தர்பாரை அடுத்து மாஸ்டரிலும் டியூனை காப்பியடித்த அனிருத்

தர்பாரை அடுத்து மாஸ்டரிலும் டியூனை காப்பியடித்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Oru Kutty Kathai song is copy of Rajakaliyamman movie songரஜினியின் தர்பார் பட சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அனிருத்தை நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

அதாவது.. சபரிமலை ஐயப்பன் பாட்டை காப்பியடித்துள்ளார் என விமர்சித்தனர். ஆனால் இதை தர்பார் படக்குழு கண்டுக் கொள்ளவில்லை.

தற்போது அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலும் காப்பி தான் என நெட்டிசன்கள் ஆதாரத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன், வடிவேலு நடித்திருந்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை.. என்ற பாடலை தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என கேலி செய்து வருகிறார்கள்.

Master Oru Kutty Kathai song is copy of Rajakaliyamman movie song

ஆஸ்கரை வென்ற படத்தின் மீது ‘மின்சார கண்ணா’ புரொடியூசர் வழக்கு.?

ஆஸ்கரை வென்ற படத்தின் மீது ‘மின்சார கண்ணா’ புரொடியூசர் வழக்கு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oscar winner Parasite a Copy of Vijay Starrer Minsara Kannaஅண்மையில் 92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

கொரியன் படமான பாராசைட் என்ற படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம் வரலாறு படைத்துள்ளது.

ஆனால் இந்த படத்தின் கதை கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறப்படுகிறது.

காப்பியடித்த படத்துக்கு இத்தனை ஆஸ்கர் விருதுகளா? என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளதாவது… இத்தனை வருடம் கழித்தும் மின்சார கண்ணா படம் பேசப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் பட கதை உரிமை குறித்து தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது இப்பட தயாரிப்பாளர் வழக்கு தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.

Oscar winner Parasite a Copy of Vijay Starrer Minsara Kanna

வலிமை வில்லன் இவரா..? அஜித்துடன் மீண்டும் இணையும் நவ்தீப்

வலிமை வில்லன் இவரா..? அஜித்துடன் மீண்டும் இணையும் நவ்தீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navdeep to join hands with Ajith again in Valimai வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அஜித்துடன் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அது உறுதி இல்லை என தெரிந்த நிலையில் தற்போது நவ்தீப் நடிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்து இருந்தார் நவ்தீப். இந்த படம் 2008ல் வெளியானது.

சமீபத்தில் திரைக்கு வந்த ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நவ்தீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Navdeep to join hands with Ajith again in Valimai

BREAKING ரஜினி மலை; அஜித் தல; ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என அமைச்சர் பேச்சு

BREAKING ரஜினி மலை; அஜித் தல; ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என அமைச்சர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay is not equal to Rajini but Ajith can be equal says TN Minsterவிருதுநகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“இது அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட் இதுதான்.

தமிழக அரசின் பட்ஜெட் வரி இல்லாத யாரையும் பாதிக்காது.

நடிகர் விஜய்யிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை.

ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தலை” என பேசினர்.

Vijay is not equal to Rajini but Ajith can be equal says TN Minster

‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’!

‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alambana‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’. இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் – பிரகாஷ், இயக்கம் – எடிசன் ராபர்ட், இசை – அகில்கிருஷ்ணா, ஒளிப்பதிவு – பிஜு போத்தன் கோடு.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எடிசன் ராபர்ட் கூறுகையில்,

இப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணகுமார் கதாநாயகியாக கல்யாணி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நந்தன், விஷ்ணு, காவியா, ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற தாத்தா ஆறு ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கிறார். அந்த ஆறு குழந்தைகளும் பிச்சை எடுத்து வந்து தாத்தாவிடம் பணம் கொடுக்கிறார்கள். தாத்தா அவர்களுக்கு உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்.

ஒரு கட்டத்தில் தாத்தா இறந்து விட ஆறு குழந்தைகளும் அனாதை ஆகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில் அவர்களை தேடி ஒரு பாட்டி வருகிறார்.
அவர் யார்? ஏன் அவர்களை தேடி வந்தார் என்பதை எதார்த்த வாழ்வியலோடு சொல்லி இருக்கும் படம் தான் ‘ஆலம்பனா’.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. சென்னை, கேரளா மற்றும் UK வில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in ayalaanரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரித்தி சிங் இணையும் படம் அயலான்.

இந்த படம் முன்பே அறிவிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows