ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார்.

பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், ரகுராமின் பேரக் குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது.

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Master Raghuram grandson debut film in hollywood

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்…

“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் தான் திரும்ப நடிக்க வருவதை முன்னிட்டு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்தார் வடிவேலு.

அதில்…

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.

என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளதி.

என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளனர்.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி.

இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன்.

2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்றார் வைகைப் புயல் வடிவேலு.

Vadivelu talks about his re entry in kollywood

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களைப் போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளனர்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என வந்த தகவல்களை நம் தளத்தில் பார்ப்போம்.

இதில் லோகேஷ் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படமானது 1962ல் உருவாக்கப்பட்ட The Steel Claw கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது இரும்புக்கை மாயாவி கேரக்டர் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை அடுத்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதன்பின்னர் சூர்யா & லோகேஷ் கனகராஜ் படம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து கமல் சேதுபதி பகத் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya and lokesh kanagaraj joins for a new film

தத்தெடுத்த தந்தை கேரக்டரில் நடிக்க ரெடியாகும் ரஜினி.; இயக்குநர் இவரா.?

தத்தெடுத்த தந்தை கேரக்டரில் நடிக்க ரெடியாகும் ரஜினி.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் ரஜினி என கூறப்பட்டது.

அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கலாம் எனவும் தகவல் பரவியது.

தற்போது அந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் எனவும் இந்த படம் பாலம் கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் தான் வாழும்போதே ஏழை மக்களுக்கு எழுதி கொடுத்தவர் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

1999ஆம் ஆண்டில் காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

தான் வாழும் போதே தன் சொத்துக்களை எழுதி தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார் ரஜினிகாந்த்.

எனக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் தந்தை இல்லை. எனவே நீங்கள் எனக்குத் தந்தையாக வேண்டும் என அன்புக்கோள் விடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.

ஆனால் எல்லாம் சுதந்திரமும் சகல வசதிகள் கிடைத்தாலும் ஒரு சிறையில் இருப்பதை போல் உணர்கிறேன் என ரஜினி வீட்டை விட்டு சென்றார் பாலம் கல்யாண சுந்தரம்.

இந்த நிலையில் பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக வெளியாக உள்ளது.

இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Star Rajinikanth to act in Paalam Kalyana Sundaram biopic

pandiraj
pandiraj
அற்புதமான நடிகரால் அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது..; சிம்புவை புகழும் கௌதம் மேனன்

அற்புதமான நடிகரால் அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது..; சிம்புவை புகழும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புக்கு ஜோடியாக காயட் லோஹர் என்பவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இது வரை ஏற்றிடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருக்கிறார். அவர் கடுமையான வேலை செய்து விட்டு களைப்பில் இருப்பது போல உள்ளது.

படுக்க கூட இடம் இல்லாத ஓர் எளிய அறையில் பலர் நெருங்கி உட்கார்ந்தும் படுத்திருப்பதும் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான இந்த செகண்ட் லுக் டிசைன் ரசிகர்களால் சமூக வலைத் தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சிம்புவின் லுக்கை பார்த்தால் பாலா படம் போன்ற பாணியே தெரிகிறது. சிம்புவை பார்த்தால் பரிதாபம் கொள்ளும் நிலையில் தோற்றம் உள்ளது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 2-வது போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கெளதம் மேனன் குறிப்பிட்டு இருப்பதாவது:

“ஒரு அற்புதமான நடிகர் பணிபுரியும்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. சிலம்பரசன் மற்றும் இதை மிகவும் சுலபமானதாக மாற்றும் பல அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படப்பிடிப்பில் இருப்பது மிகவும் அருமையான விஷயம். இது இரண்டாவது போஸ்டர்”.

இவ்வாறு கெளதம் மேனன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

When there’s a brilliant actor at work, it all makes sense. It’s so good to be filming with the terrific @SilambarasanTR_ and a bunch of superb technicians who also make it look so easy. Here’s poster 2.. https://t.co/x1yyPRjhP3

Director Gautham Menon praises Actor Simbu for his dedication

அப்பாடா… ஷங்கர் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது..; விரைவில் வைகைப் புயல் திரையை கடக்கும்

அப்பாடா… ஷங்கர் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது..; விரைவில் வைகைப் புயல் திரையை கடக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,.

“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

எனவே விரைவில் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கலாம்.

லைகா நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு நடிக்கவுள்ளதாகவும், அதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Imsai Arasan issue comes to an end, you can see more of Vadivelu in the coming days

More Articles
Follows