பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Much awaited Rebel Star Prabhass movie kick startsஇந்தியா முழுதும் திரும்பிப் பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”, “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது.

“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை தனது மேற்பார்வையில் வழங்குகிறார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது.

கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் திரில்லரான “ஜில்” படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – ராதா கிருஷ்ணா

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்ஷா

படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – ரவீந்த்ரா

வழங்குபவர்கள் – ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு அவர்களின் கோபி கிருஷ்ணா மூவிஸ்.

தயாரிப்பு – வம்சி, பிரமோத் மற்றும் UV Creations.

Much awaited Rebel Star Prabhass movie kick starts

நடிகராகி இயக்குனராக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் STUN சிவா

நடிகராகி இயக்குனராக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் STUN சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stun Siva shares his Cinema Industry experienceStun சிவா தமிழ் சினிமா உலகில் இந்தப்பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 80க்கும் மேலான படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். “சாம்பியன்” படம் அவரை ஒரு மிகப்பெரும் நடிகராக மாற்றியிருக்கிறது.

“வேட்டையாடு விளையாடு”, “கோலி சோடா” படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரனின் “சாம்பியன்” படத்தில் முழு வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஆனந்த விகடன் விருது வாங்கி இந்த ஆண்டின் சிறந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். தற்போது தன் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அவருடன் ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது

இனி எப்படி சண்டைப்பயிற்சி இயக்குநரக பணியாற்றுவீர்களா இல்லை நடிப்பு மட்டும் தானா ?

இல்லை இரண்டுமே செய்வேன். சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றுவேன். நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள் ?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமெ சென்னை தான். எனக்கு 15 வயசுலருந்தே படிச்சிட்டே வேலை செய்யனும்கிறது என்னோட ஆர்வம்
10 வது படிக்கும்போதே பைக் மெக்கானிக் கடையில வேலை பார்த்தேன். அங்க ஃபைட்டர்ஸ் எல்லாம் பைக் சரி பண்ண வருவாங்க. அவங்க பழக்கம் மூலமா ஸ்டண்ட் மேல ஆர்வம் வந்தது.

எங்க மாமா எம் ஜி நடராஜன் யூனியன்ல இருந்தாரு. அவர் மூலமா ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்தேன். 1989 ல இருந்து சினிமாவுல வேலை செய்திட்டு இருக்கேன். “அன்புக்கட்டளை” ராமராஜன் நடிச்ச படம் தான் முதல் படம் ராம்போ ராஜ்குமார் கூட வேலை பார்த்தேன்.

அப்பல்லாம் உதவியாளராக ஆகவே 5 வருஷம் ஆகும். நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கேன் ஸ்டண்ட் மாஸ்டரா 1997 தான் முதல் படம். விஜய் சாரோட லவ் டுடே படம் பண்ணினேன். Stun சிவாங்கிற பேர் அந்தப்படத்தில தான் வந்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு அப்புறம் அதிக அடைமொழி வச்சிக்கிறாங்க அது ஏன் ?

சூப்பர் சுப்பராயன் மாதிரி ஆரம்பகட்டத்தில இருந்தே அந்த மாதிரி வந்திட்டு இருந்தது. எனக்கு அடைமொழி வைக்கனும்கிற மாதிரி எண்னம் எல்லாம் இருந்தது இல்ல. கே எஸ் ரவிக்குமார் சாரோட முதல்படத்தில இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் தான் என்னோடபடத்தில பண்ணுறனு சொல்லி உனக்கு ஒரு பேர் இப்பவே வைக்கிறேன்னு சொல்லி stun சிவான்னு பேர் வச்சார்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க ?

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 80க்கும் அதிகமா படங்கள் பண்ணியிருக்கேன். “கண்ணுக்குள் நிலவு” படத்துக்கு மாநில விருது வாங்கியிருக்கேன். பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா கிடைக்கல ஆனா கூடிய சீக்கிரம் தேசியவிருது வாங்கிடனும்.

நடிப்புக்குள்ள எப்படி வந்தீங்க ?

