தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’.
ஜிப்ரான் இசையமைக்க இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு ‘துணிவு’ ட்ரைலர் வெளியானது.
இந்த ட்ரெய்லர் இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக அதாவது 1.50 நிமிடங்களே உள்ளன.
இந்த ட்ரெய்லரில் அஜித்தை பார்த்து பிரேம் கேட்கிறார்.. “மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க உனக்கு வெட்கமா இல்லையா?
“இல்லை என்று கூறிவிட்டு தனது முகமூடியை அவிழ்க்கிறார் அஜித்.
இதனைத் தொடர்ந்து அதிரடியான துப்பாக்கி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கியமாக அஜித் தன்னுடைய இமேஜை பற்றி கவலை கொள்ளாமல் துணிச்சலாக நெகட்டிவான வசனங்களை பேசியுள்ளார்.
பேங்கில் அஜித்துக்கு கொள்ளை அடிக்கப் போகும்போது… உங்களுக்கு என்ன வேணும்? என்று ஒருவர் கேட்கிறார்..
பேங்க்ல பீர் பிராந்தி கேப்பாங்க? என்று பேசுகிறார் அஜித்.
அதனை அடுத்து ..*என்னை மாதிரி அயோக்கிய பையன் மேல கைய வைக்கலாமா.? என்று கூறிவிட்டு அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இறங்கி ஆட்டம் போடுகிறார் அஜித்.
இந்த ட்ரெய்லர் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Much awaited Thunivu trailer released
Here’s much awaited Thunivu Official Trailer l filmistreet #Ajithkumar ?? https://www.filmistreet.com/video/thunivu-official-trailer/
