கார்த்தி-விஜய்சேதுபதி உடன் இணையும் மேயாதமான் ப்ரியா

Meyaadha Maan fame Priya Bavani shankar next movie updatesசிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து வந்து இன்று வெள்ளித் திரை ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நாயகியாக அறிமுகமான மேயாத மான் திரைப்படம் கடந்த அக். 18ல் தீபாவளியன்று வெளியானது.

மெர்சல் படம் வெளியான சமயத்தில் இதுவும் ரிலீஸ் ஆனதால் இந்த மான் வந்த சுவடு தெரியாது என்றனர்.

ஆனால் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்வான விமர்சனங்களால் தற்போது படத்திற்கு நிறைய அரங்குகள் கிடைத்து வருகின்றது.

தற்போது விஜய்சேதுபதியுடன் ஜீங்கா படத்திலும் கார்த்தியுடன் ஒரு படத்திலும் நடிக்க பிரியாவுக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாம்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் “ரசிகர்களிடமிருந்து இந்த மாதிரியான வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை.

பெண்களை கொச்சைப்படுத்தாமல் உள்ள படங்களில் மட்டுமே நான் நடிப்பேன்.

நான் ஹீரோயினுக்கான மெட்டீரியல் கிடையாது.

நான் ஒரு சாதாரண பெண். நடிப்பு திறமையை மட்டுமே காட்ட விரும்புகிறேன். கிளாமராக நடிக்கமாட்டேன்,” என தெரிவித்துள்ளார்.

Meyaadha Maan fame Priya Bavani shankar next movie updates

Overall Rating : Not available

Related News

சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா…
...Read More
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத…
...Read More
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத…
...Read More

Latest Post