கபாலி ரிலீஸ் தேதியில் ரஜினிக்கு மெடிக்கல் செக்கப்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டியும், உலக அமைதிக்காகவும் அவரது அண்ணன் சத்யநாராயணா தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.

கும்பகோணம், திருநாகேஸ்வரம் மற்றும் தஞ்சை கோயில்களில் அவர் வருகை தந்தபோது சத்யநாராயணா அளித்த பேட்டியை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் கபாலி வெளியாகும் என கூறப்படும் ஜூலை 15ம் தேதியில்தான் மீண்டும் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறாராம்.

இதுகுறித்து சத்யநாராயணா கூறியதாவது….

“உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

மீண்டும் பரிசோதனை செய்வதற்கு ஜூலை 15ம் தேதி அப்பாயிண்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

விரைவில் அவர் திரும்பி வருவார். மக்கள் ரஜினியின் வருகையை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவருக்காக உயிரை கொடுக்கவும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினியை வாழ வைத்து கொண்டிருப்பது தமிழக மக்கள்தான்.

அதற்கு ரஜினி எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு…

“அரசியலுக்கு வருவதை பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்”. என்று தெரிவித்தார்.

விஜய்-அஜித் பட இயக்குனருக்கு ‘அழுகிய தேங்காய் விருது’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா கலைஞர்களை கௌரப்படுத்தவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக மோசனமான படங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதுபோன்ற விருதுகளை மோசமான மலையாள படங்களுக்கும் மட்டும் வழங்கி வருகிறது.

ராட்டன் கோகனட் அவார்டு எனப்படும் அட அதாங்க ‘அழுகிய தேங்காய் விருது’ என்கிற பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை கூட யாராச்சும் வாங்க வருவாங்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த விருதுகள் அறிவிக்கப்படுமே தவிர வழங்கப்பட மாட்டாது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த மோசமான விருது ‘சாம்ராஜ்யம்-2’ படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பேரரசு இயக்கிய இப்படத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்தார்.

விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி மற்றும் அஜித்தின் திருப்பதி படங்களை இயக்கியவர் பேரரசு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன் மம்மூட்டி நடிப்பில் ‘சாம்ராஜ்யம்’ முதல் பாகம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’க்கு பிறகுதான் கன்பார்ம் பன்னுவோம்… தனுஷ் வெயிட்டிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி முதலில் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அப்படம் தள்ளிப்போனதால் அன்றைய தினத்தில் ஜாக்சன் துரை, அப்பா, பைசா உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது.

தற்போது ஜூலை 15ஆம் தேதி கபாலி ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல நட்சத்திரங்களும் தயாரிப்பாளர்களும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தங்கள் படங்களை வெளியிட இருக்கிறார்களாம்.

இதில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய தனுஷின் தொடரி படமும் காத்திருக்கிறது.

இவை மட்டுமின்றி நிறைய படங்களும் கபாலியை கன்பார்ம் செய்த பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

எனவே எந்த போட்டியும் இன்றி ‘கபாலி’சிங்கம் சிங்கிளாதான் வரும் போல

அஜித்-விக்ரமை முந்தி ரஜினி, விஜய் சூர்யா கமலுக்கு அடுத்து சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா படங்களுக்கு இந்தியாவை தாண்டியும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே பல முன்னணி நிறுவனங்கள் வெளிநாட்டு விநியோக உரிமையை செய்து வருகின்றது.

இதில் ஐங்கரன் நிறுவனம் ஒரு முக்கியமான நிறுவனம்.

அண்மையில் இந்நிறுவனம் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வெளிநாட்டு உரிமை வியாபாரம் பற்றிய தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்…

ரஜினிகாந்த் படங்கள் : ரூ. 30 கோடி

விஜய் படங்கள் : ரூ. 22 கோடி

சூர்யா படங்கள் : ரூ. 20 கோடி

கமல் படங்கள் : ரூ. 15 கோடி

சிவகார்த்திகேயன் படங்கள் : ரூ. 10 கோடி

அஜித் படங்கள் : ரூ. 8 கோடி

விக்ரம் படங்கள்: ரூ. 7 கோடி

சிம்பு படங்கள் : ரூ. 6 கோடி

இவ்வாறு அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

கீர்த்தியுடன் டூயட் பாட விஜய் எங்கு செல்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவுள்ளது.

இதனிடையில் தனது குடும்பத்தாருடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்றிருக்கிறார் விஜய்.

வருகிற ஜுலை மாதம் 7ஆம் தேதி சென்னை திரும்புகிறாராம்.

இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்லவிருக்கிறது இப்படக்குழு.

