‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..!

‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss india 2020 Bashini FathimaGIE புரொடக்சன் சார்பில் திருநங்கை ஆலி சர்மா என்பவர் வருடந்தோறும் குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா போட்டியை நடத்தி வருகிறார்.

கடந்த வருடம் முதல் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாவது வருடமாக 2020 ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பெண்கள் வரை கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மூன்று பெண்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த ‘பாஷினி பாத்திமா’ என்கிற 19 வயது இளம்பெண் 2020-ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்கியராஜ் பேச்சு

இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்கியராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pura Nagar Audio Launchகமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கே.ராஜன் பேசியதாவது..

” இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் நடிகன் எப்படி மக்கள் தலைவன் ஆக முடியும். உன் தாய் தகப்பனை கவனிக்காமல் இப்படி இருக்கக் கூடாது. இப்போது இங்கு சினிமாவை அரசியலாக்கி விட்டார்கள். அப்படி அரசியலாக்கி அரசியல்வாதிகளிடம் மோதிக்கொண்டு பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளை தின்னும் ஜாதி வெறியன் நான் என கூறிய ரஞ்சித் முன்ஜாமீன்

நடிகர்கள் எவ்வளவு வேண்டும் ஆனாலும் என்று வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் அதில் பாதியை கஷ்டப்படும் மக்களுக்குச் செலவு செய்யுங்கள். அந்த மக்கள் தானே உங்களுக்கு பணம் தருகிறார்கள். உச்ச நடிகர்களில் இருந்து எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

புறநகர் படத்தின் பாடல்கள் என்னை பிரம்பிக்க வைத்துவிட்டது. ரஜினி முதலில் அறிமுகமானது சின்னப்படம் தான். அஜித்தும் அப்படித் தான். எங்கள் பாக்கியராஜும் அப்படி படிப்படியாக ஏறித்தான் மேல் வருகிறார்கள். சோழா பொன்னுரங்கம் தான் அஜித்தை ஹீரோவாக்கினார். ஆனால் அவர் கஷ்டப்படுகிறார். அஜித் இப்போது ஸ்ரீதேவி புருசன் கஷ்டப்படுகிறார் என்று படம் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்களை முதல்முதலில் ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள். ரஜினிகாந்த் பாண்டியன் படத்தை அப்படித் தான் பண்ணிக் கொடுத்தார்.
மின்னல் முருகன் அற்புதமான இயக்குநர். இதில் பங்கேற்ற அனைவருமே நல்லா உழைத்திருக்கிறார்கள்.” என்றார்.

தருண்கோபி பேசியதாவது..

“தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். இந்த ஊடகத்தை தப்பா படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா செருப்பால அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாம தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சிலபேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்

கே.பாக்கியராஜ் பேசியதாவது,

“தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமா டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் மின்னல் முருகன் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால் டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.

நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில் ஒருகாலத்தில் தனிக்ளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. ஒரு கை ஓசை என்ற படத்தில் இந்த விசயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது. இந்தப்படத்தை பொறுத்தவரை சண்டைகள் ரொம்ப நல்லாருக்கும். டான்ஸுக்கு நல்ல இம்பார்ட்டெண்ட் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். இந்தக்காலத்தில் படம் எடுக்கிறதும் அதைச் சரியா கொண்டு வருவதும் பெரிய விசயம். இந்த டீம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல உதவியாக இருக்கிறார்கள். மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும் உண்டு. ஏன் என்றால் மக்களிடம் இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படம் டீம் எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ” என்றார்

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது..

