தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது அவர்களின் வரிசையில் இணையவிருக்கிறார் கேரளத்து நடிகை மிர்துளா முரளி.
இவர் சூப்பர் ஹிட்டான ‘ஐயாள் நானல்ல’ மற்றும் ‘ஷிகாமணி’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தற்போது திக்மான்ஷு துளியா இயக்கவுள்ள ‘ராஃக் தேஷ்’ படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.
ஹிந்தி சினிமாவில் பலத்தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்ற ‘பான் சிங் டோமர்’ மற்றும் ‘சாஹேப், பீவி ஆர் கேங்ஸ்டர்’ படங்களை இயக்கியவர் திக்மான்ஷு என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பிரபல ஹிந்தி நடிகை சோனம் கபூரின் சகோதரர் மோஹித் மார்வா நாயகனாக நடிக்கிறார்.
இந்திய ராணுவ விசாரணையை மையமாக கொண்டு இப்படம் உருவாகவிருக்கிறது.
இப்படத்திற்கு தற்போது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் ஆரம்பமாகிறது.