சாதாரண ஃபைட்டரா இருக்கும்போதே நடிக்க எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஷீட்டிங்ல திடீர்னு ஏதாவது ஸீன்ல பத்து பேர் வாங்கனு கூப்பிடுவாங்க. எல்லாரும் ரெடியாக போனா, நான் உதவி இயக்குநர பார்த்து டயலாக் இருக்கானு கேட்டு அத மனப்பாடம் பண்ணி ரெடியா இருப்பேன். மத்தவங்க சொதப்பும்போது நான் பண்றேன்னு சொல்லி கேட்டு வாங்கி நடிப்பேன். அப்பல்லருந்தே நடிப்பு மேல அவ்வளவு ஆர்வம்.

பிதாமகன்ல நடிக்கும்போது விக்ரம் சார மிரட்டுற மாதிரி ஒரு ஸீன் அதுல ரிகர்சல் பண்ணும்போது பாலா நடிக்கிறியானு கேட்டாரு. என்ன அந்த ஸீன்ல நல்லா தெரியிற மாதிரி காட்டினார்.

அதுக்கப்புறம் கமல் சாரோட “வேட்டையாடு விளையாடு” படத்துல முதல் ஸீன் பண்ணினேன். பெரிய அறிமுகம் அது மூலமா கிடச்சுது. “கோலி சோடா” படத்தில விஜய் மில்டன் கூப்பிட்டு நடிக்க வச்சார். அத பார்த்து தான் சுசீந்திரன் சாம்பியன் படத்தில முழு வில்லனா அறிமுகப்படுத்தினார்.

இப்ப ஆனந்த விகடன்ல அதுக்கு விருது வாங்கிருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்ல இயக்குநர் படத்திலயும் எல்லா நடிகர்களோடவும் படம் பண்ணணும்.

ஸ்டண்ட் மாஸ்டரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க ?

ஜெயம் ரவியோட “பூமி” படம் அப்புறம் மகிழ் திருமேனி இயக்கத்துல உதயநிதி நடிக்கிற படம் ஒன்னு பண்றேன். தெலுங்கில் மோகன்பாபு சாரோட மகன் படம் ஒன்னு பண்றேன். வி.வி.விநாயக் சார் படம், பெல்லங்கொண்டா சுரேஷ் மகன் சாய் படம் பண்றேன்.

நடிப்புல என்னென்ன படம் ?

தெலுங்கில ரவிதேஜா நடிப்பில “கிராக்” படத்தில வில்லனா கமிட்டாகி நடிச்சிட்டு இருக்கேன்.

இப்ப இயக்குற படம் பற்றி ?

என் பையன் கெவின் ஹீரோவா நடிக்க “கராத்தேக்காரன்” படத்த இப்ப இயக்கிட்டு இருக்கேன். முழுக்க ஆக்‌ஷன் கலந்த படமா இருக்கும்.

உங்க காதல் கதை பற்றி சொல்லுங்களேன் ?

அது பெரிய கதை. அவங்க பேர் லேனி. அவங்க வியட்நாமிஸ். பைக் மெக்கானிக்கா வேலை பார்த்தப்போ சினிமால பைக் ஸீன் மட்டும் நடிக்க வைப்பாங்க. அந்த ஸீன் முடிஞ்சது அனுப்பிடுவாங்க. முறையா ஃபைட் கத்துக்கனும்னு நினைச்சேன்.

நண்பர் மூலமா ஸ்டன்ட் சொல்லித்தர தன் அப்படிங்கிறவர்கிட்ட சேர்ந்தேன் அவரோட பொண்ணு தான் லேனி காதலாகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கெவின் ஸ்டீபன் இரண்டு பசங்க இப்ப மூத்த பையன் ஹீரோவா நடிக்கிறார். இரண்டு பேருக்கும் ஸ்டண்ட் தெரியும் படங்கள்ல எனக்கு உதவியா இருக்காஙக.

அப்ப வியட்நாமிஸ் பேசுவீங்களா ?

இல்ல ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும். வீட்டில் லேனி நல்லா தமிழ் பேசுவாங்க. அவங்களோட தாத்தா இந்தியன் இங்க இருந்தவர் தான். இங்க பரம்பரையா இருந்தவங்க அவங்க. காரைக்குடில இருந்தவங்க.

ஸ்டண்ட் ஸீன்ஸ் ஒவ்வொரு மொழியிலும் வேறவேற மாதிரி எடுப்பீங்களா என்ன வித்தியாசம் ?

