வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

வெளிநாட்டு திரைப்படத்துக்கான சிறந்த பட விருதை மெர்சல் வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalகடந்த 2017 வருடம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெர்சல்’.

விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் ரூ. 120 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் ஏழு நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மெர்சல், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர் லாபம் பெற சினிமா செழிக்க விஷால் யோசனைகள்

தயாரிப்பாளர் லாபம் பெற சினிமா செழிக்க விஷால் யோசனைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில கோரிக்கைகள் வைத்துள்ளார்.

அந்த கோரிக்கைகள் இதோ…

1. மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

2. டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று தரப்பினரும் படம்பார்க்க டிக்கட் கட்டணத்தை முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு , இரண்டாம் வகுப்பு , மூன்றாவது வகுப்பு, என முறைபடுத்த வேண்டும்.

3.தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரிண்ட் தந்ததுபோல் தற்போது படத்தை மாஸ்டிரிங் செய்து கண்டன்ட் தருகிறோம். ப்ரொஜக்டர் வைத்து திரையிடுவது திரை அரங்க உரிமையாளர்களின் பொறுப்பு.

4.அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யப்படும்போது அந்த படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சம்பளம் குறைக்க படவேண்டும்.

5. ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கபடுவதும்
திரையிடும் தியேட்டர்களில் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமலும் தனிநபர்களால் செய்யப்படுகிறது.

வசூல் தொகையில் மிகக்குறைவான சதவீதம் பணமே ஷேர் தொகையாக அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்கு பிறகே தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாக தயாரிப்பாளர்களுடன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம்-ஸ்டெர்லைட் போராட்டம்; கமல் பரபரப்பு பேச்சு

காவிரி விவகாரம்-ஸ்டெர்லைட் போராட்டம்; கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

* காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம்.

* காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

* தூத்துக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி அன்று மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்கிறேன்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி அல்ல, மத்திய அரசு நினைத்தால் அமைக்கலாம் .

* காவிரி விவகாரத்தில், எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால் பாராட்டுவேன்.

* காவிரிக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்பது அரசியல் பித்தலாட்டம்.

ஆகியவற்றைப் பற்றி கமல் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு : ரஜினி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் மார்ச் 29 உடன்
நிறைவடைகிறது.

காவிரி விவகாரம் பற்றியோ, தீர்ப்பு பற்றியோ ரஜினிகாந்த் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று தீவிரமாக நம்புவதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

மம்மூட்டிக்கு மருமகளாக ஓகே சொல்வாரா கீர்த்தி சுரேஷ்..?

மம்மூட்டிக்கு மருமகளாக ஓகே சொல்வாரா கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh and mammoottyநடிகையர் திலகம் என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

சாவித்ரியை போல் உள்ள கீர்த்தியின் படங்கள் வெளியானதுமுதல், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது எனலாம்.

இதனையடுத்து மற்றொரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கீர்த்திக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. அவர் ஓகே சொல்வாரா? என்பதுதான் இன்னும் தெரியவில்லை.

ஆந்திர முதல்வராக இருக்கும்போது ஒய்.எஸ்.ஆர். ரெட்டி காலமானார்.

அவரின் வாழ்க்கை வரலாறு (‘பயோபிக் ஃபிலிம்’) தற்போது ‘யாத்ரா’ என்ற பெயரில் படமாகவுள்ளது.

இதில் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியாக மம்மூட்டி நடிக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இவரின் மகன்தான் ஜகன்மோகன் ரெட்டி. இவரின் மனைவியாக அதாவது ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மருமகளாக நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அனுகி உள்ளதாம்.

இந்தாண்டு ஜூன் மாதம் சூட்டிங்கை தொடங்கி அடுத்த 2019 ஆண்டு ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவை தொடர்ந்து கவுதம்மேனனால் பாதிக்கப்படும் தனுஷ்-விக்ரம்-சூர்யா

சிம்புவை தொடர்ந்து கவுதம்மேனனால் பாதிக்கப்படும் தனுஷ்-விக்ரம்-சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director gautham menonகௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார் சிம்பு.

இந்த படம் தாமதம் ஆனதற்கு இயக்குனர்தான் காரணம் என சிம்பு தரப்பில் அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் கவுதம் மேனன்.

இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் காணப்பட்டது.

ஆனால் அந்த இரண்டு படங்களும் என்ன ஆனதோ? என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

எவரும் எதிர்பாராத நிலையில் கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில்.. கவுதம் மேனனை நம்பி மோசம் போனேன் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் இயக்கிய நரகாசுரன் படத்தை கௌதம் மேனன்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த படத்திற்கு வந்த நிலைமைதான் நெஞ்சம் மறப்பதில்லை பட நிலைமையும் என க்ளோ ஸ்டூடியோசின் இணைத் தயாரிப்பாளர் சித்தார்த் ராவ் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை செல்வராகவன் இயக்க, கௌதம் மேனன் தயாரித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கௌதம் மேனன் தயாரித்த படங்களும் இயக்கும் படங்களும் அடிக்கடி பிரச்சினைக்குள்ளாகி வருவதால் இந்த சம்பவங்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Articles
Follows