மிஸ் சவுத் இந்தியா அபூர்வி சைனியின் கனவை நிறைவேற்றுவாரா விஜய்சேதுபதி?

மிஸ் சவுத் இந்தியா அபூர்வி சைனியின் கனவை நிறைவேற்றுவாரா விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathiமாடல் அழகி அபூர்வ சைனி என்பவர் மார்ச் 17ம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019’ என்ற பட்டத்தை வென்றார்.

இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது சென்னையிலுள்ள எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது.

தனது 19வது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார்.

தெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார். இதை தவிர அவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.

ரூபாறு மிஸ் இந்தியா எலைட் சாதனையை தொடர்ந்து இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் சாதிக்க தன்னுடைய துறையில் எப்போதும் பெரிய கனவுகளை காணுங்கள் என்கிறார். அதுமட்டுமின்றி மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இளம்பெண்களுக்காக மாடலிங் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார்.

அவரின் இந்த முயற்சியினால் சென்னையை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அவர் பார்வையில் தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.

என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.

சிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமை போன்றவை அவரை மிகவும் பாதித்தவை ஆகும். எனவே அவர் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் NGO-வில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

NGO சார்ந்த மக்களும் இவரோடு இணைந்து நாங்கள் Hind Towards Change என்ற நிறுவனத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் சமூகத்தின் மேல் உள்ள எண்ணத்தை மாற்றவும் உழைக்கிறோம். தனிமனித வளர்ச்சியையும் அவர்களின் விழிப்புணர்வும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.

நாங்கள் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம். உதாரணமாக காஷ்மீர் வெள்ள நிவாரணம், கேரள வெல்ல நிவாரணம், Sanitary pads விழிப்புணர்வு, ரத்ததானம், குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை விதிகள் விழிப்புணர்வு மற்றும் ஏராளம். இதன் மூலம் ஒரு சுத்தமான வாழ்க்கை முறையும், உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வையும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathi

Miss South India Apurvi Saini wish to act with Vijay Sethupathi

ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirumanamமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.

கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

முடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் தமிழரசன்

முடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் தமிழரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது…இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது…

இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிவடைய உள்ளது.ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது.

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில் பிரசாந்த்தாவீத் , கனி ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக ரேடியோ ஜாக்கியாக ஒரு எஃப் எம் சேனலில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பானநிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள்அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமைபடைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து விருந்தாக்குகிறது.

அரவிந்த் ஜே ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள, இசை அமைப்பாளராக சனாதன் அறிமுகமாகிறார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

முக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவேத், கனி மற்றும் பலர்

தயாரிப்பு: சைதன்யா சங்கரன்

படத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்

ஒளிப்பதிவு: அரவிந்த் ஜே

இசை: சனாதன்

எழுதும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்

தமிழ் சினிமாவின் பெருமைகளை கூறும் சம்யுக்தா ஹெக்டே

தமிழ் சினிமாவின் பெருமைகளை கூறும் சம்யுக்தா ஹெக்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகச்சிறந்த நடிப்பு என்பது அரிதிலும் அரிதான ஒரு கூட்டணி. தனது நடிப்பு திறமையை நிரூபித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே,இயற்கையாகவே இந்த வரத்தை பெற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே தென்னிந்திய ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்திருக்கிறார், குறிப்பாக கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரது பப்பி படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரக் 12ஆம் தேதி வெளியாகும் வாட்ச்மேன் படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது.

இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும்போது, “நான் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டுமே புதுமையான கருத்துக்களை கொண்டு உருவானவை தான். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒரு பொதுவான தன்மை ‘நாய்’. ஆம், மிகவும் தற்செயலாக நடந்தாலும், எனக்கு பிடித்த செல்லப்பிராணிகளுடன் திரையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே வேறு வேறு வகையை சார்ந்தவை” என்றார்.

