வேலைக்காரன் படத்தை வாங்கிய மெர்சல் புரொடியூசர்

வேலைக்காரன் படத்தை வாங்கிய மெர்சல் புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal producer Sri Thenandal films bought Chengalpet rights of Velaikkaranமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளதால் தற்போது பட விநியோகத்தை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதன் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற ஏரியாக்களை வாங்கிய நிறுவனங்கள்…

#Velaikkaran TN Our Distributors…
1. Chennai city – 24am studios through SPI cinemas
2. Chengalpet – sri thenandal films
3. Cbe – Kanthaswamy arts centre
4. 23MR – Sushma cine arts
5. TT – Boss films international
6. Salem – Five star picture
7. North n South – S picture
8. TK – Zion films

ஆடியோ மற்றும் டிவி உரிமை

9. Audio – Sony music
10. Satellite – Vijay TV

Mersal producer Sri Thenandal films bought Chengalpet rights of Velaikkaran

ராகவேந்திர ஆலயத்தில் ரஜினியிடம் மடாதிபதி வைத்த கோரிக்கை

ராகவேந்திர ஆலயத்தில் ரஜினியிடம் மடாதிபதி வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini has visited Manthralayam today at Andhra Pradeshசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக ஈடுபாடு நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் சென்று வந்துள்ளார் ரஜினி.

இந்த மந்த்ராலயம் ஆந்திர, கர்னூலில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது.

மந்த்ராலயம் சென்ற ரஜினி, அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார்.

ரஜினியின் திடீர் வருகையை முன்னிட்டு அவருக்கான விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அங்குள்ள மடாதிபதியிடம் ஆசி பெற்றுள்ளார் ரஜினி.

அந்த வீடியோ தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா?

ஏனென்றால், இங்கு செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை நீங்கள் பார்வையிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அவசரம் எல்லாம் இல்லை. நான் மற்றொரு இடத்துக்கு போக வேண்டும்.

இங்கே பொதுமக்கள் கூடுவதற்குள் நான் வெளியே செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajini has visited Manthralayam today at Andhra Pradesh

மெர்சல் படத்தில் நீங்க நடிச்சிருந்தா..? விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

மெர்சல் படத்தில் நீங்க நடிச்சிருந்தா..? விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If i have acted in Mersal movies says Vijayakanthமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்கள் ஏற்படுத்திய பரபரப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு பாஜக. எதிர்ப்பு தெரிவிக்க படம் வசூல் சாதனை புரிய தொடங்கியது.

இந்நிலையில் மெர்சல் படம் குறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது கூறியுள்ளதாவது…

மெர்சல் படத்தில் நீங்கள் நடித்திருந்தால் எழுந்த பிரச்சனைகளை எப்படி சந்தித்தித்து இருப்பீர்கள்? என நிருபர்கள் கேட்டுள்ளனர்.

நான் நடித்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

மெர்சல் படத்தை இப்போது வரை பார்க்கவில்லை அதனால் அதை பற்றி பேச முடியாது. பார்த்தால் படத்தை பற்றி பேசலாம்.

முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்” எனவும் பதிலளித்தார் விஜயகாந்த்.

ரஜினியின் இரண்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்

ரஜினியின் இரண்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayசூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் இந்தியா அறிந்த ஒன்றுதான்.

அவரது படங்கள் படைக்கும் வசூல் சாதனைகளை அவ்வளவு எளிதாக யாராலும் முறியடித்து விடமுடியாது.

ஆனால் அண்மையில் கபாலி பட டீசர் படைத்த சாதனையை விஜய்யின் மெர்சல் டீசர் முறியடித்த்து.

அதாவது… கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வைகளைப் பெற்றிருந்தது. மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்று முறியடித்துவிட்டது.

தற்போது மற்றொரு சாதனையையும் மெர்சல் நிகழ்த்தியுள்ளது.

இது வரை யு-டியூபில் தமிழ் படங்களில் Lyrics வரிகள் வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருந்தது.

தற்போது மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் Lyrics வரிகள் கொண்ட வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளது.

Vijays Mersal movie beat Rajinis Kabali movie two records

நட்சத்திர கலை விழாவில் அஜித்; கொள்கையை மாற்றி விட்டாரா தல.?

நட்சத்திர கலை விழாவில் அஜித்; கொள்கையை மாற்றி விட்டாரா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith may participate in Nadigar Sangam function at Malaysia 2018அடுத்த வருடம் 2018 ஜனவரி மாதம் மலேசியா நாட்டில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

அத்துடன் கிரிக்கெட் மற்றும் புட்பால் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட சீனியர் கலைஞர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சி மற்றும் தன் பட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாத அஜித் இதில் கலந்துக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இம்முறை சீக்கிரம் சொல்றேன் என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அஜித் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கொள்கையை மாற்றிவிட்டாரா அஜித்? என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.

Ajith may participate in Nadigar Sangam function at Malaysia 2018

தீரன் சூட்டிங் முடித்து 15 முறை பேஸ்வாஷ் செய்த அபிமன்யுசிங்

தீரன் சூட்டிங் முடித்து 15 முறை பேஸ்வாஷ் செய்த அபிமன்யுசிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran movie villainதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங்.

இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.

தீரன் படம் பற்றி வில்லன் அபிமன்யு சிங் தன் பேட்யில் கூறியுள்ளதாவது…

நடிகர் கார்த்தியை பற்றி பேசும் போது…

கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும், முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார்.

அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய பங்களிப்பால் ஒட்டுமொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கண்ணியமானவர், கடின உழைப்பாளி அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.

இயக்குநர் வினோத் பற்றி பேசும்போது…

இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். இயக்குநர் வினோத் எப்போதும் மிக சிறந்த வேலையை எதிர்பார்ப்பார்.

காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம், தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.

படபிடிப்பு தளத்தில் நடந்த மறக்கமுடியாத கடினமான நிமிடங்களை பற்றி கூறும்போது…

நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது. சூட்டிங் முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும்.

அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது” என்றார் அபிமன்யு சிங்.

I used to do face wash 15 times while shooting Theeran says Abimanyu Singh

More Articles
Follows