3 ஹீரோஸ் & 2 ஹீரோயின்ஸ் உடன் ‘மாயா பஜார்’ ரீமேக்கை தொடங்கிய சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தை அடுத்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியும் தயாரித்தும் வருகிறார் சுந்தர்.சி.

அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது அரசு அனுமதியளித்துள்ள கொரோனா தளர்வுகளுடன் சூட்டிங் தொடங்க இருக்கிறது.

இதனிடையில் கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘மாயா பஜார்’ படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி.

இதில் பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் உள்ளிட்ட 3 ஹீரோக்களுடன் ஸ்ருதி & ரைசா வில்சன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்களாம்

மேலும் சுந்தர் சி.யின் தற்போதைய ஆஸ்தான காமெடியன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இயக்குனர் பத்ரி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

Mayabazaar 2016 Tamil remake goes on floors

உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியில் ஆண்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ தயாரித்துள்ளவர்.
ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் சினிமா கற்றவர்.

பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது,
“மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள் .அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் கதைதான் ‘நோ என்ட்ரி’ படம், என்கிறார்.

இப்படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் தைரியசாலியாக நாய்களுடன் போராடும் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ் , ஆதவ் கண்ணதாசன்,டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை தமிழ் சினிமா காணாத ஆபத்தான மலைப்பிரதேசக் காட்சிகளையும் பசுமைக் காட்டு வெளிகளையும் நான் இது தொடர்பான காட்சிகளையும் சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முகாமிட்டுப் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி. இசை -அஜிஸ், பாடல்கள் கு.கார்த்திக், எடிட்டிங் பிரதீப்Eராகவ்,நடனம்- மானஸ், சண்டைக்காட்சிகள் .ஜி.என். முருகன், வசனம் -செந்தில்குமார்,
கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர். அழகு கார்த்திக் .

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு உருவாகி வருகின்றன.

இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Actress Andreas new age thriller no entry first look revealed

ஒருவர் படித்தால் அந்த வீடு மாறும்.. ஒவ்வொருவரும் படித்தால் அந்த நாடே மாறும்..; உதவிக்கேட்டு 3000 பேர் சூர்யாவிடம் விண்ணப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘சூரரைப்போற்று’ படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ஓடிடி ப்ரைம் தளத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவித்தனர்.

இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திரைப்படத்தின் வெளியீட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் சூர்யா அறிவித்தார்.

ரூ.5 கோடியில் ரூ.1.50 கோடியைத் திரையுலக சங்கங்களுக்கு அளித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் சேவையும் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் கொரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

தற்போது… ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…#AgaramCovidEduFund என ட்விட்டரில் பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில்… குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.” என்றும் சூர்யா தெரிவித்தார்.

இந்த நிலையில் சூர்யாவிடம் கொரோனா காலக் கல்வி உதவி கோரி இதுவரை 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இத்தகவலை சூர்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்… ஒருவர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருவரும் படித்தால் அந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் பல மாணவர்கள் தங்களது கல்வியைக் கைவிட்டுள்ளார்கள். நாம் நினைத்தால் மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

suriya announces education help from agaram foundation

ஏழை மாணவர்களுக்கு உதவும் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்.; முன்னாள் நீதிபதிகள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வு நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.

இதனால் இதுகுறித்து சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில்…
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து… நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும், தீர்ப்பு குறித்தும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். என்பதை நம் தளத்தில் காலை செய்தியாக பார்த்தோம்.

அதில், ‘நடிகர் சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் தவறாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதனால் நீதிமன்றத்திற்கு எதிராகவும் சூர்யாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

இந்தநிலையில் முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலமாக ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ளனர்.

நீட்தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாக சூர்யாவின் அறிக்கை உள்ளது. சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்கமாட்டார்.

சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்’… என கருத்து தெரிவித்துள்ளனர்.

6 former Judges urge Madras HC Chief Justice not to initiate contempt against Actor Suriya over NEET remarks

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா.? என்ன லாஜிக்.??? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

இதனால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்…

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்.

அதில்…

“ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் கொண்டாட பேனர்கள் வைக்கின்றனர்.

அந்த பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே.

தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்கள் ஒவ்வொருநாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்”

fans have died falling banners to celebrate actors FDFS n fans have lost their lives just by spending money on fan clubs. Can we ban movies? No logic right? Pls encourage students to study n face the exam boldly. Doctors – Everyday is like exam when they attend their patients…

BJP member actress gayathri raghuram slams suriya

ஷாரூக்-தீபிகா இணையும் படத்திற்கு பாஜகவை அலறவிடும் டைட்டில் வைத்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய திரைப்படங்களை அட்லி இயக்கியிருந்தார்.

இந்த 3 படங்களுமே விஜய் & அட்லிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதனையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது இது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் படத்திற்கு சங்கி (Sanki) என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம்.

ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கட்சியினரை கிண்டலாக சங்கி என அழைத்து வருகின்றனர் மக்கள். அப்படியிருக்கையில் இந்த தலைப்பை வைத்திருப்பதால் நிச்சயம் அரசியல் பிரச்னைகளை அட்லி சமாளிப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

SRK and Deepika to reunite for atlees Sanki

More Articles
Follows