‘மாஸ்டர்’ தியேட்டர் ரிலீஸ் கன்பார்ம்..; ஆனால்.. ட்விஸ்ட் வைத்து வீடியோ வெளியிட்ட லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

தமிழக முதல்வருடன் தளபதி சந்திப்பு..; விஜய் போடும் பக்கா ‘மாஸ்டர்’ ப்ளான்.!

இந்த நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில்.. ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் ரிலீசாவது போலவும் அதனை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது போலவும் சூப்பராக எடிட்டிங் செய்துள்ளனர்.

ஆனால் இறுதியாக நாளை டிசம்பர் 29ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Master release date is confirmed by production team

தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்டார்..; ரஜினியின் முரட்டு பக்தர்கள் அடித்த ‘லைவ் ரிப்போர்ட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த்.

நேற்று டிஸ்சார்ஜ் ஆனாலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ரஜினி தன் கட்சி அறிவிப்பை (டிசம்பர் 31) தள்ளி வைக்கவுள்ளதாக சில பொய் தகவல்கள் கசிந்தன.

ஆனால் ரஜினியோ தான் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ளாராம்.

அரசியலுக்கு நல்ல மனிதர் தேவையில்லை..; ரஜினிக்கு விஜய் & அஜித் பட இயக்குனர் கடிதம்..!

ஒரு வேளை செய்தியாளர்களை நேரில் சந்திக்கவில்லை என்றால் அவர் ட்விட்டரில் வீடியோ கூட பதிவிட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் மதுரை பகுதி ரஜினியின் முரட்டு பக்தர்கள் வித்தியாசமான போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.

அதில்.

“மாற்றத்திற்கான பேரலை வெல்லும், அதை விரைவில் நேரலை சொல்லும்.

தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த். வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்”

என்று பிரபல ஊடகத்தின் செய்தியாளர், அந்த டிவியின் நேரலையில் சொல்வது போல டிசைன் செய்து ஒட்டியுள்ளனர்.

Madurai Rajini fans poster goes viral

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் தாயார் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய இசையுலகில் மிகவும் பிரபாலமானவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

தமிழ் சினிமாவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர் தன் இணையற்ற இசை மூலம் இந்தியளவில் பிரபலமானார்.

ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதால் உலகளவில் பிரபலமானார்.

இவருக்கு தற்போது 53 வயதாகிறது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரஹ்மானின் தந்தை இறந்துவிட அவரை சிறுவயது முதலே வளர்த்து வந்தவர் தாயார் கரீமா.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர், திரையுலகினரும், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Isai Puyal AR Rahman’s mother, Kareema Begum, passes away

கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘குதிரை வால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார்.

அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.

இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

Kuthiraival selected for Kerala film festival

அரசியலுக்கு நல்ல மனிதர் தேவையில்லை..; ரஜினிக்கு விஜய் & அஜித் பட இயக்குனர் கடிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி…. அஜித் நடித்த திருப்பதி ஆகிய படங்களை இயக்கியவர் பேரரசு.

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இயக்குனர் பேரரசு கடிதம் எழுதியுள்ளார்.

நீங்கள்
அரசியலுக்கு
வரவேண்டும்
என்று ஆசைப்பட்டோம்!
இன்று
அந்த ஆசையை
ஆலோசிக்கிறோம்!

நீங்கள்
ஆன்மீக அரசியல்
என்கிறீர்கள்!
தமிழ்நாட்டில்
அரசியல் அஸ்திவாரமே
இறை இழிவுதான்!

எளிமையான
நேர்மையான
அரசியல்
காமராஜரோடு
சமாதியாகிவிட்டது!

எம்ஜிஆர் என்ன நல்லாட்சியா கொடுத்தார்.?.; ரஜினி கமலை அடிக்கிற அடியில விஜய் உள்ளிட்ட எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வராது.. – சீமான்

நீங்கள்
தமிழக விசுவாசத்தில்
சேவை செய்ய
ஆசைப்படுகிறீர்கள்
இங்கு
தமிழ்மொழி வேஷந்தான்
போற்றப்படுகிறது!

நீங்கள்
யார்மனதும் புண்படாமல்
பேசுபவர்!
ஆனால் இங்கே
விமர்சனம்
என்ற பெயரில்
உங்கள் மனசு
குத்திக் கிழிக்கிப்படுகிறது!

நல்லவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்
என்று நினைத்தோம்!

அரசியலுக்கு வந்து
நல்லவர் அசிங்கப்படக்கூடாது
என்று
இன்று நினைக்கிறோம்!

ஒருசில கட்சிக்கு
சில கட்சிகளே
எதிர்ப்பாய் இருக்கும்,
இங்கு உங்களுக்கு
ஒட்டுமொத்த கட்சிகளும்
எதிரியாக கிளம்பிவிட்டது!
இதுவே
நீங்கள் அரசியலில்
வெற்றியடைந்ததற்கு அடையாளம்!

கட்சி ஆரம்பிக்காமலே
கோடானகோடி தமிழர்கள்
உங்களை
தலைவராக ஏற்று
‘தலைவா’ என்று
அழைக்கப்பட்டீர்
அதுவே எங்களுக்குப் போதும்!

இப்பொழுது
இங்கு
நல்ல அரசியல்வாதிதான் தேவை!
நல்ல மனிதரல்ல!

நீங்கள்
மனிதனை மனிதனாக மதிக்கும்
நல்ல மனிதர்!

ரசிகர்களின்
விருப்பத்தைவிட,
சிலரின் ஆசையைவிட
உங்களின் நிம்மதியும்,
உடல்நலமும் முக்கியம்!

அரசியல்
ஒரு சூழ்ச்சி சுழல்
இறங்குவதற்கு முன்
சிந்தியுங்கள்!
இயக்குனர் *பேரரசு*

Vijay and Ajith films hit director requests Rajinikanth

தமிழக முதல்வருடன் தளபதி சந்திப்பு..; விஜய் போடும் பக்கா ‘மாஸ்டர்’ ப்ளான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவிருந்த மாஸ்டர் பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் காரணமாக தள்ளி கொண்டே போனது.

எனவே படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.

அது வேற வாய்.. இது நாற வாய்.. ச்..ச்..சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

இந்த சந்திப்பில் தியேட்டர்களில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதை, 100 சதவீதமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளாராம்.

இவர்களுடன் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்துள்ளார்.

எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Vijay meeting with TN cm Edappadi Palanisamy

More Articles
Follows