தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.
ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
ஏ சி டி சி நிறுவனர் ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி இருவருமே நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை. மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.
மேலும் முறையான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்படவில்லை
இதனால் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேசமயம் நாங்கள் அரங்கத்திற்கு உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை என ஏஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஹ்மானின் இந்த பதிலுக்கு இசை அமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கருத்து தெரிவிக்கையில்..
“அங்கு உள்ள எவருக்காகவும் மக்கள் வரவில்லை.. ஏ ஆர் ரகுமான் என்ற ஒருவருக்காகவே மக்கள் திரண்டனர். அப்படி இருக்கையில் ரகுமானின் இந்த பேச்சு பொறுப்பேற்ற பேச்சாகும்.
இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முறையான ஏற்பாடுகளை செய்து இசையமைப்பாளர்கள் நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி ஆகியோரின் படங்கள் தற்போது கிடைத்துள்ளன..
Music composer AR Rahman concert issue goes viral