வாட்ச்மேன் படத்தில் பணிபுரியும் அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது, “இது முற்றிலும் எனக்கு ஒரு புதிய அனுபவம். இயக்குநர் விஜய் சார், பெண் நடிகர்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுபவர். ‘வாட்ச்மேன்’ படத்துக்காக என்னை அணுகியபோது, அது என்ன வகை படம் என்பதையோ அல்லது கதையை பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த படம் நிச்சயம் என்னை மேம்படுத்துவதற்கு உதவும் என எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. படத்தின் முடிவில், என் அனுமானங்களும் நம்பிக்கையும் சரி தான் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 12, 2019 அன்று படம் வெளியாவதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மந்திரவாதிகள். அவர்கள் கைவண்னத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இது என் பார்வையில் இருந்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் (இசை), நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி (ஒளிப்பதிவு), ஆண்டனி (படத்தொகுப்பு), ஏ ராஜேஷ் (கலை) மற்றும் மனோகர் வர்மா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல! தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை!! எம்.எல்.ஏ. கருணாஸ் காட்டம்!

தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல! தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை!! எம்.எல்.ஏ. கருணாஸ் காட்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் ஒத்துவைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் வழக்கம் போல பா.ச.க. எஜமான விசுவாசத் திமிரில் எதை பேசவேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது டிவிட்டரில் ” நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் நோக்கம் என்ன?

குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு!

கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங் களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது.

சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் யார் தெரியுமா? தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார்.

தமிழகத்தில் மதுரை உசிலம்பட்டி கீழக்குயில்குடி பகுதியில் முதன் முதலில் இச்சட்டத்த்தை 4.5.1914 இல் ஆங்கிலேயே காவல்துறை அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாட்டில் கள்ளர், பிரமலை கள்ளர்,முத்தரைய அம்பலக்காரர்,வலையர், என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

அதன்படி 12 வயதை எட்டிய ஆண்கள் தினமும், காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால் கீழக்குயில்குடியில் உள்ளிட்ட பகுதியிலிருந்த கள்ளர் உள்ளிட்டவர்கள் ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் நாடோடிகள் அல்ல! நிரந்தரமாக அம்மண்ணில் குடியிருந்தோர் ஆவர், ஆடு மாடுகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் தங்களுக்கென தனிக் கலாச்சார அடையாளத் துடன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த மதுரை மாவட்ட பெருங்காம நல்லூர் மக்கள் மீது ஆங்கிலேயே அரசு 3.4.1920 இல் துப்பாக்கிச்ச்சுடு நடத்தியது. அதில் வீரத்தமிழ் மறத்தி மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்தனர்.

1927ஆம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்துபோது அக்கால அரசியலில் கோலொச்சிய எங்கள் தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக பெரும் போராட்டம் நடத்தினார்.

1929ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், முத்துராமலிங்கதேவர். இந்தச் சட்டத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கையும் விடுத்தார். இதையடுத்து பெரும் போராட்டம் வெடிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. தேவர் அவர்களின் தொடர் முயற்சிகளால் 2000 கிராம முக்குலத்தோர் இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.

இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936ல் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவால், 1947-இல் காவல்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே அது காலாவதியானது.

இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரமறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் ஈகத்தை – வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?

குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?

வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவ தற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன்? தேர்தல் தோல்வி பயத்தில் குற்ற பரம்பரை என தேவர் சமூகத்தை சீண்டி நாடார் தேவர் சமூகத்திற்குள் கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா?

மிஸ்ஸஸ் தமிழிசை அவர்களே! நாங்கள் குற்றப்பரம்பரை என்று சொற்றொடரை சுமந்து சமூகநீதி விடியலை திறக்கப் போடுகிறார்கள்! ஆனால் நீங்கள் சார்ந்துள்ள பா.ச.க. ஒட்டுமொத்த சமூகத்தையே விழுங்குகிற எதேச்சதிகார ஆரிய முதலை என்பதை நீங்கள் அறிந்தீர்களோ என்னவோ நாட்டு மக்கள் அறிவார்கள்!

நாங்கள் குற்றபரம்பரை இல்ல! இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை!

ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும்! நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒரு புறம் இருக்கட்டும் ! ஆனால் நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றபரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்!

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும்; தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை என்று…!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்தார்!

More Articles
Follows