அஜித் கூட ஆல்ரெடி நடிச்சிட்டோம்ல.; தல ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா? என பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நான் ஆல்ரெடி அஜித் கூட நடிச்சிட்டேன் என ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

நாம தல படத்தை ஒரு படம் விடாம பாத்துருக்கோம்.. இந்த நடிகை எந்த படத்தல நடிச்சாங்க அப்படின்னு தல ரசிகர்களுக்கே ஷாக்கான விஷயம் ஆகிவிட்டது.

‘என்னை அறிந்தால்’ படத்தில் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய காட்சி படத்தில் இடம்பெறவில்லை எனக் கூறி அந்த காட்சி போட்டோவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun reveals that she already acted with Ajith

லாக் டவுன் சூட்டிங்; கௌதம் சொல்ல சொல்ல தன்னை இயக்கிய த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கில் மக்களை வீட்டிலேயே வைத்திருக்க பல பல யுக்திகளை சினிமா கலைஞர்கள் செய்து வருகின்றனர்.

வெளியே செல்லாமல் மொபைலில் சூட்டிங் நடத்தி எடிட்டிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில் ஃபேமிலி என்ற குறும்படத்திற்காக அமிதாப், ரஜினி, மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் வீட்டிலேயே இருந்து நடித்து கொடுத்தனர். பின்னர் எடிட்டர் அந்த வீடியோக்களை இணைத்து வெளியிட்டார்.

அந்த குறும்படத்தின் மூலம் கிடைத்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர்.

அதுபோல் கமல்ஹாசனும் அன்பும் அறிவும் என்ற பாடலை தங்கள் வீட்டில் இருந்தபடியே பல பாடகர்களை அவர்களை வைத்து இயக்க சொல்லி அந்த பாடலை வெளியிட்டார்.

தற்போது இயக்குனர் கௌதம் மேனன் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் த்ரிஷா நடித்துள்ளார்.

வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு ஆக்டிங்கை கௌதம் சொல்ல சொல்ல அதை த்ரிஷா செய்துள்ளார்.

இதை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதை த்ரிஷா படமாக்கி எடிட்டிங்கிற்காக அனுப்பியுள்ளார்.

விரைவில் இக்குறும்படம் வெளியாகும் என தெரிகிறது.

Trisha and Gautam menon team up again even in lock down

பிக்பாஸ் 4 சீசனுக்கு தயாராகும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தொடங்கிய போது அவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லை என்று பலரும் விமர்சித்தனர்.

ஆனால் பிக்பாஸ் சீசன் 1, 2, 3 என 3 எபிசோடுகளை கடந்து விட்டது. தற்போது கமலை தவிர யாரும் அதை சிறப்பாக வழங்கிவிட முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக சூட்டிங் தொடங்கப்பட உள்ள நாட்கள் தெரியவில்லை.

ஆனால் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நிச்சயம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி உறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் தன் இடுப்பழகை காட்டி இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்தவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Will Ramya Pandiyan is a part of Bigg Boss season 4

அதெல்லாம் காட்ட முடியாது.. ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் வருமானமின்றி மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மக்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர்.

ஒரு சில பிரபலங்கள் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங் செய்கின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னி ராஷ்மிகா ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ஒருவர், “வீடியோ மூலம் உங்க வீட்டை சுற்றிக் காட்டுங்கள் ப்ளீஸ்”, என கேட்டுக் கொண்டார்.

ஆனால் ராஷ்மிகாவோ முடியாது என மறுத்துவிட்டார். “வீடு என்பது எனது தனிப்பட்ட இடம். எனவே காட்ட முடியாது” என மறுத்துவிட்டார்.

Actress Rashmika Mandannas recent chat with her fans

படையப்பாவுக்கு அமேசானில் தடையப்பா..; ரஜினிகாந்த் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம் ‘படையப்பா’.

இந்த படத்தை தன் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

1999ல் வெளியான இந்த படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அண்மையில் படையப்பா படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் அதன் ஓடிடி தளத்தில் அப்லோட் செய்திருந்தது.
இதன் உரிமையை யாரோ ஒரு நபர் அமேசானுக்கு விற்றுள்ளார்.

படத்தயாரிப்பாளர் ரஜினிகாந்த் தரப்பில் இதன் உரிமை குறித்து கேள்வி கேட்கவே ‘படையப்பா’ படத்தை உடனடியாக அதன் தளத்திலிருந்து நீக்கிவிட்டது அமேசான் நிறுவனம்.

Here is reason Why Padaiyappa removed form Amazon Prime

உங்க பேச்சு புரிய மாட்டேங்குதே; விஜய்சேதுபதி கேள்விக்கு கமல் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 2ஆம் தேதி தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசினார் கமல்.

இவரை நடிகர் விஜய்சேதுபதி கேள்வி கேட்டார்.

அப்போது… உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாமே, இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என கேட்டார் விஜய்சேதுபதி.

இதற்கு எவருமே எதிர்பாராத வகையில் கமல் அதிரடியாக ஒரு பதிலை தந்தார்.

ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் மக்களுக்கு புரியனும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள்.

பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம்.

நான் இப்படித்தான். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் – பெயர்க் காரணம் என்ன என்று கேட்டார் விஜய்சேதுபதி.

மய்யம் எனும் சொல் என்னை மையம் கொண்ட சொல். புயலின் மையம் அமைதியான இடம் அது. புயலின் கண் என கூறுவார்கள் அங்கு புயலே இருக்காது.

எனக்கு அந்த வார்த்தை பிடித்த ஒன்று. ஆங்கிலத்தில் பார்த்தால் சென்டர் என கூறுவர். மக்கள் என்பது பரந்த சொல் உலகமே அது தான். கம்யூனிசம் என கூறும் போது கம்யூன் எனில் யாராக வேண்டுமானால் இருக்கலாம்.

மக்கள் கேட்டு வருவது நீதி ஒன்று தான் அதற்கு போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும். என கமல் தெரிவித்தார்.

Kamal clarifies Maiam Party name and his tweets

More Articles
Follows