அங்கு விஜய் – கீர்த்தி சுரேஷ் இடம்பெறும் டூயட் பாடல்கள் மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம்.

‘இளையராஜாவுக்கு பாட்டு எழுதிய முதல் கவிஞர் முத்துலிங்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது.

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பத்திரிகையாளர் சங்கர், எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது…

“இந்த புத்தகத்தின் ஆசிரியர் தேனி கண்ணன் எனக்கு பத்தாண்டுகளாக பழக்கமுள்ளவர் தஞ்சையில் பிறந்த இவர் அந்த நினைவுகளை எழுதும்போது என் நிர்வாண காலத்து நினைவிடம் தஞ்சையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது கவித்துவமாக அமைந்திருக்கிறது. இது நா.காமராசன் எழுதிய ‘தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்’ என்ற நூலில் எழுதிய நீரின் அரவணைப்பு இல்லையென்றால் நில மடந்தை விதவையாகிவிடுவாள்’ என்று குறிப்பிட்டிருப்பார்.

இதேபோல அவர் ‘நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைகள் வாங்குவதற்கு என்றும் எழுதியிருப்பார். இதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இயல்பிலேயே கவிதை உள்ளம் இருந்தால்தான் கவிதை எழுதமுடியும்.

அப்படி இந்த நூலில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். இப்போதெல்லாம் வாத்தியார் வேலை செய்பவர்களுக்கூட கவிதை எழுதத் தெரிவதில்லை.

எனக்கு என் தாய் பாடிய தாலாட்டு பாடலைக் கேட்டுத்தான் நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். என் தம்பி தங்கைகளுக்கு பாடும்போது…

மல்லிகையால் தொட்டிலிட்டால்
வண்டுவந்து மொய்க்குமுன்னு,
மாணிக்கத்தால் தொட்டிலிட்டால்
என் புள்ளயோட மேனியெல்லாம் நோகுமுன்னு
வைரங்களால் தொட்டிலிட்டால்
வானிலுள்ள நட்சத்திரம் ஏங்குமுன்னு
மஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
நித்திலமே நீயுறங்கு பொன்னே நீயுறங்கு பூமரத்து வண்டுறங்கு
கண்ணே நீயுறங்கு கானகத்து சங்குறங்கு…

என்று பாடுவார்கள்.

நான் இதை மாற்றி இட்டுக்கட்டி பாடிப் பார்ப்பேன். இதை அப்படியே சினிமாவிற்கு வந்த பிறகு திரைப்பாடலில் பயன்படுத்தினேன்.

கே.சங்கர் எடுத்த படத்தில் தாலாட்டு பாடலில் நான் எழுதியபோது, அந்த தயாரிப்பாளர் பாடலை மாற்றி எழுதச் சொன்னார் ஏன் என்று கேட்டேன் படத்தின் ஆரம்பத்திலேயே தாலாட்டு பாட்டு வருது தூங்குற மாதிரி வரிகளை நீங்க எழுதியிருக்கீங்க. படம் தூங்கிடக்கூடாது. அதனால் ஆடம்மா ஓடம்மா என்று மாற்றி எழுதிக் கொடுத்தேன்.

ஆனாலும் படம் ஓடவில்லை. சினிமாவில் சென்டிமெண்ட் என்கிற பெயரில் மூடநம்பிக்கை பரவியிருக்கிறது.

இதேபோல தமிழில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பதட்டம் என்று சொல்லக்கூடாது பதற்றம் என்றுதான் சொல்ல வேண்டும் சுவரில் என்றுதான் சொல்ல வேண்டும் சுவற்றில் என்று சொல்லக்கூடாது.

அருகில் என்று சொல்வதற்கு பதிலாக அருகாமையில் என்று சொல்லிவருகிறார்கள் இது தொலைவு என்கிற பொருளைக் குறிக்கும். இந்த தவறை முதலில் பரப்பியது கருணாநிதிதான். இதை நான் பல மேடைகளில் சொன்ன பிறகு மாற்றிக்கொண்டார்கள்.

இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு நடிகர்கள் உதவிய பல சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. ஆனந்த் தியேட்டரில் மேலாளராக இருந்த கலயாணம், நடிகர் விவேக் போன்றவர்கள் செய்த உதவிகளை பதிவு செய்திருக்கிறார்.

கொடுக்கக்கூடிய மனம் படைத்தவர்களுக்கு ஒரு நாளும் சரிவு வராது. எம்.ஜி.ஆர். என்னிடம் பேசும்போது நாடகங்களில் நடிக்கும் சமயத்தில் பத்து ரூபாய் சம்பளம் என்றால், அதில் ரெண்டு ரூபாய் தர்மத்துக்கு கொடுத்து உதவுவேன்.

