விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

body guard dasபொது நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்து கொண்டால் அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் BODY GUARDS பாடிகாட்ஸ் தான்.

இந்த பாதுகாவலர்களில் ஒருவர் தாஸ் சேட்டன்.

கேரளாவை சேர்ந்த இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, மோகன் லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நம்பிக்கையானவர். அவர்களின் பாதுகாப்புக்கு இவர் மிகவும் முக்கியமானவர்

அண்மையில் மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தாஸ்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாஸ் சேட்டனின் மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு சேவையில் ஆஸ்திரேலியாவை அசத்திய இந்திய நர்ஸ்..; ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

கொரோனா தடுப்பு சேவையில் ஆஸ்திரேலியாவை அசத்திய இந்திய நர்ஸ்..; ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gilghristஒருவர் கொரோனாவினால் மரணம் என்றால் கூட அவரது உறவினர்களே பிணத்தை வாங்க மறுக்கின்றனர்.

கொரோனா பாதித்தவர் அருகில் கூட எவரும் செல்ல முடியாத நிலையும் உள்ளது.

ஆனால் தன் சேவையால் ஆஸ்திரேலியா நாட்டை அசர வைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த செவிலியர் ஷேரன் வர்கீஸ்.

இவர் கேரளாவின், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த தம்பதி லல்லிசென் மல்லிசேரி-ஆன்சி பிலிப்பின் மகள் ஷேரன் வர்கீஸ்.

இந்த மாணவி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கச் சென்றார்.

2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்த பின் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த அவர், அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து சேவை செய்து பணியாற்ற விரும்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.

அப்போது முதியோர் இல்லத்தில் சேவை செய்து வந்த ஷேரன், கவனத்துடன் செயல்பட்டார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாத்தார்.

ஷேரன் வர்கீஸின் சேவையை ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாக பாராட்டி உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் பாராட்டியுள்ளார்.

”ஷேரன் அவர்களே… இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதானவர்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது.

உங்களின் பெற்றோருக்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள்” என பாராட்டி உள்ளார்.

நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika singhகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பாதிப்பால் உலகளவில் இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறி விட்டது.

இந்த நிலையில் பிரபல ஹிந்தி டிவி நடிகை தீபிகா சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

தனது அம்மாவிற்கு கொரோனா வைரஸ் ்தொற்றியுள்ளது.

தங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் 45 பேர் ரிஸ்க்கில் உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா பொதுமுடக்கத்தால் கிட்டத்தட்ட 3 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையில் AVM ராஜேஸ்வரி உள்ளிட்ட ஓரிரு தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஆன்லைனில் OTTல் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்… பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படங்களான ‘அண்டாவக் காணோம்’, ‘வா டீல்’, ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் நேரடியாக OTT ஆன்லைன் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவுள்ள 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு தேவை” என குறிப்பிட்டுள்ளார்.

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress ramya krishnanசென்னை ECR முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனை செய்துக் கொண்டிருந்தனர் கானத்தூர் போலீஸார்.

அப்போது அங்கு வந்த TN07 CQ 0099 என்ற இன்னோவா காரை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோரும் காரில் இருந்தனர்.

படையப்பா படத்தில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் ராஜமாதா உள்ளிட்ட கேரக்டர்கள் ரம்யா கிருஷ்ணனின் பெயரை என்றும் சொல்லும்.

இந்தச்சோதனையில் அந்தக் காரில் ஏராளமான மதுப்பாட்டில்கள் இருந்தன.

அதில் 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

உடனே போலீஸார் அந்த டிரைவர் செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

கைதான சிறிது நேரத்தில் டிரைவரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றார்.

மதுபாட்டில்களை அவர் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி கடத்தி வந்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai policeதமிழகத்தின் தலை நகரம் சென்னை.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை என்ற பெயரும் இதற்கு உண்டு.

ஆனால் தற்போது சென்னையா? வேண்டவே வேண்டாம் என மக்கள் ஓடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காரணம் கொலைக்கார கொரோனா தான்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம்.

சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வேலூர் வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனை மற்றும் கிருமிநாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றன.

இ-பாஸ் இல்லாமல் மக்கள் வெளியேற துவங்கிவிட்டனர்.

வேலூர் வரும் வாகன விவரங்களை பதிவு செய்துகொண்ட பிறகே அந்த பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.

More Articles
Follows