கபாலியுடன் தன் ரசிகர்களையும் கவனிக்கும் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்புக்கு ஈடாக மோகன்லாலின் புலிமுருகன் படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையில் கபாலி படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை தன் ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் கைப்பற்றி இருக்கிறார் மோகன்லால்.

இப்படத்தை 200க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

எனவே புலிமுருகனை ரிலீசை தள்ளி வைத்துவிட்டார். இதனால் இவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இவரது படங்கள் ‘ஜனதா கேரேஜ்’, ‘மனமந்தா’ மற்றும் ‘ஒப்பம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

எனவே, கபாலி வெளியாகும் திரையரங்குகளில் தன் படங்களின் டீசர்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் சுசீந்திரன்-விஷ்ணு கூட்டணியில் ஸ்ரீதிவ்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்புடன் கூடிய குடும்ப பாங்கான வேடங்களுக்கு ஏற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

இளம் ஹீரோக்களின் மெயின் சாய்ஸ் ஆக இருக்கும் இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார் விஷ்ணு.

இவர்கள் இருவரும் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

மாபெரும் கூட்டணி அமைக்கும் அமிதாப்-அஜித்-அட்லி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கிவிட்டதால், தன் அடுத்த படத்திலும் டாப் ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அட்லி.

எனவே, அஜித்தின் தல 58 படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன் ஏபிசிஎல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே அஜித், விக்ரம், மகேஸ்வரி இணைந்த உல்லாசம் படத்தை அமிதாப் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை வரவேற்க ரசிகர்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

ரஜினி – கமலுடன் இணையும் இயக்குனர் மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மறுநாள் (ஜீலை 14ஆம் 2016) லண்டன்-இந்தியா திரைப்பட விழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கியுள்ள குற்றமே தண்டனை படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த ரஜினிகாந்த் பற்றிய “For the Love of a Man” (பாஃர் தி லவ் ஆஃப் ஏ மேன்) என்ற ஆவனப்படமும் திரையிடப்படவுள்ளதாம்.

இப்படத்தை ரிங்கு கல்சி இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் ஜீலை 17ஆம் தேதி திரையிடப்படுகிறது.

மேலும் இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் உரையாட இருக்கிறார்.

கமல்-சூர்யா நாயகியுடன் டூயட் பாடும் விவேக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்படும் காமெடி நடிகர் விவேக் தற்போது தனி நாயகனாக நடித்து வருகிறார்.

இடையில் மனிதன், காஷ்மோரா உள்ளிட்ட படங்களில் காமெடியும் செய்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக வேஷம் கட்டவிருக்கிறார்.

துப்பறியும் சுந்தரம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் கமாலினி முகர்ஜியுடன் டூயட் பாட இருக்கிறார்.

கமலுடன் வேட்டையாடு விளையாடு, எஸ்.ஜே.சூர்யாவுடன் இறைவி ஆகிய படங்களில் நடித்தவர் கமாலினி முகர்ஜி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்..

கபாலிக்கு மட்டுமில்லை.. உலக சினிமாவுக்கே இதான் பர்ஸ்ட் டைம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்திற்கு சென்சாரில் யூ சர்டிபிகேட் கிடைத்தது முதல், படம் ரிலீஸ் பற்றிய தகவல்கள் நெருப்பு வேகத்தில் பறக்கிறது.

ஏர் ஆசியா விமானம், ஃபைவ் ஸ்டார் சாக்லேட், ஏர்டெல் ஆகியவை இப்படத்தின் புரமோஷன் பணிகளில் புதுமைகள் செய்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு மகுடம் சேர்க்கும் விதமாக மற்றொரு புரமோஷனும் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் பெயரில் வருகிற ஜீலை 31ஆம் தேதி மராத்தான் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

இதை மலேசியாவில் உள்ள SEPANG INTERNATIONAL CIRCUIT என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியான இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.

உலகிலேயே ஒரு படத்தின் பெயரில் மராத்தான் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows