சூர்யாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ நடிகையை செலக்ட் செய்த ஹரி

Mugamoodi fame Pooja Hegde to be paired with Suriya in Aruvaமிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அந்த படம் படு தோல்வியை தழுவியதால் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு மகரிஷி படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘அல வைகுண்டபுரம்லு’ என்ற படத்திலும் நடித்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்பட படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் இந்த கூட்டணி இதற்கு முன் இணைந்திருந்தது.

Mugamoodi fame Pooja Hegde to be paired with Suriya in Aruva

Overall Rating : Not available

Latest Post