சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலம் தமிழ்நாடு.. ஆனால்.. – கமல்ஹாசன்

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலம் தமிழ்நாடு.. ஆனால்.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன்.

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையும் உள்ளது.

‘நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தைவிட அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவாக இருக்கிறதே…’ என்று உயர் நீதிமன்றமே வேதனையுடன் குறிப்பிட்டது. அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியும், மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2017-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மறுஆய்வு நடைபெறவில்லை. ஊதிய உயர்வு கிடைக்காததால் 2018-ல் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்து அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அரசாணை எண் 293-ன் படி மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதியப் படிகளை மட்டுமே வழங்கியிருக்கிறது.

இதனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை. ஊதியப் படிகளும் குறிப்பிட்ட துறைகளுக்கான மருத்துவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

பல மருத்துவ சங்கங்கள் ஊதியப் படியை மறுத்து ஊதிய உயர்வையே வலியுறுத்தியுள்ளன.

தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ‘காலம் சார்ந்த ஊதிய உயர்வை’ 5, 9, 11, 12 ஆண்டுகள் என மாற்றி கொடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டின் அரசாணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக மன்றாடி வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியப் படிகள் வழங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

உங்கள் நான்,
கமல்ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan talks about doctors hike in TN

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்.; ரஜினி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த மீனா

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்.; ரஜினி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றியும் இசையமைப்பாளராக இமானும் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு, ரஜினியின் உடல் நிலை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் சூட்டிங் தடைப்பட்டது. அந்த சமயத்தில் தான் (2020 டிசம்பர் 29ல்) தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்)

ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் கொரோனா ஊரடங்கிலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு ஹைதராபாத் சூட்டிங்கில் நடித்தார் ரஜினி.

பயோ-பபுள் முறையில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இப்பட சூட்டிங்கை முடித்துவிட்டு கடந்த மே 12 தேதி சென்னை திரும்பினார் ரஜினி.

இந்த படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை மீனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அண்ணாத்த’ FIRST LOOK SOON என பதிவிட்டுள்ளார்.

ஆனால் இது ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டர் எனவும் பதிவிட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்திய அரசின் அனுமதி பெற்று சிறப்பு விமானத்தில் சென்று தற்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக தங்கியுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Annaatthe exclusive update by Actress meena

IMG_20210701_180524 (1)

சிம்பு படத்திற்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்

சிம்பு படத்திற்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக ‘மஹா’ உருவாகியுள்ளது.

இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்க இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

ஹன்சிகாவை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் மீது சிம்பு காட்டிய ஆர்வத்தாலும் அவர் காட்டிய அக்கறையாலும் சிம்புக்கான காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

மேலும் சிம்பு – ஹன்சிகா காதல் முறிவுக்கு பிறகு (வாலு படத்திற்கு பிறகு) இவர்கள் இணைந்துள்ளதால் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே படம் ரிலீசுக்கு தயாரானாலும் கோர்ட் வழக்கில் படம் சிக்கியது.

இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜமீல், தனது கதையை வைத்து, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகவும், எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனையடுத்து இயக்குனர் சங்கம் இப்படம் தொடர்பான பஞ்சாயத்தில் தலையிட சுமூக தீர்வு ஏற்பட்டு ஓடிடியில் வெளியிட முடிவாகியுள்ளது.

இந்த நிலையில் மஹா திரைப்படத்தின் டீசரை ஜுலை மாதம் 2 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan to release Mahaa teaser

VALIMAI Update Worthy Waiting.: அஜித் ரசிகர்களை அசர வைக்க போகும் படக்குழு

VALIMAI Update Worthy Waiting.: அஜித் ரசிகர்களை அசர வைக்க போகும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai1அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்க ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குடும்ப பாசம் மற்றும் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

கடந்த 2 வருடத்தில் இந்த படத்தின் அப்டேட் கேட்காத அஜித் ரசிகர்களே இல்லை எனலாம்.

இதனிடையில் இசையமைப்பாளர் யுவன் வலிமை அப்டேட் கொடுத்தார்.

ஓபனிங் சாங் கும்தா… பாடல் என்றும் அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்றும் இருப்பதாக தெரிவித்தார்.

இன்ட்ரோ பாடலுக்காக ஒடிஷா இசைக் கலைஞர்களை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை மாத மத்தியில் வலிமை பர்ஸ்ட் லுக் + மோசன் போஸ்டர் + ரிலீஸ் தேதி ஆகிய மூன்றையும் ஒன்றாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இத்தனை நாள் காத்திருப்புக்கு இது சரியான விருந்துதானே…

Valimai first look will be released soon

அமெரிக்காவில் ‘அண்ணாத்த’.: கஸ்தூரியிடம் யாரும் பேசவே இல்லை என ரஜினி பிஆர்ஓ விளக்கம்

அமெரிக்காவில் ‘அண்ணாத்த’.: கஸ்தூரியிடம் யாரும் பேசவே இல்லை என ரஜினி பிஆர்ஓ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தன் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்வது வழக்கம்.

கடந்த 16 மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா செல்லவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தன் மனைவி லதாவுடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்து இருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எப்படி சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம்? என கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

கஸ்தூரி கூறியிருந்ததாவது:

“இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்?

அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.

எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள்.

மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள்.

சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல”.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஆனது.

இந்த நிலையில் நேற்று கஸ்தூரி தன் ட்விட்டரில் (ரஜினி தரப்பில்) அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

“அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

மேற்கண்ட தகவல்களை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்போது ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தன் ட்விட்டரில்…

தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்
@rajinikanth
@soundaryaarajni
@OfficialLathaRK
@ash_r_dhanush
#Thalaivar #Rajinikanth

இவ்வாறு கஸ்தூரிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் மீண்டும் கஸ்தூரி வேறு ஒரு காரணம் (விளக்கம்) அளித்துள்ளார்.

அதில்… “என்னை அழைத்து பேசியது கங்கை அமரன் அவர்கள். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை.”

இவ்வாறு அந்தர் பல்டி அடித்துள்ளார் கஸ்தூரி.

என்னமோ ரஜினி தரப்பில் விளக்கம் சொன்னது போல பில்டப் கொடுத்தீர்களே? இப்போ என்ன ஆச்சு? என ரஜினி ரசிகர்கள் கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Superstar Rajinikanth officially denies contacting actress Kasthuri

ஜூலை 15 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.; புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

ஜூலை 15 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.; புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lockdown in puducherryபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பரவலைத் தடுக்க போடப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (ஜூன்-30) முடிவடைகிறது.

இந்த நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

*கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும் , காய்கறி மற்றும் பழ கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். (கொரோனா பரிசோதனை மற்றும் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி உறுதி செய்யப்பட வேண்டும்).

* அனைத்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு தடை.

* பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த வழிகாட்டுதல்களின்படி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

* ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் மற்றும் முழுமையான உணவகங்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பார் வசதிகள் இரவு 9 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சில்லறை மதுபானக் கடைகள் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு 100 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

* பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இருக்காது.

*சரக்கு போக்குவரத்து எல்லா நேரங்களிலும் அனுமதிக்கப்படும் மற்றும் தனியார் / அரசு பொது போக்குவரத்து அனைத்து நாட்களிலும் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* இரவு 9 மணி வரை அனைத்து மத வழிபாட்டுதலங்களும் பொது தரிசனத்திற்காக திறக்கப்படும். 100 பேர் திருமணத்தில் பங்கேற்கலாம், இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம்.

Pondy government extends lock down till july 15th

More Articles
Follows