‘கபாலி’ வில்லனுக்கு ‘பைரவா’ கொடுத்த வேஷம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது.

ராதிகா ஆப்தே, ஜான்விஜய், கிஷோர், கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா, மைம் கோபி, ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் வில்லனாக நடித்த மைம் கோபி தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிக்கவுள்ள வடசென்னை ரவுடி கேரக்டருக்கு கருவாட்டு குமார் என பெயரிட்டு இருக்கிறார்களாம்.

சூர்யா-கார்த்தி-விஷால்-ஆர்யா… இவர்களை இணைத்தவர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா-கார்த்தி இருவரும் சகோதரர்கள்.

அதுபோல் விஷால்-ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் நால்வரும் இணைந்தால் எப்படி இருக்கும்.?

நன்றாகத் தானே இருக்கும் என்கிறீர்களா? ஆம். இவர்கள் நால்வரும் கடம்பன் என்ற படத்திற்காக இணைகிறார்கள்.

ஆர்யா நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி சூர்யா, கார்த்தி, விஷால் ஆகிய மூவரும் வெளியிட இருக்கிறார்களாம்.

மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை ஆர்யா தன் சொந்த நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

 

‘ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை அவர் கொடுப்பார்’ – சின்னி ஜெயந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாட்டை படத்தை தொடர்ந்து அன்பழகன் இயக்கியுள்ள படம் ரூபாய்.

இமான் இசையமைக்க, இயக்குனர் பிரபுசாலமன் தயாரித்துள்ளார்.

இதில் கயல் ஜோடியான சந்திரன், ஆனந்தி இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் சின்னி ஜெய்ந்த், மாரிமுத்து ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சின்னி ஜெயந்த கலந்து கொண்டு பேசியதாவது….

“ரூபாய் படம் அருமையாக வந்துள்ளது. தயாரிப்பாளருக்கு நன்றி.

மிகவும் யதார்த்தமான படங்களை கொடுப்பவர் இயக்குனர் பிரபு சாலமன்.

கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரஜினி நடிக்க வேண்டும். கபாலி அப்படியொரு படம்தான்.

அதுபோல் இயக்குனர் பிரபுசாலமன் ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை காட்ட வேண்டும். ரஜினியை அவர் இயக்கவேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக ரஜினியை போல் மிமிக்ரி செய்து காட்டினார்.

டைரக்டர் விலகல்; தனுஷின் ஹாலிவுட் கனவு நிறைவேறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் வெற்றி வாகை சூடிய தனுஷ், பாலிவுட்லும் வெற்றிக் கொடி நாட்டினார்.

அதன்பிறகு ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வந்தது.

இது பிரெஞ்ச் எழுத்தாளர் ரோமைன் பியுர்டேலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ‘தி எக்டார்டினரி ஜர்னி ஆப் த ஃபகிர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் மர்ஜானே சட்ரபி இயக்கவிருந்தார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் சூட்டிங்கில் தனுஷ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாலிவுட் நடிகைகள் உமா துர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இதில் தற்போது எதிர்பாராத விதமாக டைரக்டர் மர்ஜானே சட்ரபி திடீரென விலகியுள்ளார்.

வேறு ஒருவர் இயக்குவார் என்றாலும், அது யார்? என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

இதனிடையில், வட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா ரஜினி இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளதால், ஹாலிவுட் படம் எப்போது என்பது தெரியவில்லை.

தீபாவளி ட்ரீட்டை இரட்டிப்பாக தரும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக தெறி படத்தை கொடுத்தார் விஜய்.

எனவே தீபாவளிக்கும் விஜய்யிடம் இருந்து பைரவா விருந்தை எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

ஆனால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இவ்வருட தீபாவளிக்கு பைரவா டீசரை வெளியிட உள்ளார்.

ஆனால் ஒரு நாள் முன்பாக அதாவது நாளை 28ஆம் தேதி தொடங்கும்போது, நள்ளிரவு 12.01 மணிக்கு பைரவா டீசர் ரிலீஸ் ஆகிறது.

கூடவே இந்த டீசரை தீபாவளி முதல் திரையரங்குகளில் வெளியிடவும் பைரவா படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

 

‘இனி படமே கிடையாது…’ பிரபுசாலமனின் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொக்கி, மைனா, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.

இவர் காட் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ரூபாய். இப்படத்தை அன்பழகன் இயக்கியுள்ளார்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபு சாலமன் பேசும்போது…

ஒரு நல்ல இயக்குனர் அன்பழகன். மிகவும் அமைதியானர்வர்.

அவர் சொன்ன ஒன்லைன் ஸ்டோரி நிச்சயம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என இப்படத்தை எடுத்தேன்.

ஆனால் படத்தை தயாரித்து வெளியிடுவதற்குள் பெரும் பாடுபடுகிறேன்.

படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகவில்லை. காஸ்மோ வில்லேஜ் சிவா பின்னர் பேரம் பேசாமல் வாங்கி கொண்டார் அவருக்கு நன்றி.

ஆனால் இனி படங்களை தயாரிக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.

More Articles
Follows