“இந்தபடத்தை தயாரித்து நடித்த தம்பி கமல் கோவின் ராஜ், கோ வின் ராஜ். போ ஜெயிச்சுட்டு வா ராஜா என்பது போல இருக்கிறது. இவர் முதல்படம் போல இல்லாமல் கலக்கி இருக்கிறார். தம்பி மின்னல் முருகன் ஸ்டண்ட் மாஸ்டர் அவர் பிரபுதேவா, லாரன்ஸ் போல வித்தியாசமான இயக்குநராக கவனிக்கப்படுவார். புது முகங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சரியான இசை மற்றும் ஒளிப்பதிவு கொடுத்துள்ளார்கள். இன்னும் எவ்வளவு வருசம் தாம்யா சாதியைப் பற்றி பேசுவார்கள். பெரியார் நாயுடு தான். என்னைக்காவது தன் சாதியைச் சொல்லி இருக்கிறார். பள்ளிக்கூடத்தில் முதலில் மதம் கேட்கிறார்கள். அப்புறம் நேஷ்னால்டியை கேட்கிறார்கள். அடுத்து சாதியை கேட்கிறார்கள். அதில் இல்லாவிட்டாலே சாதி ஒழிந்து விடும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. காரணம் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இருக்கிறது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை. மக்களை நேசிக்கும் இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மக்கள் சேவைக்காகத் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஹீரோக்களுக்கு எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து நாங்கள் உழைத்திருப்போம். அவர்கள் எங்களுக்கு எதாவது திருப்பி தருவார்கள் என்று தானே. ஆனால் இங்கு நன்றியை எதிர்பார்க்க முடியாது. சினிமாவிற்காக வேணும் ஏதேனும் நன்மை செய்யுங்கள். பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்த எனக்கு இன்னும் படம் கிடைக்கவில்லை. இதெல்லாம் மாறணும்.

தனது இயக்குநர்களை மரியாதை கொடுத்த கலாச்சாரம் ஒன்றுண்டு. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது கூட தனது இயக்குநர்களை மதித்தார். எம்.ஜி. ஆர் நடிக்கும் போது சம்பாதித்தது மட்டும் தான். அரசியலுக்கு வந்த பிறகு அவர் எதுவுமே சம்பாதிக்கவில்லை. அவருக்கு வெளியில் நடிக்கத் தெரியாது. வெளி மாநிலத்தில் செட் போட்டு படம் எடுப்பதை விட நம்மூரில் செட் போட்டு எடுக்கலாமே..நமது ஜுனியர் ஆர்ட்டிஸுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய மாட்டேன்கிறார்கள்.
புறநகர் படம் பெரிய நடிகர் படம் போலவே இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்” என்றார்

“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் !

“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shershaah first look posterமாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படம் “ஷெர்ஷா” என தலைப்பிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்வை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலக்கலான வடிவமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அஜித் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் தாடி ரகசியம் இதுதானாம்

தென்னிந்திய மொழிகளில் ஸ்டைலீஷ் கேங்ஸ்டர் படங்கள், ரசிகர்களை கவரும் திரில்லர் படங்கள் என நன்மதிப்பை பெற்ற இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக முற்றிலும் வேறொரு ஜானரில் தன் பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில் போரின் பின்னணியில் போர் நாயகனை வைத்து, உண்மைகதையை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரக்கூடியது. சாக்லெட் பாய், குறும்பு நாயகனாக பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா “ஷெர்ஷா” படம் மூலம் முதல்முறையாக மிடுக்கான ராணுவ வீரராக நடிக்கவுள்ளார். “ஷெர்ஷா” படத்தின் குறிப்பிடதகுந்த மற்றுமொரு அம்சம் என்னவெனில் இப்படம் கார்கில் போர் நடந்த பகுதிகளான கார்கில், சண்டிகர், பலம்பூர் பகுதிகளில் நேரடியாக படம்பிடிக்கப்படுகிறது.

2020 ஜூலை 3 வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர் போக்ஸ்வாலா, அஜய் ஷா மற்றும் ஹிமான்ஷு காந்தி ஆகியோர் தயாரிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் முதல்முறையாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont have any fear to say Rajini name says Mansoor Alikhan மின்னல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புறநகர்.

இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் கமல் கோவின்ராஜ்.

நாயகிகளாக சுகன்யா, அஸ்வின் சந்திரசேகர் நடிக்க இவர்களுடன் தேனி முருகன், கதிரவண்ணன் நடித்துள்ளனர். அனல் அண்ணாமலை வில்லனாக நடித்துள்ளார்.

