கதை திருட்டை பேசும் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ படத்திற்கு அமைச்சர் ஆதரவு

கதை திருட்டை பேசும் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ படத்திற்கு அமைச்சர் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நூற்றாண்டு கண்ட தமிழ்சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை கதை திருட்டு.

கதை திருட்டை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ்சினிமாவும் வரவில்லை. முதல் முறையாக கதை திருட்டை பேசும் படமாக உருவாகியிருக்கும் படம் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்”

கதைக்காக நடிகர்களா? கமர்ஷியலுக்காக நடிகர்களா? கதை முக்கியமாக? ஹீரோயிசம் முக்கியமாக? என்பதை பேசும் பொருளாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.

இந்தப் படத்தின் இறுதியில் சுமூகமான ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற “டுலெட்” பட கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன், “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் கதாநாயகன் ஆண்டனி, “நேரம்” “வெற்றிவேல்” படங்களின் இரண்டாம் கதாநாயகனான ஆனந்த் நாக், சுப்பிரமணியம் சிவா, “கயல்” வின்சென்ட் நகுல், விஜய் கெளரிஷ், தீக்ஷனா, மற்றும் தென்றல் ரகுநாதன் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் பழம்பெரும் வெற்றி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: சதீஷ்குமார்

இசை: கெவின் டிகாஸ்டா

பாடல்: நிலவை பார்த்திபன்

எடிட்டிங்: வினோத் கண்ணன்

ஸ்டண்ட்: சரவணகுகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சந்தோஷ் நம்பிராஜன்.

“ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்” சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செய்தித்துறை மற்றும் சினிமா ஊடகத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.

MINISTER M.P.SAMINATHAN LAUNCHED the first look poster of Movie #STARTCAMERAACTION

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர் பட புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை தில்ராஜ் தயாரித்து வருகிறார்.

தற்காலிகமாக RC15 என்று இப்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க தமன் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார்

தற்போது இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்சரணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது இதுதான் முதல் முறை.

அதுபோல ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ பட அறிமுக விழாவில் ஷங்கர் கலந்துக் கொண்டார். அப்போதே ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தியின் அழகையும் நடிப்பையும் ஷங்கர் பாராட்டி இருந்தார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

கூடுதல் தகவல்..:

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக்காயிதம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

‘போலோ சங்கர்’ படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி நடித்து வருகிறார். இது அஜித்தின் ‘வேதாளம்’ பட ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh roped in to play female lead in RC 15?

விசித்திரனுக்கு குவியும் பாராட்டு..; சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் என்றுமே தனி மரியாதைதான்..

விசித்திரனுக்கு குவியும் பாராட்டு..; சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் என்றுமே தனி மரியாதைதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் கடந்த வாரம் மே 6ல் ரிலீசான திரைப்படம் ‘விசித்திரன்’.

இந்த படம் மலையாள படமான ஜோசப் படத்தின் ரீமேக்காகும். மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே தமிழிலும் படத்தை இயக்கியுள்ளார்.

நாயகிகளாக பூர்ணா மற்றும் மதுஷாலினி நடித்திருந்தனர். பக்ஸ், இளவரசு, மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜான் மகேந்திரனின் வசனங்கள் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது.

உடல் உறுப்புகள் தானம் என்ற பெயரில் வியாபாரம் பேசும் மெடிக்கல் மாஃபியாக்களை நம் கண்முன் நிறுத்தியது. இது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இந்த படம் வெளியானது முதலே பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

அரசியல் பிரபலங்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, பாலாஜி, ஜூலி, தாமரை உள்ளிட்டோர் விசித்திரனை கண்டு வியந்தோம் என தெரிவித்தனர்.

மாயன் என்ற ஒரே கேரக்டருக்காக 80 கிலோ எடை… 90 கிலோ எடை.. 120 கிலோ எடை என தன் உடல் எடையை ஏற்றி இறக்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் என்பவர் தான் இந்த கேரக்டரில் நடித்திருந்தார். எனவே அவரின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதிலும் தான் கவனமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் விசித்திரன் பெற்று வருவதால் தமிழகத்தில் சில தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு நல்ல படைப்பை கொடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘விசித்திரன்’ ஒரு நல்ல உதாரணம்.

Celebrities and Critics praises RK Suresh in Visithiran

கருணாஸ் இனியா ரித்விகா இணைந்த ‘ஆதார்’ பட சென்சார் அப்டேட்

கருணாஸ் இனியா ரித்விகா இணைந்த ‘ஆதார்’ பட சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்‘ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இணையத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Aadhaar Tamil Movie censored with U/A

ரஜினிக்கு வாழ்த்து.. ரூ 30 கோடி தேவை.. சென்னையின் அடையாளமாகும் பில்டிங்.; நடிகர் சங்க பொதுக்குழு சுவாரஸ்யங்கள்

ரஜினிக்கு வாழ்த்து.. ரூ 30 கோடி தேவை.. சென்னையின் அடையாளமாகும் பில்டிங்.; நடிகர் சங்க பொதுக்குழு சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:

நடிகர் நாசர் பேசும்போது,

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மிக மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது.

இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழுமூச்சாக செயலில் இறங்குவோம்” என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது…

“நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா? அல்லது வங்கியில் கடன் வாங்குவதா? என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம். இதுவரை 70 சதவீத கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது.

இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்துள்ளோம்.

இது ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதியை திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர் நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம்.

மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படும். பொதுக்குழு சிறப்பாக நடந்து முடிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் , பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.

பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் கவுரவிக்கப் பட்டார்கள்.

நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது.

சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒருமுறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம்” என்றார்.

கார்த்தி பேசும்போது…

நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் EMI, காப்பீடு, ஓய்வுதியம், மருத்துவ செலவுகள், ஈமச்சடங்கு உதவி போன்ற செலவுகள் போக குறைந்தபட்சம் ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை மீதம் இருக்கும். இந்த வருமானம் போதுமானதாக இருக்கும் என்றார்.

Nadigar Sangam press meet highlights

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் இணைந்த மஞ்சுவாரியர் & யோகிபாபு படத்தின் நியூ அப்டேட்

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் இணைந்த மஞ்சுவாரியர் & யோகிபாபு படத்தின் நியூ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்களும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

‘அசுரன்’ படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியாரின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், படத்தின் தலைப்பு ‘சென்டிமீட்டர்’ என வித்தியாசமாக இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் தோற்றம் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதாலும், ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

centimeter

New update on manju warrier & Yogibabu starrer centimeter

More Articles
Follows