சென்சாரில் வேற எதிர்பாக்கிறாங்க; அதான் இழுத்தடிக்கிறாங்க… அழும் ஆனந்தன்

சென்சாரில் வேற எதிர்பாக்கிறாங்க; அதான் இழுத்தடிக்கிறாங்க… அழும் ஆனந்தன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anandan-director-4சேலத்தைச் சேர்ந்த கே.எம். ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் மேச்சேரி வனபத்ரகாளி.

இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் கே.எம்.ஆனந்தன்.

நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது.

அதன் பின் நடந்தவற்றை ஆனந்தனே விளக்குகிறார், “ 24/08/2017 இல் என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு, தணிக்கை அதிகாரி மதியழகன் என்னை அழைத்து, உங்களின் திரைப்படத்தில் ஒரே ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ் என்று ஏழு நபர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

அதன் பிறகு பத்து நாட்கள் கழித்து அங்கே சென்ற என்னிடம் உங்கள் திரைப்படத்தில் நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்திருக்கின்றது.

நீங்க அப்புறம் வாங்க அப்புறம் வாங்க என்று இழுத்தடித்தே வந்தார். அதற்கு நான் அவரிடம் சார் நீங்க U கொடுத்தாலும் சரி U/A கொடுத்தாலும் சரி, எது உகந்ததோ அதைக்கொடுங்க சார் என்றேன்.

சரி அப்படியென்றால் நீங்க எழுதிக்கொடுங்க எனக்கு U/A வாங்கிக்கறேன் என்று என மதியழகன் சொல்ல, நான்தான் அன்றிலிருந்து சொல்கிறேனே சார் நான் U கேட்கவே இல்லியே நீங்க U/A கூட கொடுங்க சார் என்றதும் சரி நீங்க எழுதிக்கொடுத்தா இன்னும் ரெண்டு மூணு நாள்ல தரேன்னு சொன்னார், சரி என்று நானும் 21/09/2017 அன்றே எழுதிக்கொடுத்தேன்.

அதன் பிறகும் இன்றுவரை 80 நாட்களுக்கு மேலாகிறது, அனுதினமும் வரும் போ, வரும் போ, வரும் போ, என்று இது மட்டுமே தினமும் பதிலாக வருகிறதே தவிர சான்றிதழ் வந்தபாடில்லை.

ஏதும் எதிர்பாக்கின்றார்களா வேறமாதிரி,..? அது நம்மளால முடியாது இப்ப, இப்ப மெர்சல் படத்தை மும்பையில் இருந்து சிஇஓ இங்க வந்து சான்றிதழ் கொடுத்துட்டு போறாரு.

நான் வீடு, நிலம் எல்லாம் அடகு வைத்து பணம் புரட்டி தினம் 1000 ரூபாய் ரூம் வாடகை கொடுத்து சென்னையில் தங்கியிருக்கிறேன்.

உடல் நலம் வேற சரியில்லை என்று அழுது கூட கேட்டேன். ஆனா, என்னை மனிதனாகவே மதிக்கவில்லை.
U அல்லது U/A எந்த சான்றிதழ் வேண்டுமானாலும் கொடுங்க, என் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றாலும் மாவட்டம் தோறும் நானே மக்களுக்குப் போட்டுக் காட்டுகிறேன் என்றும் சொல்லிட்டேன்.

இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது… இன்னும் தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்..” என்றார்.

Mechery Vanabadrakali Producer condemns activities of Censor Board

ரஜினி-கமல் படங்களை இயக்கிய ஐவி.சசி மரணம்; கமல் இரங்கல்

ரஜினி-கமல் படங்களை இயக்கிய ஐவி.சசி மரணம்; கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal mourns for the death of Legendary filmmaker IV Sasi140க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஐவி. சசி (வயது 69)

மலையாள மொழியில் மட்டும் 100 படங்களை இயக்கியிருக்கிறார் இவர்.

கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புதவிளக்கும், குரு ஆகிய படங்களையும் ரஜினியின் காளி படத்தை இவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை சீமாவின் கணவரான இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் இரங்கலை பதிவிட்டுள்ளார்.

அதில், “நெடுங்கால நண்பரும், இணையில்லா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும், குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்” என்று பதிவிட்டுள்ளார்.

Kamal mourns for the death of Legendary filmmaker IV Sasi

iv sasi

ரஜினியின் 2.0 இசை வெளியீட்டு விழாவில் துபாய் அரசர்

ரஜினியின் 2.0 இசை வெளியீட்டு விழாவில் துபாய் அரசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 stillsலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெறுகிறது

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

– 2.0 படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

– இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்

– பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

– 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது

– துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

– துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.

மெர்சல் பட சென்சார் சர்ட்டிபிகேட்டை திரும்ப பெற கோர்டில் மனு

மெர்சல் பட சென்சார் சர்ட்டிபிகேட்டை திரும்ப பெற கோர்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsவிஜய்யின் மெர்சல் படம் வெளியானது முதல் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

முக்கியமாக ஜிஎஸ்டி வசனங்களை நீக்க பாஜக.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க கூடாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவே இப்படத்திற்கு பெரியளவில் விளம்பரமாகி படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கான தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்துள்ளார்.

விஷால் ஆபிஸில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை

விஷால் ஆபிஸில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் உள்ளது.

திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் மத்திய கலால் பிரிவின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.

விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று தன் ரசிகர்களுக்கு காதல் தேவதை விருந்தளிக்கும் சிம்பு

இன்று தன் ரசிகர்களுக்கு காதல் தேவதை விருந்தளிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuநடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இதன் ட்ரைலர் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் தேவதை என்ற முழுப்பாடலை இன்று அக்டோபர் 23ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows