காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.

இவையில்லாமல் மேலும் அதில் மீரா பேசியதாவது…

“தமிழ் பேச தெரிந்த ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு பிடிக்காது.

இங்கு மற்ற மொழி பேசும் பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள். காரணம் இவர்களின் ஆசைக்கு அவர்கள் இணங்குகிறார்கள்.

என் மீது எல்லோருமே ஆசைப்படுவது தான் என்னோட இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் மீராமிதுன்.

Meera Mithun said even Gandhi and Nehru has gone to jails

அஜித் & சிம்பு படங்களின் அடுத்த சிங்கிள்ஸ் ரெடி.; மாஸ் காட்டும் யுவன்

அஜித் & சிம்பு படங்களின் அடுத்த சிங்கிள்ஸ் ரெடி.; மாஸ் காட்டும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.

இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.

இந்த் படத்தின் முதல் சிங்கிள் ‘மெஹர்சிலா’ ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானது.

எனவே ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க அவ்வப்போது ‘வலிமை’ மற்றும் ‘மாநாடு’ பட அப்டேட்டையும் கொடுத்து வருகிறார் யுவன்.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்டார்,

சீக்கிரமே ‘வலிமை, மாநாடு’ படங்களின் அடுத்த சிங்கிள் வர உள்ளது, யுவன் ரெடி செய்துவிட்டார்,” என வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

Ajith and Simbu films next single is out soon says Yuvan

ரஜினி விஜய் கமலை அடுத்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

ரஜினி விஜய் கமலை அடுத்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த கேரக்டர் என்றாலும் எந்த மொழி என்றாலும் தன் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய்சேதுபதி.

தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறி வருகிறார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக ’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.

தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இநிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளாராம்.

அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே ’உப்பென்னா’ என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi to play antogonist in Bala Krishna movie

சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி உடன் டூயட் பாடும் ஷில்பா

சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி உடன் டூயட் பாடும் ஷில்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார்.

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

Actress Shilpa Manjunath joins the cast of Natty’s psycho thriller.

JUST IN தல-தளபதி திடீர் மீட்டிங்..; சந்திப்பின் பின்னணி இதுதானா.?

JUST IN தல-தளபதி திடீர் மீட்டிங்..; சந்திப்பின் பின்னணி இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் தளபதி என்றால் அது விஜய். தல என்றால் அஜித்.

அதுபோல் அரசியலில் தளபதி என்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.

கிரிக்கெட்டில் தல என்றால் மஹேந்திர சிங் தோனி தான்.

இந்த நிலையில் கிரிக்கெட் தல தோனியும் சினிமா தளபதி விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ பட சூட்டிங்கில் விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.

அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Reason behind Thalapathy Vijay and Thala Dhoni recent meet

ரஜினிகாந்த் பட சூட்டிங் நிறுத்தம்..; கீர்த்தி சுரேஷ் ஜோடியாக அஜித் தம்பி..?

ரஜினிகாந்த் பட சூட்டிங் நிறுத்தம்..; கீர்த்தி சுரேஷ் ஜோடியாக அஜித் தம்பி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, பாலா என நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிவா இந்த படத்தை இயக்க இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

“சூப்பர்ஸ்டார் ரஜினி போன்ற ஜாம்பவானுடன் இணைந்து நடிப்பது பெருமை. அண்ணாத்த படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார் பாலா.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தார் பாலா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சூட்டிங் நடந்து வருகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி இருப்பார் என ரசிகர்கள் அங்கு அதிகளவில் திரண்டுள்ளனர். ஆனால் அங்கே பிரகாஷ் ராஜ் காட்சிகளை படமாக்கினாராம் சிவா.

முறையாக அரசு அனுமதி பெற்று சூட்டிங் நடத்தினாலும் ரஜினிக்காக கூட்டம் அதிகளவில் கூடியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாம்.

Ajith’s brother to romance Keerthy Suresh in Annaatthe

More Articles
Follows