நீங்களும் வளர்ந்த பிறகு பிறருக்கு உதவுங்கள் என்றார். உதவி செய்யும் மனிதர்களை ஔவையார் பலா மரத்துக்கு இணையாக சொல்வார்.
எம்.எஸ்.வி அவர்களோடு நான் பணியாற்றிய நேரத்தில் ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர், லதா பாடுவது போன்ற பாடல் காட்சி. அதற்கு பாடலை எழுதினேன். ”அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்.

உன் அங்கங்களே மன்மதனின் படைக்கலம்’ என்று எழுதினேன். உடனே இயக்குனர் ஸ்ரீதர், படைக்கலம் என்ற வார்த்தையை நீக்க சொன்னார்.

காரணம் களம் என்றுதான் வரவேண்டும் கலம் என்று வந்திருக்கிறது என்றார். ஆனால் நான் களம் என்றால் போர்க்களம் என்பதைக் குறிக்கும்.

நான் எழுதியது ஆயுதங்களை கண் வேல் காதுகள் வாள் என்பது போல எழுதியிருக்கேன் என்று சொன்னேன். இப்படி எத்தனை பேருக்கு விளக்கம் சொல்ல முடியும் என்று ஸ்ரீதர் கோபப்பட்டார்.

பக்கத்திலிருந்த எம்.எஸ்.வி. “நோ… நோ… ஸ்ரீதர் மனமதனின் படைக்கலம் என்கிற வார்த்தை நன்றாக இருக்கிறது. கண்ணதாசனே இப்படி எழுதவில்லை. அதனால் முத்துலிங்கம் நீங்கள் படைக்கலத்தை விட்டு விட்டு அடைக்கலத்தை மாற்றுங்கள் என்றார்.

நான் உடனே நீங்கள் அடைக்கலத்தை மாற்றச் சொல்கிறீர்கள். ஸ்ரீதர் படைக்கலத்தை மாற்றச் சொல்கிறார்.

இரண்டையும் மாற்றினால் நான் வெறும் கலமாக ஆகிடுவேனே என்றேன். எம்.எஸ்.வி. அப்படி சொன்னதற்கு காரணம் அடைக்கலம் என்றால் பாதிரியாரைக் குறிக்கும் அதனால் என் மீது வழக்குப் போட்டுவிடுவார்கள் என்றார்.

இளையராஜா சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் போட்ட டியூனுக்கு நான் பாட்டு எழுதியிருக்கிறேன். அதாவது இளையராஜா இசையில் பாடல் எழுதிய முதல் கவிஞன் நான்தான்.

இலக்கண புலமையும் இலக்கிய புலமையும் இருக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான்.

‘விருமாண்டி’ படத்துக்காக பாட்டு எழுதும்போது என்னிடம் “மண்ணுக்கும் மணலுக்கும் என்னய்யா வித்தியாசம்’ என்று கேட்டார்.

நான் ‘மண் இரண்டெழுத்து மணல் மூன்றெழுத்து’ என்றேன். ‘என்னய்யா சின்ன பையன் மாதிரி பதில் சொல்ற’ என்று கோபப்பட்டார். ராஜா. ”மண் என்றால் உலகம், இடம், திருமண், செல்வம் என்று பல அர்த்தங்கள் இருக்கிறது என்றேன்.

“வேறு ஒன்றும் தெரியவில்லையா என்றார். ‘எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை என்றேன். அப்புறம்தான் அவர் சொன்னார் “மண் ஒட்டும் தன்மை உள்ளது. மணல் ஒட்டாத தன்மை உடையது.

மணல் என்பது காரணப் பெயர். என்றார் இளையராஜா. நன்னூலில்கூட மரம், மண் என்பது இடுகுறி பெயர் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

இளையராஜா ஒருவர்தான் அது காரணப்பெயர் என்று முதன் முதலில் சொல்லியிருக்கிறார். இதை தமிழறிஞர்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த புத்தகத்தில் ஒரு இடத்தில் சோவியத் ரஷ்யா பற்றி சொல்லும்போது எண்பதுகளில் ரஷ்யா உடையாமல் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார் தேனி கண்ணன்.

ரஷ்யா உடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மொழியை திணித்தார்கள். இதனால் பல மாநிலங்களாக சேர்ந்திருந்த ரஷ்யா துண்டுத் துண்டாக சிதறிப்போனது.

ஒரு நாட்டில் மக்கள் இந்த மொழியைத்தான் பேச வேண்டும் என்று திணித்தால் அந்த நாடு உடைந்துவிடும்” என்று முத்துலிங்கம் பேசினார்.

விழாவில் நிறைவாக நூலாசிரியர் தேனி கண்ணன் ஏற்புரையும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.

More Articles
Follows