கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை ஆபீசுக்கு ஆபத்து.; மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ்

கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை ஆபீசுக்கு ஆபத்து.; மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ்

தமிழகத்தில் மக்கள் தொகை எட்டு கோடியாக இருந்தால் அதில் ஒரு கோடி மக்கள் மட்டும் சென்னையில் வாழ்கின்றனர்.

எனவே சென்னை நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த பிரச்சினையை சென்னை வாசிகள் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில அரசு பல்வேறு மேம்பாலங்களையும் மெட்ரோ ரயில் திட்டங்களையும் கொண்டு வருகின்றது.

தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வார்பேட்டை வழியாக மெட்ரோ ரயில் பாலம் செல்கிறது.

எனவே மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருக்கும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆழ்வார்பேட்டை பகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.

இங்கு மக்கள் நீதி மைய்யம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகம் போல செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் சுமார் 170 சதுர அடி மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்திலிருந்து 10 அடி வரையிலான நிலத்தை தங்களுக்கு வழங்கும் படி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சமயத்தில் கோயம்பேட்டில் மேம்பால பணிகளுக்காக அவரது திருமண மண்டபத்தில் சில பகுதிகள் இடிக்கப்பட்டது.

அங்கு தற்போது தேமுதிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Metro Administration Notice to Kamal Haasan’s Alwarpet office

விஜய் பட பெயரில் ‘கோமாளி’ இயக்குனர் ஹீரோவானார்.; 2 ஹீரோயின்ஸ் ஜோடி.!

விஜய் பட பெயரில் ‘கோமாளி’ இயக்குனர் ஹீரோவானார்.; 2 ஹீரோயின்ஸ் ஜோடி.!

2019 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ல் வெளியான படம் ‘கோமாளி’.

ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகி பாபு கேஎஸ் ரவிக்குமார் சம்யூக்தா உள்ளிட்டோர் பலர் நடித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

எனவே இயக்குனர் பிரதிப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் அடுத்த படத்தில் பிரதீப் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் 2002 ஜூலை 4ம் தேதி நள்ளிரவு பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு குறித்து போஸ்டர் வெளியாகியது.

இந்த படத்திற்கு ‘லவ் டுடே’ என்று டைட்டில் வைத்துள்ளனர். யுவன் இசையமைக்கிறார்.

ரவீனா இவனா யோகி பாபு சத்யராஜ் ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் என்பவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு மெசேஜ் செய்து கொண்டு கையில் தம் வைத்துக் கொண்டு பிரதிப் தன் கேர்ள் பிரண்டுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்புவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை முன்னாள் காதலி (காதல் தோல்வி) க்கு அர்ப்பணிப்பதாக பிரதீப் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பாலசேகரன் என்பவர் இயக்கிய ‘லவ் டுடே’ படம் வெளியானது.

இதில் விஜய்யுடன் சுவலட்சுமி ரகுவரன் கரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

முதலில் காதலை ஏற்க மறுத்து பின்னர் காதலிக்க தொடங்கும் காதலிக்கு காதலன் கொடுக்கும் சரியான பாடமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் அமைந்து இருந்தது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்போது இந்த லவ் டுடே என்ற தலைப்பை கோமாளி இயக்குனர் தான் நாயகனாக நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Comali’ director turns hero.; Yuvan composes music!

நிர்வாண கதாநாயகன்கள்.: அன்று அமீர்கான்..; இன்று விஜய் தேவரகொண்டா

நிர்வாண கதாநாயகன்கள்.: அன்று அமீர்கான்..; இன்று விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் திரைப்படம் ‘லைகர்’.

குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் இந்த படத்தில் உலக குத்துச்சண்டை நிஜ வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு மணி சர்மா இசையமைக்கிறார்.

கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ஆகஸ்ட் 25ல் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த இடத்தில் பூங்கொத்தை வைத்து மறைத்து நிர்வாணமாக நிற்கிறார் விஜய்.

அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, ”என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டது இந்தப் படம்.

நடிப்பிலும், மனதளவிலும், உடல் அளவிலும் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன்! விரைவில் வருகிறது ‘லைகர்” என குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு பிகே என்ற ஹிந்தி படத்தில் நடிகர் அமீர்கான் நிர்வாணமாக நடித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Liger Vijay Devarakonda poster creates controversy

கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.

பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். அண்மையில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார் மீனா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.

மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.

கணவர் மறைவுக்கு பின்னர் பல தவறான தகவல்கள் கிளம்பியது.

இந்த நிலையில் கணவர் இறப்புக்குப்பின் நடிகை மீனா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்….

“என் காதல் கணவர் வித்யாசாகர் இறப்பினால் நான் மிகவும் கவலையாக உள்ளேன்.

இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஊடகங்களும் எண்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும்.

மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் IAS ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Actress Meenas first statement after her husband death

BREAKING : நடிகர் விஷால் மீது 100 ரவுடிகள் தாக்குதல்.; ‘லத்தி’ பட சூட்டிங் ரத்து

BREAKING : நடிகர் விஷால் மீது 100 ரவுடிகள் தாக்குதல்.; ‘லத்தி’ பட சூட்டிங் ரத்து

விஷால் நடிப்பில் அவரது நண்பர்களும் நடிகர்களுமான நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் ‘லத்தி’.

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

ஏற்கனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20- நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30- நாட்கள்,

ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில், புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.

பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது.

பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இப்பொழுது இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார்.

கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கிறார்.

இந்த காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிக் கொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால்.

எழும்பி நின்று நிற்க முடியாமல், கீழேயே இருந்து விடுகிறார். உடனே அவருக்கு ‘பர்ஸ்ட் எயிட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அவரை மருத்துவரிடம் கூட்டி சென்று சிகிச்சை அளித்தார்கள். நல்ல வேளை எலும்பு முறிவு எதுவும் இல்லை. பிசியோ செய்தால் மேலும் என்று டாக்டர் சொல்ல, தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் விஷால்.

Actor @VishalKOfficial got INJURED Again in the Sets of #Laththi .

The Night Shoot was cancelled as #Vishal got a leg injury during shoot of final fight sequence happening at chennai.

The shoot will resume once the actor recovers.

@RanaProduction0 @actorramanaa
@nandaa_actor

Actor Vishal got INJURED Again in the Sets of Laththi .

சாய்பல்லவியின் ‘கார்கி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது 2D & SFF நிறுவனங்கள்

சாய்பல்லவியின் ‘கார்கி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது 2D & SFF நிறுவனங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி.

தமிழில் தனுஷ் உடன் ‘மாரி 2’ & சூர்யாவுடன் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார் சாய்பல்லவி.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

சாய் பல்லவியின் பிறந்தநாளை (மே 9) முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்து இருந்தனர்

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில்,…

“வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.

இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தனர் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ‘கார்கி’ படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூலை 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேலன் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிறுவனம் நேற்று வெளியான அருள்நிதி நடித்த D- BLOCK படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Suriya Jothika’s 2D to launch Sai Pallavis GARGI on 15th July 2022

More Articles
Follows