‘பிகில்’ பட போஸ்டரை கிழித்து கறிகடை வியாபாரிகள் போராட்டம்

‘பிகில்’ பட போஸ்டரை கிழித்து கறிகடை வியாபாரிகள் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meat sellers protest against Vijays Bigil movieவிஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பிகில்’.

அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஆளும் அதிமுக அரசை கடுமையாக சாடியிருந்தார் விஜய்.

இதற்கு பல அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் கறிக்கடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அதாவது பிகில் பட போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருப்பார். இதனை கண்டித்து தான் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களின் மனுவில்…

“இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பதில் நோட்டீசாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் செருப்பு காலால் முட்டி, கத்தியை மிதித்து போஸ்டர் வெளியிட்ட காட்சியை நியாயப்படுத்தி பதில் கோரப்பட்டது.

ஆகவே இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை மிதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை கொடுக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டம் செய்தனர்.

இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.

Meat sellers protest against Vijays Bigil movie

விஷ்ணு விஷாலுடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர்

விஷ்ணு விஷாலுடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Bhavani Shankar to star opposite with Vishnu Vishal ஜெர்ஸி பட தமிழ் ரீமேக் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இத்துடன் எஃப்.ஐ.ஆர் என்று பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்துவிட்டு தன் நெருங்கிய நண்பரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநருமான செல்லா என்பவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

Priya Bhavani Shankar to star opposite with Vishnu Vishal

‘திருச்சூர் பூரம்’ படத்தில் ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக அனு சித்தாரா

‘திருச்சூர் பூரம்’ படத்தில் ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக அனு சித்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Swathi Reddy is replaced by Anu sithara in Jayasuryas Thrissur Pooramகேரளா என்றால் ஓணம், சபரிமலை, குருவாயூரப்பன், புட்டு, கடலை கறி ஆகியவையுடன் திருச்சூர பூரம் என்ற திருவிழாவும் நினைவுக்கு வரும்.

தற்போது அந்த திருவிழாவை மையப்படுத்தி திருச்சூர் பூரம் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகி வருகிறது.

ராஜேஷ் மோகனன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயசூர்யா நாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் வடகறி சுவாதி தான் முதலில் ஒப்பந்தமானாராம்.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் அனு சித்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளராம்.

புக்ரி, கேப்டன் ஆகிய படங்களில் இதே ஜோடி இணைந்துள்ளது. 3வது முறையாக தற்போது இணைகின்றனர்.

மோகன்லால் மீனா, திலீப் காவ்யா மாதவன் ஜோடியை போல இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாம்.

Swathi Reddy is replaced by Anu sithara in Jayasuryas Thrissur Pooram

விஜய்யை விட மாட்டேன் சொன்ன அட்லியின் அடுத்த படம் என்ன?

விஜய்யை விட மாட்டேன் சொன்ன அட்லியின் அடுத்த படம் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Atlees next movie after Bigilவிஜய் நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அட்லி.

இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

பிகில் பட இசை விழாவில் “எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் விஜய் அண்ணாவை விட எனக்கு மனசில்லை” என பேசினார் அட்லி.

இந்த நிலையில் இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளாராம்.

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார்.

அதன் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அட்லி பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Directors Atlees next movie after Bigil

‘கோமாளி’ தந்த வெற்றி; டைரக்டருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

‘கோமாளி’ தந்த வெற்றி; டைரக்டருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari K Ganesh gift a car to director Pradeep for Comali successபிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் கோமாளி.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

கடந்த மாதம் சுதந்திர தினத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்காக இயக்குநர் பிரதீப்புக்கு படத்தின் தயாரிப்பாளர் ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Ishari K Ganesh gift a car to director Pradeep for Comali success

ஸ்ரீ பிரியங்காவின் ‛மிக மிக அவசரம்’ பட ரிலீஸ் தேதி இதோ…

ஸ்ரீ பிரியங்காவின் ‛மிக மிக அவசரம்’ பட ரிலீஸ் தேதி இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Priyankas Miga Miga Avasaram movie release date is hereஅமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

இதில் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சீமானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் போலீஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் 2௦௦ பெண் காவலர்களுக்கு இப்படத்தை திரையிட்டு காட்டியிருந்தார் சுரேஷ் காமாட்சி.

படம் எப்போதோ ரிலீசுக்கு தயாரானாலும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 11ல் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sri Priyankas Miga Miga Avasaram movie release date is here

More Articles
Follows