தர்பார் சிறப்பு காட்சி பற்றி அமைச்சர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி கோவில்பட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக கொண்டார்.

அப்போது அவரிடம் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் தர்பார் படம் சிறப்பு காட்சி குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சிறப்பு காட்சி திரையரங்குகளில் காட்டப்படும். அதற்கான அனுமதி வேண்டும் என கேட்டு இதுவரை தயாரிப்பு நிறுவனம் சார்பில் யாரும் அணுகவில்லை.

அப்படி அணுகினால், அதற்குரிய பரிசீலனைக்குப் பின், முதல்வர் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்படும்.

அரசு அனுமதி வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.

இது ரஜினி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏன் தர்பார் தயாரிப்பு நிறுவனம் லைகா அனுமதி கேட்டு அரசை அணுகவில்லை என கேட்டு வருகின்றனர்.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாணடு 2019 தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி படம் வெளியானது. இவையிரண்டும் வெற்றி பெற்றது.

தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை இந்தாண்டு 2020 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையிட உள்ளனர்.

அதே நாளில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் திரைக்கு வந்து மோதவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர் மாஸ்டர் படக்குழுவினர்.

இந்த ஜெயில் அரங்கில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

பிப்ரவரிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனர்.

சூரரைப் போற்று படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru and Master plans to clash on Summer 2020

அகரம் மாணவியின் பேச்சை கேட்டு தேம்பி அழுத நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிலர் ரீல் ஹீரோக்களாக மட்டுமே இருக்கும் நிலையில் சினிமாவையும் தாண்டி ரியல் ஹீரோவாக திகழ்கிறார் நடிகர் சூர்யா.

இவர் கடந்த ஆண்டு கல்வி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கு கேட்கும். அவரின் கல்வி குறித்த பார்வை சரியானதே, அவர் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் என ரஜினி பேசியிருந்தார்.

இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அகரம் மாணவி காயத்ரி பேசும்போது தான் இப்போது ஒர நல்ல ஆசிரியராக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் அகரம் தான் என்று பேசி தன் குடும்ப கஷ்டங்களை உருக்கமாக கூறினார்.

இவரின் பேச்சை 10 நிமிடம் கேட்ட சூர்யா கன்ட்ரோல் செய்ய முடீயாமல் கண் கலங்கிய படி உட்கார்த்திருந்தார்.

இறுதியாக மாணவியை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார் அவரும் அழுதார்.

இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

Actor Suriya burst into tears at Agaram event video goes viral

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் ரிலீசாகிறது.

ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால் கர்நாடகாவிலும் நிறைய தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக தர்பாரை வெளியிட உள்ளனர்.

ஆனால் கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.

இதனால் கர்நாடக விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு முன்பு ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Karnataka team oppose Darbar release in tamil version

தனுஷின் ‘கர்ணன்’ படத்தலைப்பை மாற்ற தாணுக்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அந்த பட இயக்குனர் மாரி செல்வராஜிடன் கை கோர்த்தார் நடிகர் தனுஷ்.

இவர்கள் இணையும் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார்.

இதில் நாயகியாக மலையாள நடிகை ரெஜிஷ் விஜயன் நடிக்க முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பு கர்ணன் எனவும் பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தலைப்பை மாற்ற வேண்டும் என சிவாஜி ரசிகர் சந்திரசேகரன் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம். மகாபாரத கர்ணன் கேரக்டருக்கு இந்த பட தலைப்பு களங்கும் விளைக்கும் வகையில் இந்த படத்தலைப்பு உள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்ணன் படத்தலைப்புடன் ஏதேனும் வார்த்தைகளை சேர்த்து தலைப்பை மாற்ற கோரியுள்ளனர்.

Sivaji fans request to Thanu to change title of Dhanushs Karnan

சர்ச்சைகளை உண்டாக்கிய ‘திரெளபதி’ படத்திற்கு தடை கோரி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் மச்சானும் ஷாலினியின் சகோதரனுமான ரிச்சர்ட் நடித்துள்ள படம் திரௌபதி.

நாயகியாக ஷீலா நடிக்க, முக்கிய வேடத்தில் கருணாஸ் நடித்துள்ளார்.

மோகன் ஜி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடகக் காதல் குறித்து பட மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள சாதி சார்ந்த பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Draupathi Trailer Called Out For Misogyny And Casteism

 

More Articles
Follows