இசையை இந்திரஜித் கவனிக்க, ஒளிப்பதிவை விஜய் திருமூலம் செய்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி

இந்த விழாவில் இயக்குனர் வி. சேகர், ஜாக்குவார் தங்கம், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் இறுதியாக மன்சூர் அலிகான் பேசியதாவது…

இங்கு எனக்கு முன் பேசியவர்கள்.. அவரது படத்தை ஏன் பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யலாமே என்றார்கள்.

அவர் இவர் என்கிறார்களே தவிர. யாரும் பெயரை சொல்லவில்லை. ரஜினிகாந்த் என்று பெயரை சொல்ல ஏன் பயம்? என தெரியவில்லை.

அவர் சாகுற காலத்துல நிறைய படங்களில் நடிக்கிறார். நல்லா நடிக்கிறார். வாய்ப்பு வருது பணம் வருது.

சின்ன படங்கள் ஓடல ஓடல சொல்கிறார்கள். சின்ன படங்களை பார்க்க யார் வருகிறார்கள்?” என பேசினார்.

I dont have any fear to say Rajini name says Mansoor Alikhan

96 தெலுங்கு டிரைலர் ரிலீஸ்; ரசிகர்கள் ரியாக்சன் – த்ரிஷா பெஸ்ட்; சமந்தா வேஸ்ட்

96 தெலுங்கு டிரைலர் ரிலீஸ்; ரசிகர்கள் ரியாக்சன் – த்ரிஷா பெஸ்ட்; சமந்தா வேஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema audience reaction for 96 remake Jaanu trailer ஒரு படம் ஹிட்டாகி அடுத்த மொழியில் வெளியானால் நிச்சயம் பழைய படத்துடன் அதை ஒப்பிட்டு பார்ப்பார்கள் ரசிகர்கள்.

த்ரிஷ்யம் பட மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்திருந்தனர்.

தமிழில் பாபநாசம் பெயரில் அதே இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கினார். கமல் நடிப்பை பலரும் பாராட்டினாலும் கௌதமி நடிப்பு மீனா போல் இல்லை என்றனர்.

அதுபோல் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். மலையாளத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவி நடிக்க தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.

ஸ்ருதியை கிண்டல் செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர். முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஹிட்டான 96 படத்தை தமிழில் இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்கியுள்ளார். தெலுங்கில் ஜானு என பெயரிட்டுள்ளார்.

தமிழில் விஜய்சேதுபதி த்ரிஷா நடித்திருந்தனர். தெலுங்கில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

96 தெலுங்கு ரீமேக்.; என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என டைரக்டர் விளக்கம்

அதே இயக்குனர் தான் படத்தை இயக்கியிருந்தாலும் தெலுங்கு பட டிரைலரை தமிழக ரசிகர்கள் ரசிக்கவில்லை.

த்ரிஷா தான் பெஸ்ட், சமந்தா நடிப்பு எடுபடவில்லை. சமந்தா நல்ல நடிகை தான். ஆனால் இந்த கேரக்டருக்கு இவர் எடுபடவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

இந்த டிரைலர் வெளியான நிலையில் படத்தை பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

தமிழில் இசையமைத்த கோவிந்த வசந்தாவே தெலுங்கிலும் இசையமைத்துள்ளார். தில் ராஜீ தயாரித்துள்ளார்.

Tamil Cinema audience reaction for 96 remake Jaanu trailer

ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி

ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bear Grylls reaction about Rajini shoot in Man Vs Wild showஅகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட், டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர், மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்கிலும் பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில் Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இது ரஜினிகாந்த் அவர்கள் பங்கு பெரும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சின்ன திரைக்கு அவரை முதன் முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில் பெருமை கொள்கிறது.

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் நம் சூப்பர்ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்.

Discovery குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் Bear Grylls மற்றும் சூப்பர்ஸ்டார் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று உறுதி கூறுகிறார்.

Bear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்”.

Bear Grylls reaction about Rajini shoot in Man Vs Wild show

More Articles
Follows