ஆக்சிஜனுக்கு ஆயிரம் வழியிருக்கு..; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கமல் எதிர்ப்பு

ஆக்சிஜனுக்கு ஆயிரம் வழியிருக்கு..; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கமல் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan (1)ஸ்டெர்லைட் ஆலை திறக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?!

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் நேரிடுகிறது. உயிர்காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை.

இதற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. காரணம் எளிதானது.

சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே ஆகவேண்டும் என்று போராட்ட களத்தில் நின்ற கட்சிகள் இவை.

ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடையது தமிழகம். தற்போதைய தேவை நாள் ஒன்று 240 டன் ஆக்சிஜன். 1200 டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறனும் வசதியும் தமிழகத்திற்கு உள்ளது.

எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். குஜராத்தில் பனாஸ் பால் கூட்டுறவுச் சங்கம் வெறும் 72 மணி நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவி உற்பத்தியைத் துவங்கியுள்ளது ஓர் எளிய உதாரணம்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உடைய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் தொழிற்துறையினர்.

இந்தியாவின் பல மாநிலங்கள் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை எட்டியுள்ளன. உண்மையான பிரச்சனை தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜனை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கான வினியோக வசதிகள் இல்லை என்பதே என்கிறார்கள் வல்லுனர்கள்.

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்கக் கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையைத் திறக்கலாம் எனும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

லாக்டவுணில் லட்சக்கணக்கானவர்கள் பட்டினி கிடந்த போதும், சாலைகளில் நடந்தே சென்று அடிபட்டுச் செத்தபோதும் கூட கூட்டப்படாத அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டெர்லைட்டுக்காக மட்டும் கூடுகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த 13 பேரின் குடும்பமும் சுற்றமும் இவர்களை மன்னிக்காது. ஓர் அவசர கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதா?

திமுகவின் மகத்தான ஆட்சியால் தென்மாவட்டங்களில் நாளொன்றுக்கு 16 மணி நேர மின்வெட்டு நிலவியது. தென் மாவட்ட மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாயினர். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தது. தென்மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை. மின்சாரம் தேவைதான்.

ஆனால், கடல்வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைத்துதான் மின்சாரம் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. தமிழக அரசும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறோம், பெருந்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தி தேவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

தமிழகம் இத்தருணத்தில் தேசத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அது தூத்துக்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நடத்திய போராட்டத்தைப் பொருளிழக்கச் செய்யும் விதமாக அமைந்து விடக் கூடாது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இன்னொரு நெடிய போராட்டத்திற்கான விதையைத் தூவிடும் இந்த முடிவை மாநில அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan on Sterlite re opening

எலெக்சன் ஆபிசர்ஸ் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தல்..; ஐகோர்ட் அதிரடி

எலெக்சன் ஆபிசர்ஸ் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தல்..; ஐகோர்ட் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madras high court (2)கடந்த (ஏப்ரல்) 6ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் “கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில்…” இரண்டு அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் (பூத் ஏஜண்ட்) வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அவசர தேவைக்கு மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது…

“கொரோனா பரவலுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமே காரணம். அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பிரசாரம் செய்தனர்.

நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.

தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

மே 2 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” எனவும் உயர்நீதி நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை எச்சரித்தனர்.

Election Commission should be put up on murder charges – Madras High Court

ஜிவி பிரகாஷ் இசையில் வயதான கெட்டப்பில் (டபுள்) கார்த்தி மிரட்டும் ‘சர்தார்’

ஜிவி பிரகாஷ் இசையில் வயதான கெட்டப்பில் (டபுள்) கார்த்தி மிரட்டும் ‘சர்தார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sardar (2)நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”.

மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று பொருள் தரும்.

இதில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் 2 கதாநாயகிகள். ராஷி கண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் .

மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் சுயாஸ் பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார்.

கனமான கதைகளையும் கடினமான கதாபாத்திரங்களையும் தேர்ந்து எடுத்து நடிப்பவர் கார்த்தி.

