கபாலி வரட்டும்.. காத்திருக்கும் தனுஷ் – பிரபுதேவா – விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ வருகிற ஜுலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் இப்படம் வெளியாவதால் திரையுலகில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

எனவே இப்படம் வெளியாகும் நாளில் எந்த ஒரு படத்தையும் வெளியிட எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, அடுத்த வெள்ளிக்கிழமை ஜுலை 29ஆம் தேதியும் எந்த படங்களும் வெளியாகாது எனத் தெரிகிறது.

மேலும் ‘கபாலி’ படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்தால், ஆகஸ்ட் 5ஆம் தேதியும் படங்கள் வெளியாகாது.

எனவே கிட்டதட்ட 3 வாரங்களுக்கு கபாலி மட்டும்தான் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதிதான் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போதுதான் தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’, பிரபுதேவாவின், ‘தேவி’, ஆகிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கபாலி டிக்கெட்டு காலி: சிம்பு-வெங்கட் பிரபு எடுத்த புது முயற்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி ரிலீசுக்கு பல ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.

அப்படி இருக்கும்போது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா?

அன்றைய தினம் அறிவிக்கப்படாத விடுமுறை நாளாக மாறிவிட்டது.

இந்நிலையில் சிம்பு, தற்போது நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினர் அனைவருக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டாராம்.

இதுபோல் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் கலைஞர்களுக்கும் வெங்கட் பிரபு டிக்கெட் எடுத்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து அருண் விஜய்யின் குற்றம் 23 படக்குழு தங்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

சமாளிக்க முடியாது… கபாலிக்கு நாங்களே லீவு விட்டுடுறோம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு புறம்… விடுமுறை நாட்கள் வந்தால் படத்தை ரிலீஸ் செய்யலாம் என திரையுலகினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் மறுபுறமோ… கபாலி ரிலீஸ் ஆகும் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பின்டஸ் நிறுவனம் விடுமுறை அளித்துள்ள நிலையில் தற்போது ஒரு சில நிறுவனங்களும் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களுரை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று சம்பளத்துடன் விடுமுறையையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் என்னதான் நாம் கட்டுபாடுகள் விதித்தாலும் ஊழியர்களை வேலைக்கு வருமாறு கட்டுபடுத்த முடியாது என்பதால் அவர்களின் போக்குக்கே சென்று விடுமுறை அளித்து விடுகிறோம் என்கின்றனர் நிர்வாக அதிகாரிகள்.

அட அதுவும் சரிதான்… எதுக்குப்பா ரிஸ்க்..?

அஜித்தின் ‘வீரம்’-விஜய்யின் ‘தளபதி 60’… மற்றொரு கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை முடித்துவிட்டு தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து விட திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிக்க உள்ளனர்.

இப்படத்தை பரதன் இயக்கி வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இவர் இயக்குனராக இருந்தபோதும் பல படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். அஜித்தின் வீரம் படத்திற்கும் இவர்தான் வசனம் எழுதினாராம்.

மேலும் வீரம் படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

‘சிம்புவுக்காக நிறைய பெண்கள் காத்திருக்கிறார்கள்…’ – டி.ஆர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தரை பத்திரிகையாளர்கள் திருச்சியில் சந்தித்தனர்.

அப்போது சிம்புவின் திருமணம் குறித்து அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதிலளித்து டி.ஆர். கூறியதாவது…

சிம்புவுக்காக மனப்பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பொருந்தக் கூடிய பெண்ணைத் தேடி வருகிறோம்.

ஒருவேளை சிம்புவின் திருமணம் காதல் திருமணமாக இருக்க கூட வாய்ப்பிருக்கிறது.

சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

‘ரஜினியோடு போட்டிப் போட இன்னொரு பிறவி வேண்டும்’ – இர்பான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டை தாண்டியும் ரஜினிக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

எனவே கபாலி ரிலீஸ் ஆகும் நாள் அன்று தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஆனால் இந்தியில் இர்பான் கான் நடித்துள்ள மதாரி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் போஸ்டரைதான் ரஜினி ரசிகர்கள் காப்பியடித்து டிசைன் செய்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இர்பான் கானிடம் உங்கள் படம் ரஜினி படத்திற்கு போட்டியா? நீங்கள் ரஜினிக்கு போட்டியா? என்று பத்திரிக்கையாளர் கேட்டனர்.

‘இந்த உலகம் அறிந்த கலைஞன் ரஜினிகாந்த். அவர் படத்துடன் என் படம் வருவது எனக்கு பெருமை.

அவருடன் போட்டி போட என்னால் முடியாது. அவருடன் போட்டிப்போட நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்’ என்றார்.

More Articles
Follows