அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கனும் – MLA விஜயதாரணி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் சாராசம்சம் செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றியது. மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது. அதனாலே இப்படக்குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ராகுல் பரமகம்சா இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு
இணைத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசியதாவது,

“இந்தப்படம் ஒரே நைட்டில் முடிவான படம். இந்தப்படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும் தான். ஒருகாலத்தில் படம் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படம் எடுத்துவிடலாம் ஆனால் வெளியிட முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில் தான். அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி” என்றார்

இயக்குநர் ராகுல்பரமகம்சா பேசியதாவது,

“வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கருத்துக்களை பதிவுசெய் படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்தபடம். பட்ஜெட் என்பதை மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படத்தின் இயக்குநர் மட்டும் தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன்பிறகு அதைச் சரிசெய்தவர் மோகன் சார் தான். இந்தப்படத்தை சக்சஸ் புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவுசெய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது,

“குறிப்பாக கைத்தட்டல் எல்லாம் கெஞ்சி வாங்குவது போல் ஆகிவிட்டது. ஒரே ராத்திரியில் டிசைட் ஆன படம் இது என்றார்கள். இங்கு கவர்மெண்டே ஒரே ராத்திரியில் டிசைட் ஆகிறது. இன்னைக்கு டிக்டாக்ல கொலை செய்றதை எல்லாம் போடுறாங்க. செல்போனை எந்தளவிற்கு யூஸ் பண்ணணும் என்று சொல்கிறார்கள். சினிமா என்பது பெரிய கேம். யார் என்ன கேமில் ஆடி ஜெயிக்கிறார்களோ ஜெயிக்கட்டும் அதை நாம் விமர்சனம் செய்யத்தேவையில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜின் ரசிகனாம். அதனால் தான் அவர் ஒல்லியாக இருக்கிறார் போல. பாக்கியராஜ் படங்கள் நம் வாழ்வின் விசயங்களை பதிவுசெய்தது. கருத்துக்களைப் பதிவு செய் படமும் அப்படியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரிய படங்கள் எல்லாம் இன்று எப்படியாவது தப்பித்து விடுகிறது. சின்னப்படங்கள் தான் மாட்டிக்கொள்கின்றன. ஒரு படத்தை தியேட்டரில் தான் வந்து பார்க்க வேண்டும் என்று ரசிகன் முடிவெடுக்க வேண்டும் என்றால் நம் படம் அப்படி இருக்க வேண்டும். செலவு செய்வது படத்தில் தெரியவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த எட்டரை கோடி ரூபாய் இருந்தது. இப்போது 75 லட்சம் இருந்தது. இப்போது அதையும் சர்வீஸ் டாக்ஸ் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள். இப்போது தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் போட வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களால் வளர்ந்த பெரிய நடிகர்கள் எல்லாம் அதற்கு சப்போர்ட் பண்ணணும். இல்லாவிட்டால் எட்டரை கோடி ரூபாயை இல்லாமல் செய்தவர்கள் வீட்டு முன் போராட்டம் செய்ய வேண்டிய இருக்கிறது. வாழ்வில் எந்தப் பாவமும் பார்க்காத இடங்கள் மூன்று உண்டு. ஒன்று சுடுகாடு, இன்னொன்று கால்யாண வீடு. மூன்றாவது சினிமா. சினிமா எடுப்பவர்கள் டெடிகேட்டா இருங்க. அப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அடுத்த வருசம் சினிமாவில் பெரிய அதிசயம் நடக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன் பேசியதாவது,

“வெற்றியை மட்டும் அல்ல குறைகளையும் மீடியாவிடம் சொல்ல வேண்டும். இந்த சினிமாவை ரொம்ப பொத்தி பொத்தி வச்சி பலரும் இப்போது தரையைப் பார்ப்பதே இல்லை. கருத்துக்களைப் பதிவுசெய் படம் ஒரு அற்புதமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறது. இன்று செல்லம் கொடுத்த வளர்த்த பெண்ணை ஒரு அப்பன் செல்போன் வாங்கி கெடுத்துள்ளான். சென்சார் போர்டு என்ற ஒன்றை வைத்து எங்களை சித்ரவதை செய்கிறார்கள். நாயை நாய் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். அப்புறம் எப்படிடா சொல்ல வேண்டும். இன்று சென்சார் எங்களுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே. டிவியில் சீரியல் எவ்வளவு கேவலமாக வருகிறது. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறீர்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன். இந்தப்படம் செல்போனால் வரும் பிரச்சனைகளை பேசியுள்ளது. இன்று நம்முடைய கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மது கெடுத்து வருகிறது. இந்த இயக்குநரை நான் தலை வணங்குகிறேன். என்னிடம் ஒரு சேனலில் இரண்டு பெரிய ஹீரோக்கள் பெயரைச் சொல்லி அந்த நடிகர்கள் கால்ஷீட் தந்தால் படம் தயாரிப்பீர்களா? என்று கேட்டார்கள். சத்தியமாக எடுக்க மாட்டேன் என்றேன். அதற்குப் பதில் இப்படியான இளைஞர்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். உதட்டோடு உதடு ஒட்டுவது போல் ஒரு காட்சி இப்பட ட்ரைலரில் வந்தது. ஆனால் டக்கென்று மறைத்து விட்டார். சந்தோஷம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் கூட ஹீரோயின் உதட்டை கிழித்துவிடுகிறார்கள். குருதிப்புனல் படம் ஹீரோயினின் உதட்டை இன்னும் காணவில்லை. இந்த இயக்குநரின் வெளிப்படையான பேசிய விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. போஸ்டர் ஒட்டுபவர்களிடம் உள்ள கட்டுப்பாடு கூட தயாரிப்பாளர்களிடம் இல்லை. இப்படத்தின் நடிகர்கள் டெக்னிஷியன்ஸ் எல்லாம் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் நல்ல கருத்துக்களை பதிவுசெய்ய வருகிறது. அது மக்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்றார்

