மோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை

Mohan lal and pranav mohan lalகேரளாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் ஆதி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் ஒடியன் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஆதி ஆகிய 2 படங்களின் பூஜையும் ஒரே நாளில் இன்று பூஜை போடப்பட்டது.
கேரளாவில் வாழ்ந்த ஒடியன் எனும் மலைவாழ் இனத்தின் கடைசி மனிதராக ஒடியன் மாணிக்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம்.

இப்படத்தை புதுமுகம் ஸ்ரீகுமார் மேனன் இயக்க, முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் எவரும் எதிர்பாராத வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் எடுக்கப்பட உள்ளதாம்.

ஆதி என்ற படத்தை த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…
...Read More

Latest Post