தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்னும் பொன்மொழிகேற்ப முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட ஃபேஷன் ஷோ நடைபெற்றது.
திரை நட்சத்திரங்களின் குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வை பிரபல நடிகை மீனா மற்றும் அவரது மகளும் குழந்தை நட்சத்திரமானா ‘தெறி’ புகழ் பேபி நைனிகா தொடங்கி வைத்தனர்.
அப்பொழுது “மாஸ்டர் அண்ட் பேபி அவார்ட்ஸ் ” இந்தியாவின் முதன்முதல் குழந்தைக்கான ஃபேஷன் அலங்கார காட்சி நிகழ்சசியின் லோகோ மற்றும் வலை தளத்தையும் தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு prayforchennai.org என்ற சமூக தொண்டு நிறுவனத்திற்கு செல்லும்.
‘சைவம்’ புகழ் பேபி ரே, சிறுத்தை புகழ் பேபி ரக்ஷ்னா, ஒளிப்பதிவாளர் RD ராஜசேகரின் குழந்தைகள், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸின் குழந்தைகள், பாடலாசிரியர் பா. விஜய் குழந்தைகள்.
ஜோடி நம்பர் ஒன புகழ் ஹீத் மற்றும் ரிதுவா ஆகியோர் பங்கேற்றனர். பலவாறு நகரகியாக உடையலங்காரத்தில் அவர்கள் ரேம்ப் வாக் செய்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இம்மாதிரி போட்டிகள் மேலும் நடை பெறவுள்ளதாகவும் அதன் விவரங்கள் http://masterandbabyawards.com/tn/ வலைதளத்தில் இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Meena and Nainika participated in The Master and Baby Awards Fashion Show