ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் ஆகிட்டோம்..; ரஜினி வெறியன் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி

rajinikanth karthik subbaraj“நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அறவித்துவிட்டார்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பேட்ட பட இயக்குனரும் ரஜினி வெறியருமான கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்…

அதில், “தலைவா வருத்தப்படாதீர்கள்.உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம்.என்றும் எங்களின் அன்பு உங்களுக்காக இருக்கும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Maybe We didn’t deserve good political leader like you says director Karthik Subbaraj

Overall Rating : Not available

Latest Post