மநீம கட்சி பொருளாளர் & பார்ட்னர் வீட்டில் ரெய்டு..; கமல் கருத்து என்ன.?

மநீம கட்சி பொருளாளர் & பார்ட்னர் வீட்டில் ரெய்டு..; கமல் கருத்து என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் கட்சி பொருளாளர் சந்திரசேகரனுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் வீடுகளில், மூன்று நாட்களாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கணக்கில் காட்டப்படாத, 80 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அத்துடன் அதற்கான ஆவணங்கள் மற்றும் 11.5 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து மநீம தலைவர் கூறியதாவது…

ஒரு கம்பெனி ஆரம்பித்தவுடன் இவ்வளவு கொள்ளை லாபம் உடனே அடைய முடியாது.

அப்படி இருந்தால் ஒரு அமைச்சர், அவர் கம்பெனியில், 500 மடங்கு லாபம் வந்துவிட்டது என கணக்கு காண்பித்தது போல் இருக்கும்

நானும், 40 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி வருகிறேன்.

10 சதவீதம் லாபம் வந்தாலே பெரியது.

இந்த ரெய்டுக்குக் காரணம், தேர்தல் நேர வியாதியாக கூட இருக்கும்.”

என்று கூறினார் கமல்.

கமல்ஹாசனும் சந்திரசேகரும் இணைந்து, ‘ராஜ்கமல் பிரன்டையர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஒரு கம்பெனியை சமீபத்தில் தான் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MNM leader Kamal Haasan slams the raid on party functionary, says All parties except BJP targeted

JUST IN தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று

JUST IN தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது மற்றும்தேமுதிக.

இந்த கட்சி 60 இடங்களில் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMDK LK Sudheesh tests positive for Corona

ஓடிடி தளத்திற்காக இறங்கி வந்த இயக்குனர்..; பரிதாப நிலையில் பாலா..?!

ஓடிடி தளத்திற்காக இறங்கி வந்த இயக்குனர்..; பரிதாப நிலையில் பாலா..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் விக்ரம் நடித்த ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் பாலா.

நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன்… என வித்தியாசமான படைப்புகளை தந்து சிறந்த நடிகர்களை அடையாளம் காட்டினார்.

ஆனால் அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் தோல்வியை சந்திக்கவே பாலா துவண்டு போனார்.

அதுவரை ரீமேக் படங்களை இயக்காதவர் விக்ரமுக்காக தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

ஆனால் இந்த படம் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தும் ரிலீஸ் செய்யவில்லை.

அதன் பிறகு பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் பாலா.

இதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை முடிந்துவிட்டதாகவும். விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.

Director Bala’s next film for OTT ?

சாம் இசையில் விதார்த் நடிக்கும் 25வது படம்..; நாயகி யார் தெரியுமா..?

சாம் இசையில் விதார்த் நடிக்கும் 25வது படம்..; நாயகி யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAM csசீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் அவரது 25வது படம் திரில்லர் படமாக உருவாகிவருகிறது.

விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட களத்தில், மிகப்புதுமையான முறையில் உருவாகிறது. மிக அழுத்தமான கதை கொண்ட இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தில் பாடல்கள் மாண்டேஜாக மட்டுமே வருகிறது.

மேலும் படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதால், படத்திற்கு மிக சரியான இசையமைப்பாளரை படக்குழு தேடி வந்தது.

தற்போது இறுதியாக, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலகளவில் பின்னணி இசையில் பெரும் புகழ் பெற்று, கலக்கி வரும் இளம் திறமையாளர் சாம் CS இப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் சீனிவாசனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட திரைக்கதைக்கு சாம் CS இசை மிகப்பொருத்தமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருக்குமென படக்குழு கருதுகிறது.

இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் ( ஒண்டிகட்ட படப்புகழ் ), பாவ்லின் ஜெஷிகா ( வாய்தா படப்புகழ் ) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெயச்சந்திரன் BFA கலை இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Benchmark Films சார்பில் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.

Sam CS gets on board to compose music for Vidharths 25th film

வெறித்தனமான போஸ்டருடன் ‘கர்ணன்’ டீசர் அப்டேட்..; தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி

வெறித்தனமான போஸ்டருடன் ‘கர்ணன்’ டீசர் அப்டேட்..; தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

இதில் தனுஷுடன் ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

அதில் ஒரு பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க…’ என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவியதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்தன.

தற்போது ‘பண்டாரத்தி புராணம்…’ என்ற பாடலில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் உள்ளதாக புகாரும் எழுந்துள்ளது.

இந்த பாடல் தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஐகோர்ட்.

இந்த நிலையில் இப்பட டீசர் மார்ச் 23ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான போஸ்டரில் (கைது செய்யப்பட்ட) கை விலங்குடன் தனுஷ் அமர்ந்து இருக்கிறார்.

இந்த போஸ்டர் வெறித்தனமாக உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Karnan teaser release date is here

என்னால தான் டிக் டாக்-க்கு தடை போட்டாங்க..; ஆமை கறியை மிஞ்சும் சீமானின் அடுத்த காமெடி

என்னால தான் டிக் டாக்-க்கு தடை போட்டாங்க..; ஆமை கறியை மிஞ்சும் சீமானின் அடுத்த காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி நேற்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்பு மனு நிறைவடைந்தது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது.

இந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரின் சமீபத்திய பேட்டியில்..

“டிக்டாக் செயலியில் தன்னை மட்டும் 7.5 கோடி இளைஞர்கள் பின்பற்றினர்.

இதனாலேயே பல்வேறு காரணங்களைக் கூறி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

பகிரியில் (வாட்ஸ் அப்) செயலியில் தற்போது ஒரு செய்தியை ஒரு நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும்.

தனது வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக சீமான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

*இதை படித்த பின்னர் சீமான் மீது நீங்க கடுப்பானால் நாங்க பொறுப்பல்ல..*

Seeman talks about Tik Tok ban ?

More Articles
Follows