தமிழக ரசிகர்களை மிரளவைக்கும் கேரளா விஜய் ரசிகர்கள்

தமிழக ரசிகர்களை மிரளவைக்கும் கேரளா விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal kerala celebrationsவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள மெர்சல் திரைப்படம் நாளை மறுநாள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவில் விஜய்யின் மார்கெட் அதிகளவில் உயர்ந்து வருகிறது.

கேரளா திரையுலகினரே ஆச்சரியப்படும் வகையில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய்யின் ஆண்கள் மற்றும் பெண் ரசிகர்கள், பொது இடத்தில் மெர்சல் கட் அவுட்களை வைத்து விஜய்யின் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களை விட்டால் நம்மளையே மிஞ்சிவிடுவார்களே என தமிழக விஜய் ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் பார்த்து வருகிறார்களாம்.

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 கைவிடப்பட்டதா..?

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 கைவிடப்பட்டதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal with shankarஇந்தியன் படம் வெற்றிப் பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் கமல் ஷங்கர் இணையவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த வதந்திகளை மறுத்துள்ளது.

மெர்சலை திரையிட மாட்டோம்; தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

மெர்சலை திரையிட மாட்டோம்; தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

???????????????????????????????????????????????????????விஜய், அட்லி, ஏஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் நாளை மறுநாள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த தீபாவளியை மெர்சலாக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான காசி தியேட்டரிலும் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இங்கு ரிலீஸ் அன்று முதல் நாள் வந்து ரசிகர்களின் பல்ஸ் பார்க்கும் வழக்கம் திரைத் துறையினருக்கு உள்ளது.

ஆனால் படத்தயாரிப்பு விதித்துள்ள சில நிபந்தனைகளை ஏற்க மறுத்த தியேட்டர் நிர்வாகம் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டதாம்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mersal will not be screened at Chennai Kasi theater

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prashanth in Rajini movie title Johnnyகடந்த 2016ல் வெளியான சாகசம் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த்.

வெற்றிச் செல்வன் இயக்கும் இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இது தொடர்பான சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இப்படத்தில் பிரசாந்துடன் நடித்துள்ள சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜானி என பெயரிட்டுள்ளனர்.

இதே பெயரில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படம் கடந்த 1980 வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Prashanth in Rajini movie title Johnny

மெர்சலுக்காக விலங்குகள் நலவாரிய நடைமுறை மாற்றப்படுமா..?

மெர்சலுக்காக விலங்குகள் நலவாரிய நடைமுறை மாற்றப்படுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie Animal welfare department certificate issueநடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக வருகிறது.

இப்படம் தலைப்பு வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வரவுள்ளது.

ஆனால் இப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பிரச்சினையில் விலங்குகள் நலவாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த விஜய் இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விலங்குகள் நலவாரியத்தின் சர்ட்டிபிகேட் புதன்கிழமைதான் வழங்கப்பட்டு வருகிறதாம்.

ஆனால் புதன்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாப்படுவதால் அதற்கு முன்பே சர்ட்டிபிகேட் பெற மெர்சல் படக்குழு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே இதுகுறித்த அவரச கூட்டம் இன்று (அக். 16) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Mersal movie Animal welfare department certificate issue

நடிகர் சங்கத்துக்கு புதிய சங்கம்.?; உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கினார் ராதாரவி

நடிகர் சங்கத்துக்கு புதிய சங்கம்.?; உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கினார் ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

new nadigar sangam invitationதமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழாவில் சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

அதன் விபரம் வருமாறு :

மயில்சாமி : S.V. சேகர் அவருக்கு பிடித்த காமெடி நடிகராக என்னைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள், எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே, நீ முதலில் நல்லவனாக இருந்து பார் என்று கூறியுள்ளார்.

இந்த சங்கம் நடிகர் சங்கத்திற்கு எதிரானது அல்ல. புதுமுக நடிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு மயில்சாமி பேசினார்.