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது,

“என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது.” என்றார்

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி அவர்கள் பேசுகையில்

சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சய் கடம்பூர்.ராஜீ அவர்களிடம் கேட்க போவதாக அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ” கருத்துக்களை பதிவு செய் ”
இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா நடித்துள்ளார். மற்றும் சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ராகுல்பரமகம்சா கூறியதாவது..
முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி அந்ந கயவர்களை தண்டிக்கிறார்கள் என்பதே இந்த கருத்துகளை பதிவு செய் படம். இந்த காலத்து பெண்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு தரும் பாடமாக இந்த படம் இருக்கும்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் இது போல் ஒரு சம்பவம் நடந்தது. அது நடப்பதற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதில் வரும் காட்சிகள் அந்த சம்பவங்ளோடு ஒத்து போவதால் எனக்கு பல மிரட்டல்களும் வந்தன ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றய சமூக இளைஞர்கள், பெண்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் ஒன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போல் இன்னும் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த படம் ஒரு விழிப்புணர்வைத்தரும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்துள்ளேன் என்கிறார் இயக்குனர் ராகுல்பரமகம்சா.
சென்ஸார் அதிகாரிகள் படத்தை பார்த்து பாராட்டினர். அதுமட்டுமல்லாது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். அது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவாளர்: மனோகரன்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் – சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
கலை – மனோகர்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – வெங்கடேஷன்
நிர்வாக தயாரிப்பு – வி.கே.மதன்
தயாரிப்பு – RPM சினிமாஸ்
இணை தயாரிப்பு – JSK.கோபி
இயக்கம் – ராகுல் பரமகம்சா
கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்
ஸ்ரீ சிவ சாய் ஆர்ட்ஸ் கே.மோகன் தமிழகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்.

அதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பெர்ஜான் பறக்க இருக்கிறது.

இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது…
“பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பெர்ஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும். எனக்கும் அதர்வாவுக்கும் இந்தப் படம் முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்திருக்கிறது. நானும் அதர்வாவும் சமீபகாலமாக ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகைப் படங்களையே கொடுத்து வந்தோம். நான் படங்களை இயக்க ஆரம்பித்தபோது, காதல் கதைகளையே தேர்ந்தெடுத்து இயக்கினேன். எல்லோரும் ரசிக்கக்கூடிய நல்லதொரு காதல்
கதையை மீண்டும் படமாக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் விரும்பினேன். இந்தப் படம் எனக்கு புத்துணர்ச்சியூட்டும் படமாக அமைந்திருக்கிறது. விறுவிறுப்பான திரில்லர் படங்களிலேயே நடித்துப் பழக்கமான அதர்வாவுக்கும் இது புத்துணர்ச்சியூட்டும் படமாக அமைந்திருக்கிறது. எனது ஆரம்பகாலப் படமான ‘கண்டேன் காதலை’ படத்தைக் காட்டிலும் அதிகம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படமாக இது அமையும். குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியூட்டும் படமாக அமையும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வெகு விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

அதர்வா முரளி அனுபமா பரமேஸ்வரன் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், வி.ஐ.பி.புகழ் அமிதஷ் பிரதான், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் கண்ணனே திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஷம்மி என்கிற சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வாவும், நடனக் காட்சிகளை சதீஷும் அமைக்கின்றனர். கலை இயக்குநராக ராஜ்குமாரும், ஆடை அலங்கார நிபுணராக ஜே.கவிதாவும் பணியாற்றுகின்றனர். ராஜா ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகியாகப் பொறுப்பேற்க, சுரேஷ் சந்திரா-ரேகா (டி-ஒன் )மக்கள் தொடர்பு பணிகளைச் செய்கின்றனர். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன், எம்.கே.ஆர்.பி. புரொடக்ஷனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தனுஷை இயக்க ஆசைப்படும் பேட்ட வில்லனின் ப்ரதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் ஹிந்தியில் ‘ராஞ்சனா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த நான்கு வருடங்களாக ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை.

