தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தினம் தினம் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அருகே உள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார்.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியை பறக்க விட்டுள்ளனர்.
மேலும் ஆகாயத்திலும் கருப்பு பாலுன்களை பறக்கவிட்டு அதில் ஓடிபோமோடி #GOBACKMODI என்று எழுதி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,
ஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ,
தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.
பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.
தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை.
நினைவுறுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள்.
இன்றைய நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
MNM President Kamal appeal to Prime Minister Modi
மேலும் கடிதம் மூலமும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..