செப்டம்பர் 21 மற்றும் 24 தேதிகளில் மெர்சல் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் இப்பட இயக்குனர் அட்லி பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

எனவே இதனை வரவேற்க விஜய் ரசிகர்கள் இப்போதே ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதனையடுத்து மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சூர்யா டிவியில் (மலையாளம்) செப்டம்பர் 24ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது.

தமிழில் சன்டிவி இவ்விழாவை நேரலை என்று கூறி கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கு தாமதமாக ஒளிப்பரப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி இல்லாமல் காலா சூட்டிங்; மும்பை பறக்கும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெப்சி அமைப்பின் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து ரஜினியின் ‘காலா’ சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 70% காட்சிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை மிக வேகமாக திட்டமிட்டு படமாக்கி வருகிறார் ரஞ்சித்.

இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த படக்குழுவினருக்கு மிக திருப்தியாம்.

வருகிற அக்டோபர் மாத முதல்வாரத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிடுவாராம்.

அதன்பின்னர் மும்பை பறக்கும் படக்குழு அங்கு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள்.

அங்கு கிட்டதட்ட 3 வாரங்கள் சூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஜய் படத்தை எப்போது தொடங்குகிறார் ஏஆர்.முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தில் தனது முந்தைய படங்களைப் போல் இல்லாமல் விஜய்யை வேறொரு கோணத்தில் காட்டப்போகிறேன் என ஏஆர்.முருகதாஸ் முன்பே தெரிவித்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஜனவரியில் தொடங்கவிருக்கிறாராம்.

தற்போது விஜய்யுடன் நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

AR Murugadoss starts Vijay 62 shooting from January 2018

கடவுளுக்கும் அன்பானவளுக்கும் நன்றி… நயன்தாராவை புகழும் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ரௌடிதான் படத்தை இயக்கியபோதே நயன்தாராவின் காதல் வலையில் விழுந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நயன்தாராவுடன் கொண்டாடி வருகிறார் என்பதை பார்த்தோம்.

தற்போது அவரே அந்த படங்களை பகிர்ந்து தன் ட்விட்டரில் பகிர்ந்து நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது…

“இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி.

இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி? கல்யாணம் எப்போ விக்கி?

Vignesh Shivan says thanks to Nayanthara to made his life beautiful

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Have Never ever dreamt of havin a b’day like this! Thanking God first! & My Dear Sunshine For making this life soo beautiful & bright

சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் எல்லா தகவல்களை வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அனைத்து தகவல்களையும் நேற்று நள்ளிரவில் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி நடித்து வரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

இப்பட டீசர் செப்டம்பர் 27ஆம் தேதியும், ட்ரைலர் அக்டோபர் 17ஆம் தேதியும் படத்தை நவம்பர் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சதுரங்க வேட்டை பட இயக்குனர் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு இதில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஜிப்ரான் இசையமைக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

Karthis Theeran Adhigaram Ondru Teaser Trailer Movie Release date updates

ஒருவழியாக விழித்திரு பட ரிலீசுக்கு விடை கிடைத்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில படங்கள் தான், ரிலீஸ் தாமதம் ஆனாலும் அதன் எதிர்பார்ப்பு என்றுமே குறையாமல் இருக்கும்.

கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா நடிப்பில் தயாரான ‘விழித்திரு’ தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் கூறியதாவது…

” இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள ‘சவுந்தர்யன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக.

தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

Finally Vizhithiru movie got release date on October 2017

 

More Articles
Follows