தமிழ், தெலுங்கு இரண்டுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு ஸ்கிரிப்ட் தான் ஃபைட் எப்படினு முடிவு பண்ணும். தெலுங்கு படத்தில அடிச்சா கதவ உடச்சட்டு வெளில பறந்து விழுவாங்க. தமிழ்ல அப்படி கிடையாது. திரைக்கதைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

ஸ்டண்ட் ஏன் தத்ரூபமா இருக்கிறதே இல்ல ?

அப்படி கிடையாது நான் பண்ணின எந்தப்படம் வேணாலும் எடுத்துக்கங்க ஒரிஜினலா இருக்கும். தெலுங்கு படமாவே இருந்தாலும் தத்ரூபமா இருக்குற மாதிரி தான் பண்ணுவேன். பிதா மகன் பார்த்தா தெரியும் அந்தப்படத்தில ஹீரோ வெட்டியான் அவன் அடிச்சா எப்படி இருக்குமோ, அது மாதிரி பண்ணிருப்பேன் ஆனா எல்லாப்படத்திலயும் அதப்பண்ண முடியாது. கதை என்ன கேட்குதோ

அதுக்குள்ள எப்படி பண்ணனுமோ அதத்தான் பண்ண முடியும்.

பிதாமகன் படத்தில விக்ரம் சங்கீதா கிட்ட துடப்பத்துல அடி வாங்குவாரே, அது நீங்க எடுத்துததுதானா?

ஆமா அத நான் தான் எடுத்தேன் அதுல ஒரிஜினல் துடப்பத்துல முகத்திலயே அடிப்பாங்க. அத எடுக்கும் போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஸீனவிட ஒரு நடிகனுக்கு முகத்தில தொடர்ந்து அடி விழும்போது என்ன ஆகும். ஆனா விக்ரம் சலிக்கவே இல்ல. பாலாவுக்கு எல்லாம் ஒரிஜனலா இருக்கணும்.

சண்டை எல்லாமே நேச்சுரலா இருக்கணும் யாரும் கொஞ்ச காலத்துக்கு அந்த மாதிரி முயற்சி கூட பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணி பண்ணின படம் தான் பிதாமகன்.

எந்த ஹீரோ நல்லா ஃபைட் பண்ணுவாரு ?

ஃபைட் பண்ணத்தெரியாத ஹீரோவ கூட ஃபைட் பண்ண வைக்கிறது தான் ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. என்ன பொறுத்தவரை எல்லா ஹீரோவும் நல்லாவே ஃபைட் பண்ணுவாங்க.

நாம அவங்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்து கொடுத்தோம்னா போதும். எல்லா ஹீரோவுக்கும் ஃபைட்னா பிடிக்கும் ஃபைட் பண்ண ஆர்வமா இருப்பாங்க.

இப்ப படங்கள்ல ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபர் பண்றாங்க இத பற்றி என்ன நினைக்கிறாங்க ?

நான் கூட நிறைய வெளிநாடுகள்ல போய் படம் பண்ணிருக்கேன். தமிழ் “பில்லா” தெலுங்குல பிரபாஸ் வச்சு எடுத்தப்ப நான் தான் வெளிநாட்ல நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பண்ணேன்.

தமிழ் பில்லா படத்த வாங்கினு ஒரு வெளிநாட்டுக்காரர் பண்ணி இருந்தார். அவர விட நான் நல்லாவே பண்ணிருந்தேன். அவங்கள பொறுத்தவர அவங்க கிட்ட நிறைய உபகரணங்கள் இருக்கும்.

அவங்க நல்லாவே ஃபைட் கோரியோகிராப் பண்ணுவாங்க. ஆனா அவங்க நம்ம ஹீரொவோட மாஸ் கதை புரிஞ்சு பண்ண மாட்டாங்க. அத நாம மட்டும் தான் பண்ண முடியும்.

தெரியாத ஹீரோவுக்கு ஃபைட் சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அடி வாங்கிற மாதிரி பண்ணும்போது நாம ஹீரோவாகலாம்னு தோணிருக்கா ?

அப்படி நினைச்சதில்ல. ஆரம்பகாலங்கள்ல எல்லாருக்கும் தோணலாம். ஆனா ஒரு ஃபைட் மாஸ்டர் வேலையே ஹீரோவ டிரெய்ன் பண்றதுதான். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்கும்போது அவர் கூட்டி வர்ற ஹீரோவ நம்ம எப்படி டிரெய்ன் பண்ணி மாஸா காட்டுறோம்கிறது தான் நம்ம வேலை.

