போட்டியின்றி நடிகர் சங்கத்தின் புதிய தலைவராகிறார் மோகன்லால்

Mohanlal to take charge as president of AMMAமலையாள நடிகர், நடிகைகள் சங்கம் கேரளாவில் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதன் தலைவராக மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் பதவி வகித்து வருகிறார்.

மேலும் இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 17 வருடங்களாக இவர் தலைவர் பதவியில் இருக்கிறார்.

இவரின் உடனடி நடவடிக்கைகள் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருவதால் இந்த பதவியில் இவர் இத்தனை வருடங்களாக இருந்து வருகிறார்.

தற்போது புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லையாம்.

எனவே விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்ப வில்லை எனவும் இன்னசென்ட் அறிவித்துள்ளார்.

எனவே மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், அல்லது மம்மூட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற மலையாள திரையுலகினர் விரும்புகின்றனர்.

இதனையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை இவருக்கு எதிராக யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதால் இவரே நடிகர் சங்கத் தலைவராகவுள்ளார்.

விரைவில் கூடவுள்ள பொதுக்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

Mohanlal to take charge as president of AMMA

Overall Rating : Not available

Latest Post