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா இந்த வாரம் நவம்பர் 29ல் வெளியாகிறது.

இவரின் அடுத்த படம் பட்டாஸ் படம் 2020ல் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் பேட்ட பல வில்லன் நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் ஷமாஸ் நவாப் சித்திக் என்பவர் தனுஷை இயக்க ஆசைப்படுப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நவாசுதீன் சித்திக் நடித்து வரும் ‘போலே சுடியான்’ என்ற படத்தை தற்போது ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கி வருகிறார்.

வதந்தியை பரப்பும் மீடியாக்கள்; இந்தியன் 2 குறித்து விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன்.

இதனிடையில் தன் பிறந்தநாள் விழா, காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை என சூட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல் இருந்தார்.

விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இப்படத்தில் கமலுடன் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியன் 2-வில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக ஒரு சில மீடியாக்களிலும் ட்விட்டரிலும் செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு செய்திகள் இல்லை)

அந்த செய்தி உண்மையில்லை, அது வெறும் வதந்தி என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு வந்தது உண்மைதான் எனவும் அதில் நடிக்க முடியவில்லை என கமல் 60 விழாவில் விஜய்சேதுபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தியை நாம் பதிவிட்டு இருந்தோம்)

ரசிகர்கள் மட்டும் இல்லாமல் விமர்சகர்களையும் கவர்ந்த ஆதித்ய வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் ஆதித்யவர்மா படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது,

“என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் ரதன் பேசியதாவது,

“என் அம்மாவிற்கு நன்றி. என் எல்லா மேடைகளுக்கும் அவர் தான் காரணம். ஏ.ஆர் ரகுமான் சாருக்கும் நன்றி. இந்தப்படத்திற்காக நாங்கள் வாங்குற ஒவ்வொரு க்ளாப்ஸும் விக்ரம் சாருக்குத் தான் சேரும். இந்தப்படத்திற்காக நாங்கள் உழைத்ததை விட விக்ரம் சார் தான் அதிகம் உழைத்தார். இயக்குநர் கிரிசாயா நல்ல என்கிரேஜ் பண்ற நபர். இன்று யாரைக்கேட்டாலும் துருவ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சவுரியா சாரும் விக்ரம் சாரும் இல்லாவிட்டால் இந்தப்புராஜெக்ட் வந்திருக்காது” என்றார்

நடிகர் அன்புதாசன் பேசியதாவது,

“இந்தப்படம் என் கனவு மாதிரி. இந்தப்படம் எனக்கு ஸ்ட்ராங்கான பொஸிசன். விக்ரம் சார் கிரிசாயா சார் துருவ் அனைவருக்கும் நன்றி. நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஒரு சோல் இருக்கு. அதை கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதைச் சரியாக செய்திருக்கிறதாக நம்புகிறேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்

இயக்குநர் கிரிசாயா பேசியதாவது,

“தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸுடம் செம்மயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். நவம்பர் 22-ஆம் தேதி ஒரு புது ஸ்டார் பிறந்திருக்கிறார். அதுதான் துருவ்” என்றார்

நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது,

“இப்பலாம் என்கிட்ட யாரும் பிரஸ்மீட் இருக்குன்னு சொல்றதே இல்லை. திடீர்னு காலையில எழுப்பி பிரஸ்மீட்னு சொல்றாங்க. படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் கலை மாமா கதிர்மாமா அவர்களுக்கு பெரிய நன்றி. என்னைச் சின்னப்பிள்ளையில் இருந்தே அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி” என்றார்

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியதாவது,

“ஆதித்யவர்மா படத்திற்கான காத்திருப்பு நேரம் ரொம்ப அதிகம். அர்ஜுன் ரெட்டி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அர்ஜுன் ரெட்டி ஸ்கிரிப்ட்டுக்காகத் தான் இந்த படத்திற்குள் வந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது. ஒரு நல்ல ஹீரோ இந்தப்படத்திற்குள் இருக்கிறார். 20+ல பெரிய ஹீரோ நம்மிடம் இல்லை. இப்போது துருவ் கிடைத்து விட்டார். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பசங்க எல்லாம் படம் பார்த்துட்டு நல்லநல்ல கமெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. முகேஷ் சார் இப்ப்டத்தை என்சாய் பண்ணி எடுத்திருக்கிறார். ஒரு விநியோகஸ்தரா நானும் என்சாய் பண்ணி விநியோகம் செய்தபடம் இது” என்றார்

நடிகர் விக்ரம் பேசியதாவது,

“இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். “துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்” என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார். இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட சோல் எல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்

More Articles
Follows