ஃபைட் பண்ணும்போது அடிபட்டா அதற்கான சரியான நிவாரணங்கள் இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் இருக்கா ?

ஃபைட் பொறுத்தவரை இன்ஷ்யூரன்ஸ் கிடையாது. ஆனா எங்க யூனியன்ல அத பண்றோம். அப்புறம் அந்த பட தயாரிப்பாளர் இயக்குநர், ஹீரோக்கள் எல்லோருமே பார்த்துப்பாங்க. விஜய் சார் கூட ஒரு படத்தில ஒரு ஃபைட்டருக்கு 1 1/2 லட்சம் கொடுத்தாரு.
எங்க யூனியன்ல மூலமா அடிபடறவருக்கு தேவையான எல்லாமே பார்த்துக்கிறோம்.

அடுத்து என்ன திட்டங்கள் ?

என் பசங்க கெவின், ஸ்டீபன் ரெண்டு பேரும் ஸ்டண்ட் யூனியன் மெம்பர இருக்காங்க. அவங்க படம் பண்ணனும். இப்ப இவங்க என்னோட படங்கள்ல உதவியா இருக்காங்க. இவங்க இருக்கும்போது நிறைய யூத்தோட ஐடியா கிடைக்குது. “பூமி” படத்தில மூணு பேரும் சேர்ந்து புதுசா பண்ணிருக்கோம். ஸ்டீபன் யூத் ஒலிம்பிக் தேர்வில இந்தியா சார்பா அவர் மட்டும் தான் கராத்தேவுக்காக தேர்வாகியிருந்தார்.

நிறைய திறமை இருக்கு. இவங்களோட இணைஞ்சு இன்னும் ஆக்‌ஷன்ல நிறைய புதுமையா பண்ணனும்.

இவ்வாறு ஸ்டண் சிவா பேட்டியளித்தார்.

Stun Siva shares his Cinema Industry experience

நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியலில் அசுரன் கைதி விஸ்வாசம்

நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியலில் அசுரன் கைதி விஸ்வாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Norway Tamil Film Festival Tamilar Awards 2020NTFF 2020 தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான தெரிவில் 20 திரைப்படங்கள்

01. அசுரன் – வெற்றிமாறன்
02. ஒத்த செருப்பு 7 – ஆர்.பார்த்தீபன்
03. கோமாளி – பிரதீப் ரங்கநாதன்
04. நெடுநெல் வாடை – செல்வாகண்ணன்
05. கென்னடி கிளப் – சுசீந்திரன்
06. விஸ்வாசம் – சிவா
07. பேரன்பு – ராம்
08. ஹவுஸ் ஓனர் – லக்சுமி ராமகிருஷ்ணன்
09. தொரட்டி – P.மாரிமுத்து
10. நேர்கொண்ட பார்வை – H.வினோத்
11. ஆறடி – ஜே.சந்தோஷ் குமார்
12. A1 – ஜான்சன். கே
13. கைதி – லோகேஷ் கனகராஜ்
14. மிக மிக அவசரம் – சுரேஷ் காமாட்சி
15. காளிதாஸ் – சிறி செந்தில்
16. தடம் – மகிழ் திருமேனி
17. ஞானச் செருக்கு – தரணி ராசேந்திரன்
18. அழியாத கோலங்கள் 2 – M.R.பாரதி
19. இரண்டாம் உலகப்போரின் கடைசி “குண்டு” – அதியன் ஆதிரை
20. சில்லு கருப்பட்டி – ஹலிதா சமீம்