இயக்குனர் PS மித்ரன் சமூக சிந்தனைகளும் நவீனத்துவம் பறைசாற்றும் விதமாக அவரது முந்தைய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இப்படத்தில் அழுத்தமான ஒரு கதைக்களத்தில் பயனிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் நடப்பதால், தென்காசி தொடங்கி சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

‘சூரரை போற்று’, ‘அசுரன்’ போன்ற வெற்றி படங்களில் பிரம்மாண்ட இசை அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் ‘சர்தார்’ படத்திற்கு இசை அமைப்பது மேலும் பலம் சேர்க்கிறது

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்‌ஷ்மன்குமார் இப்படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜூ மற்றும் பிபின்ரகு, ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், தயாரிப்பு மேலாளர் J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், புரோமோ ஸ்டில்ஸ் ஜோசஃப் M டேனியல், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, PRO- ஜான்சன்.

GV Prakash to compose music for Karthik’s Sardar

ஆக்ஸிஜன் தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக கட்சிகள் தீர்மானம்

ஆக்ஸிஜன் தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக கட்சிகள் தீர்மானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tuticorin sterliteஇந்தியா முழுவதும் எவருமே எதிர்பாராத நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இது கொரோனா 2வது அலை என கூறப்பட்டாலும் இது சுனாமியாக உருவெடுத்து உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இந்தியாவில் வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க இங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்கினால் தங்களுடைய ஆலையிலிருந்து 500 டன் ஆக்ஸிஜனை இலவசமாக தயாரித்து வழங்க தயாராக உள்ளதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு, ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.

அதே சமயம் மாநில அரசு விரும்பினால் ஸ்டெர்லைட் ஆலையை மாநில அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில்…”ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதியளிக்கலாம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

TN parties endorse reopening of Sterlite plant in Tuticorin for oxygen production

ரெண்டு படம் போதும்.; இனி போனிகபூர் வேண்டாம்..; அஜித்தின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா.?

ரெண்டு படம் போதும்.; இனி போனிகபூர் வேண்டாம்..; அஜித்தின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வரும் படங்களில் நடித்து வந்தார் அஜித்.

இதில் இதில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது.

இந்த இரு படங்களையும் வினோத் இயக்கினார்.

ஆனால் ‘வலிமை’ பட படப்பிடிப்புகள் முடியாமல் தள்ளி கொண்டே செல்கிறது.

இதனால் பர்ஸ்ட் லுக்கை கூட ரிலீஸ் செய்யவில்லை. தற்போது கொரோனா 2வது அலையும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

இதனையடுத்து போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டாம். சின்ன இடைவெளி இருக்கட்டும் என நினைக்கிறாராம் தல அஜித்.

எனவே தன் அடுத்த பட கால்ஷீட்டை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என்பவருக்கு கொடுத்து விட்டாராம் தல.

‘வலிமை’ பட தமிழ்நாட்டு உரிமையை அன்புச்செழியன் தான் வாங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Ajith next film with this production house?

மருத்துவமனையில் பெட் வசதியில்லை.; ‘அரசு’ & ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தயாரிப்பாளர் பாபு ராஜா மரணம்

மருத்துவமனையில் பெட் வசதியில்லை.; ‘அரசு’ & ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தயாரிப்பாளர் பாபு ராஜா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Babu Rajaசூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார்.

அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், ஜாவித் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

53 வயதாகிய பாபுராஜா, தனது இரு மகன்களை வைத்து ‘திருப்பதி சாமி குடும்பம்’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் ‘அரசு’ & ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ படங்களையும் தயாரித்துள்ளார்.

பாபு ராஜா உடல் நேரடியாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அவரது மகன் ஜாகின் அஷ்ரப் தெரிவித்தார்.

தொடர்புக்கு…

+919344991121

Arasu film producer Babu Raja dies due to corona

More Articles
Follows