அடிமை அரசே.. நியாயம் கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமோ..? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 12ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க, 20 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு கட்டங்களாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மொத்தம் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான இந்த அறிப்புகளில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்ட அறிவிப்பில் ரூ.5,94,550 கோடி,
2ம் கட்ட அறிவிப்பில் ரூ.3,10,000 கோடி,
3ம் கட்ட அறிவிப்பில் ரூ.1,50,000 கோடி,
4 மற்றும் 5ம் கட்ட அறிவிப்பில் ரூ.48,100 கோடி மதிப்பிலான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார்.

மேலும், பிரதமர் முன்கூட்டி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.1,92,800 கோடியும், ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.8,01,603 கோடியும் என மொத்தமாக ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல் கட்சி தலைருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது…

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.

MNM Party Leader Kamalhassan slams TN Govt as Slave Govt

மீண்டும் ஆரஞ்சு மண்டலமான காரைக்கால்.; துபாய் ரிட்டர்ன் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துபாய் நாட்டிலிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

துபாயிலிருந்து கடந்த 13-ம் தேதி காரைக்கால் வந்துள்ள 26 வயதுப் பெண்ணுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய சளி, உமிழ் நீர் மாதிரிகள் கடந்த 14-ம் தேதி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது கணவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்

அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

“இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில் முதல் முறையாக கடந்த மே 10-ம் தேதி சுரக்குடி விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை பார்த்தோம்.

பின்னர் மே 14ல் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் என்பதால் காரைக்கால் பச்சை மண்டலமானது.

தற்போது இந்த கொரோனா பாதிப்பு கர்ப்பிணி பெண்ணால் மீண்டும் ஆரஞ்சு மண்டலமாகியுள்ளது காரைக்கால்.

Again Karaikal became Corona Orange zone by Pregnant lady

பொது முடக்கம் மே 31 வரை நீடிப்பு.; தளர்வுகளும் நிபந்தனைகளும்.. முழு விபரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து 3வது பொது முடக்கம் இன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில் பொது முடக்கத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பேரில் இந்த பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

தளர்வுகள், கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு;

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

* பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* பொது மக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. (மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்).

* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா

* மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.

* தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

* இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.

புதிய தளர்வுகள்

* கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

* அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN E-Pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

* மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN E-Pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

* அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், Innova போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN E-Pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

* தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் – தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக (Maintenance) மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.

* 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

* தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN E-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

Tamilnadu Corona Lock down extends to 31st May Here is relaxation list

பஞ்சாப் மாநிலத்திலும் பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை அடுத்து அருண் விஜய்யுடன் இணையும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைக்கோ படத்தை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார் மிஷ்கின்.

ஆனால் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிலிருந்து மிஷ்கின் விலகினார்.

இதனையடுத்து சிம்பு நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்குவார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் அருண்விஜய்யின் 32 படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அருண் விஜய்யின் 31வது படமான் ஜிந்தாபாத் படத்தை குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்கள் அருண் விஜய் கைவசம் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

விஜய்யின் ஹாட்ரிக் தீபாவளி; 4வது முறையாக காத்திருக்கும் ‘மாஸ்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.

2018 தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது.

2019 தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியானது.

இதன் மூலம் தொடர்ந்து 3 ஆண்டு தீபாவளிக்கும் விஜய் படம் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.

தற்போது 4வது முறையாக தீபாவளியை இந்தாண்டும் 2020 தீபாவளியை விஜய் குறி வைப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தினம் அதிகரித்து வருவதால் சூட்டிங் எப்போது தொடங்கப்படும் என எவருக்கும் தெரியவில்லை.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடமான தியேட்டர்கள் திறக்கப்படுவதும் தெரியவில்லை. இன்னும் 2 மாதங்களில் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள். இதனால் வசூல் பாதிக்கும்.

கொரோனா பாதிப்பு உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளிலும் திரையிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

எனவே நிலைமை சீரான பிறகு தீபாவளிக்கு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் எப்போது வந்தாலும் சாதனை படைப்பார் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்க்கது.

அடுத்த மாதம் ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் பட டிரைலர் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

தல அஜித்தை வியக்க வைத்த தளபதி விஜய்; சுசித்ரா சொன்ன சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் நடன திறமையை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அபார நடன திறமை கொண்டவர் அவர்.

அதற்குகேற்ப அவரின் பட பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்துவிடும். இதை பல நடிகர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் விஜய்யின் சூப்பர் ஹிட் சாங்ஸ் பற்றி பாடகி சுசித்ராவிடம் கூறியிருக்கிறாராம்.

சுசித்ராவின் அண்மை பேட்டியில்… “விஜய்க்கு மட்டும் எப்படி சூப்பர் பாடல்கள் அமைகிறது. வேட்டைக்காரன் படத்தில் வரும் சின்னதாமரை பாடல் தனக்கு அதிகம் பிடிக்கும் என அஜித்தே கூறியிருந்தாராம்.

அந்த பாடலை பாடியது பாடகி சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows