3வது படமாக இதில் நடித்திருக்கிறேன்.

முத்தையா பிரதர் வெளியே இருக்கும்போது, கிராம படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், நகர்புற படங்கள் எடுப்பதில்லை. ஏன்? என்று கேட்டார்கள். எல்லோரும் நகர்ப்புற படங்கள் எடுத்தாலும், எங்களுடைய பிழைப்பு என்னவாகும்? ஷங்கர் சார் மைதானத்தில் நாங்கள் நுழையக் கூட முடியாது.

கருணாஸ் கூறியது போல, ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த சினிமாவை, இதுதான் என் மண், இங்கே கேமராவை வையுங்கள் என்று திசைமாற்றியது பாரதிராஜா சார்தான்.

அவர் போட்ட விதைதான் இன்று எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால், எல்லோரும் அந்த பக்கம் போய்விடாதீர்கள். ஆனால், எல்லா இயக்குனர்களும் இங்கு தேவைதான்.

கார்த்தி பிரதருடன், நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் நடித்தேன். இப்படம் 3வது படம். முத்தையா பங்காளியுடனும் 3வது படம். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் நீங்கள் கதாநாயகன் தான்.

எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செய்கிறீர்கள். உங்களின் கடமை, விடாமுயற்சி ஆகியவைக்கு மதுரை மீனாட்சி என்றும் துணையிருப்பாள்.

இந்த விழா நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. கதாநாயகர்களுக்கு சமமாக உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த லட்சக் கணக்கான ரசிர்களில் நானும் ஒருவன். கஞ்சா பூ கண்ணாலே…என்ற பாடலை கேட்காதவர்கள் பாவம் செய்தவர்கள்.

தினமும் இரவில் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்போது பார்த்தாலும் இந்தப் பாடலையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனது மனைவி கேட்டார். எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த பாடல்.

ரோபோ ஷங்கரின் மகளை சிறிய வயது முதல் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் இயக்குனர் அவரை தூக்கி இடுப்பில் வைக்க முடியுமா? என்று கேட்டார்.

நான் ஒரு அடி பின்னால் சென்றேன். ஆனால், பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடினார். அவருடைய கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, ராஜ்கிரன் ஒழுக்கத்தின் முன்னுதாரணமாக இருக்கிறார். அவருடன் நடித்ததற்கு நன்றி.

அதிதியின் நடிப்பை பார்த்தால் 50, 60 படங்களில் நடித்தது போன்ற அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அத்தனை பாவனைகளை கொடுப்பார். அவரைக் கொடுத்த ஷங்கர் சாருக்கு நன்றி என்றார்.

Actor Soori speech at Viruman trailer launch

More Articles
Follows