S.V. சேகர் :
சங்கங்களை அதிகப்படுத்துவதைவிட, இருக்கும் சங்கத்தை பலப்படுத்த வேண்டும். எனக்கும், ராதாரவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் மீண்டும் நட்பு கொள்பவர் ராதாரவி. சங்கம் எப்போதும் ஒரே நோக்கோடு செயல்பட வேண்டும். உங்களுடைய வேலைவாய்ப்பு உங்களுடைய உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே கிடைக்கும். சம்பள நிர்ணயத்தில் அனுசரிப்பு வேண்டும்.

J.K. ரித்திஷ் : 4 செங்கல் வைத்துவிட்டு ஏதோ சாதிக்க போவதாகக் கூறி யாரை நீக்கினீர்களோ, அவர்களை இன்றிலிருந்து மூன்று மாதத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைப்பேன். பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. இன்னும் 11 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. வருகிற தேர்தலை உங்களுடைய தேர்தலாக கருதி எங்களைத் தேர்ந்தெடுங்கள் என்று தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு J.K.ரித்திஷ் வேண்டுகோள் விடுத்தார்.

ராதாரவி : சினேகன் என்னைப் பள்ளிக்கூடம் என்றுக் கூறினார். ஆனால் நானும் புதுமுகம் தான். விமர்சனங்களைப் பற்றி கவலை கொண்டால் வெற்றியடைய முடியாது.

நக்கீரனில் கர்ஜனை என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன். 14 வருடம் தலைவர் பதவியிலும், இன்னும் சில பதவிகளிலும் இருந்திருக்கிறேன், கணக்கில் எம்.ஜி.ஆர், S.S.R. காலத்திலிருந்தே குளறுபடி இருக்கின்றது. அழகாக இருந்தாலும் நம்மூர் பெண்களை மதிக்கமாட்டார்கள்.

எங்கேயோ மும்பையிலிருந்து தேடிப்பிடித்து தமிழ்த்தாயின் கற்பைப் பறிக்கக்கூடிய அளவில் தமிழ் பேசும் நடிகைகளைக் கூட்டி வருவார்கள். இதுதான் உங்களுக்கு தாய் வீடு என்று வலியுறுத்தினார்.

மேலும், இது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு போட்டியான சங்கம் அல்ல.

‘நாடகம் ரசிகனை உருவாக்கும்; சினிமா வெறியனை உருவாக்கும்’. உங்கள் பெயர்களை நீங்கள் தான் மாற்ற வேண்டும். ஒன்று நினைத்து விட்டால் அதை முடிக்காமல் விடமாட்டார் ரித்திஷ்.

எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும் முதலில் செங்கல் தான். மைசூர் மஹாராஜாவே இருந்தாலும் பிறக்கும் போது குழந்தை தான்.

அதேபோல் இக்கூட்டத்திலும் ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, ராதிகா இருக்கிறார்கள். எல்லா பொதுக்குழு கூட்டத்திற்கும் இந்தளவு கூட்டம் இருக்க வேண்டும். சந்தா முறையாக செலுத்த வேண்டும். நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன்.

தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். உறுப்பினர்களில் யாராவது இறந்துவிட்டால் வேலை இல்லாதவர்கள் இறுதி வரை செல்ல வேண்டும் என்று ‘டத்தோ’ ராதாரவி வலியுறுத்தி பேசினார்.

மாற்று திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மிஸ்டர் இந்தியா ராஜேந்திரன் சங்கத்தை வாழ்த்தி பேசினார்.

எங்களையும் மதித்து இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து, நன்றியுரையாற்றினார் திருநங்கை நமிதா.

கிச்சா ரமேஷ் இவ்விழாவை ஏற்பாடு செய்தார். விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக, புதுமுக நடிகர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Radha Ravi speech at Tamilnadu Pudhumuga Nadigargal Sangam at Chennai

nadigar sangam new meet

More Articles
Follows