NTFF 2020 – List of Awardees – Tamilar Viruthu – Tamil Nadu
Best Film – Tamil Nadu
Film: Asuran
Producer: Kalaippuli S.Thanu
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Director – Tamil Nadu
Director: Vetri Maaran
Film: Asuran
11th Norway Tamil Film Festival
03.05.2020
Best Male Actor – Tamil Nadu
Karthi
Film: Kaithi
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Female Actor – Tamil Nadu
Sri Priyanka
Film: Miga Miga Avasaram
11th Norway Tamil Film Festival
03.05.2020
Best Child Artist – Tamil Nadu
Sadhana
Film: Peranbu
11th Norway Tamil Film Festival
03.05.2020
Best Music Diretor – Tamil Nadu
D.Imman
Film: Viswasam, Namma Veetuppillai
11th Norway Tamil Film Festival
03.05.2020
Best Production – Tamil Nadu
P.L.Thenappan
Film: Peranbu
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Lyricist – Tamil Nadu
Thamarai
Song: Kannana Kanne – Maruvaarthai
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Antagonist (Villain) – Tamil Nadu
Arjun Das
Film: Kaithi
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Supporting Actor – Tamil Nadu
Arjun
Film: Hero
11th Norway Tamil Film Festival
03.05.2020
Best Supporting Actress – Tamil Nadu
Aiswarya Rajesh
Film: Namma Veetup Pillai
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Cinemathography – Tamil Nadu
Kishore Kumar
Film: Irandam Ulagaporin Kadaisi Gundu
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Screen Play – Tamil Nadu
Magizh Thirumeni
Film: Thadam
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Playback Singer Male – Tamil Nadu
Sid Sriram
Song: Kannana Kanne – Viswasam
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Playback Singer Female – Tamil Nadu
Sainthavi
Song: Ellu Vaya Pookalaiye – Asuran
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Dance Choreography– Tamil Nadu
Shobi – Lalitha Shobi
Film: Verithanam for Bigil
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Newcomer – Tamil Nadu
Dhruv Vikram
Film: Athithiya Varma
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Editor – Tamil Nadu
Philomin Raj
Film: Kaithi
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Stunt Choreography – Tamil Nadu
Peter Hein
Film:Asuran
11th Norway Tamil Film Festival
03.05.2020

Best Social Awareness Award – Tamil Nadu
Director : H.Vinoth
Film: Nerkonda Paarvai
11th Norway Tamil Film Festival
03.05.2020

Director Balumahendra Award – Tamil Nadu
Director Suresh Kaamatchi
Film: Miga Miga Avasaram
11th Norway Tamil Film Festival
03.05.2020
K.S.Balachandran Award – Tamil Nadu
Munishkanth
Film: Irandam UlagapPorin Kadaisi Gundu
11th Norway Tamil Film Festival
03.05.2020

NTFF Special Jury Award – Tamil Nadu
Sathiyakala
Film: Thoratti
11th Norway Tamil Film Festival
03.05.2020

Kalaichigaram Award – Tamil Nadu
Actor Surya
Actor, Producer, Agaram
11th Norway Tamil Film Festival
03.05.2020
Lifetime Achivement Award – Tamil Nadu
S.P.Balasubramaniyam
Singer, Actor, Producer
11th Norway Tamil Film Festival
03.05.2020

Vaseeharan Sivalingam
Festival Director – 11th NTFF

‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தில் அனிமேஷன் எம்ஜிஆர்

‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தில் அனிமேஷன் எம்ஜிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Now Vanthiya Thevan Ponniyin Selvan with an animated MGRகல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது.

‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது.

நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.

பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம்.

இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது.

புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு.

Now Vanthiya Thevan Ponniyin Selvan with an animated MGR

ஹீரோஸ் கூட ஜோடி போட நிறைய நடிகைகள் இருக்காங்க. – அமலா பால்

ஹீரோஸ் கூட ஜோடி போட நிறைய நடிகைகள் இருக்காங்க. – அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There are many heroines to do duet with heroes says Amala Paulஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நடிகை அமலாபால் பேசும்போது….

‘இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம்.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன்.

அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.

இயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள்.

தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’ என்றார்.

There are many heroines to do duet with heroes says Amala Paul

BREAKING சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

BREAKING சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Maanadu cast and crew news updatesசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து கால்ஷீட் சொதப்பல் காரணமாக சிம்புவை நீக்குவதாக அறிவித்திருந்தார் சுரேஷ் காமாட்சி.

ஆன்மிகத்தை அடுத்து பாக்ஸிங்கில் இறங்கிய STR

ஆனால் சில கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீண்டும் சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளார் என அறிவித்தனர்.

இந்த நிலையில் சிம்பு உடன் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய விவரங்களை தற்போது அறிவித்து வருகின்றனர்.
அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையைமக்கிறார்.

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்ஏ. சந்திரசேகர் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

Simbus Maanadu cast and crew news updates

More Articles
Follows