*மனுசங்கடா* படத்தில் மனித உரிமைக்குரல் எழுப்ப வரும் தேசிய விருது பெற்ற டைரக்டர்

*மனுசங்கடா* படத்தில் மனித உரிமைக்குரல் எழுப்ப வரும் தேசிய விருது பெற்ற டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manusangada participated in last year International Film Festival of India held in Goaபல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.

மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது.

புகழ்ப்பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர்.

தயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

Manusangada participated in last year International Film Festival of India held in Goa

Manusangada participated in last year International Film Festival of India held in Goa

*பரியேறும் பெருமாள்* வரிசையில் சாதியை கொல்ல வரும் ஜிவி. பிரகாஷ்

*பரியேறும் பெருமாள்* வரிசையில் சாதியை கொல்ல வரும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarvam Thaala Mayam movie will deal with Caste issue In Music Societyமின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.

இவர் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.

தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அண்மையில் வெளியான பரியேறும் பெருமாள் படமும் சாதி பிரிவினையை சொன்ன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வரிசையில் சர்வம் தாள மயம் படமும் மக்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம்.

Sarvam Thaala Mayam movie will deal with Caste issue In Music Society

சர்கார் சீக்ரெட் லீக்ஸ்; படக்குழுவினரை எச்சரித்த ஏஆர். முருகதாஸ்

சர்கார் சீக்ரெட் லீக்ஸ்; படக்குழுவினரை எச்சரித்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss warning Sarkar team should give any interview regarding movieசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் சர்கார் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள சில நடிகர்கள், சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

இந்த செய்தியை அறிந்த முருகதாஸ் படக்குழுவினருக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அன்பார்ந்த சர்கார் படக்குழுவினரே, இந்தப் படம் உருவாக பலர் கடுமையாக உழைத்துள்ளனர்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலர் படம் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்ந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

AR Murugadoss warning Sarkar team should give any interview regarding movie

இயற்கையை தவிர யாருக்கும் நன்றி சொல்லாத *96* டைரக்டர் பிரேம்குமார்

இயற்கையை தவிர யாருக்கும் நன்றி சொல்லாத *96* டைரக்டர் பிரேம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont say Thanks to any one except Nature says 96 director Prem Kumarமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம், மகேந்திரன் தேவராஜ். நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷிணி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீகார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘எனக்கு தொழில்முறையான வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என வாழ்க்கை இரண்டாக பிரித்து வைத்து வாழ்ந்ததில்லை.

எனக்கு இரண்டும் ஒன்றாக கலந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறேன்.

எனக்கு சினிமா தான் வாழ்க்கை. இந்த படத்தின் பணியாற்றிய பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள். நண்பர்களுக்கு நன்றி சொல்லக்கூடாது என்பார்கள். அதனால் நன்றி தெரிவிக்கபோவதில்லை.

ஊடகவியலாளர்களுக்கும் நன்றி சொல்லப் போவதில்லை. ஏனெனில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வெற்றிக்கு உங்களின் வழிகாட்டல் தான் காரணம்.

அதனால் தான் ஒரு மாதம் கழித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அன்று முதல் நீங்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க இயலாத உறவாகிவிட்டீர்கள். நான் நன்றி சொல்ல விரும்புவது படத்தில் இடம்பெறுவது போல் இயற்கைக்கு மட்டும் தான் நன்றி சொல்லவிருக்கிறேன்.

இந்த படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் லலித்குமார் என்ற இரண்டு நண்பர்கள் தான் காப்பாற்றினார்கள்.

இதையும் கடந்து இந்த படத்தின் அடையாளமாக இருப்பவர்கள் விஜய் சேதுபதியும், திரிஷாவும் தான். இவர்கள் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள்.’ என்றார்.

I wont say Thanks to any one except Nature says 96 director Prem Kumar

96 movie team

எட்டு மாத குழந்தை நான்; இனி எஞ்சிய நாட்கள் மக்களுக்கே.. : கமல்

எட்டு மாத குழந்தை நான்; இனி எஞ்சிய நாட்கள் மக்களுக்கே.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will spend Rest of life days for Tamil Peoples only says Kamalhassanகல்வியாளர் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று அக்டோபர் 7ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

இந்த விழா நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி ஐசரி கணேஷ் அவர்கள் என்னை நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம்.

வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன்.

கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார்.

இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு.

என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள்.

எங்கள் தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன்.

நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. வந்திருந்தால் நானும் 25 வருட விழாவை கொண்டாடியிருப்பேன்.

இப்போது வயதாகிவிட்டது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிக்கிறீர்களே என்கிறார்கள்.

எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், (மக்கள் நீதி மய்யம் கட்சி) ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன்” என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.

விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

I will spend Rest of life days for Tamil Peoples only says Kamalhassan

family day at vels university

அரசியலில் கமல்-ரஜினி இணைந்து பயணிக்க ஐசரி கணேஷ் வேண்டுகோள்

அரசியலில் கமல்-ரஜினி இணைந்து பயணிக்க ஐசரி கணேஷ் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganesh expressed his wish that Kamal and Rajini should join in Politicsவேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

முதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன்…

“ஐசரி கணேஷ் நினைத்திருந்தால் தன் குடும்ப அளவில் நட்டுமே தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம்.

ஆனால், எதையுமே வித்தியாசமாக, பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். எந்த தொழிலை வேண்டுமானால் அவர் நடத்தியிருக்கலாம், ஆனால் பாரதியாரின் வார்த்தைகளின் படி, கல்விச்சேவை செய்ய வந்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி தற்போது 25000 மாணவர்கள், 5000 ஆசிரியர்களாக உயர்ந்துள்ள தன் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதன் விளைவு தான் இந்த வேல்ஸ் குடும்ப விழா.

நான் 1973ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஏஎஸ் பிரகாசம் அவர்கள் எம்ஜிஆர், சிவாஜி போல கமல்ஹாசன் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சொன்னார். அதை மெய்ப்பிக்கும் விதமாக 45 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார் கமல்ஹாசன்.

திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வரும் கமல், சமூகத்தில் முடிசூடிய மன்னராக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

ஐசரி கணேஷ் அண்ணன் அவர்களை எப்போதுமே நான் பிரமாண்ட நாயகன் என்று தான் அழைப்பேன். அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும்.

ஒரு நண்பனாக எனக்கு தெரிவது, திருக்குறளில் வரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளுக்கு ஏற்றார்போல வாழ்ந்து வருபவர் அண்ணன் டாக்டர் கணேஷ்.

இந்த 25 வருடங்களில் அவரின் அசுர வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்து, கடந்து வந்த பாதையை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். கமல் சாருடன் பிஸினஸ் கிளாஸ் விமானத்தில் இரண்டு முறை பயணிக்கும் வாய்ப்பும், நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

அப்போது நீங்கள் அவ்வளவாக படிக்கவில்லையே, எப்படி இந்த அளவுக்கு அறிவாற்றலோடு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தினமும் புத்தகம் படிப்பேன் என்று சொன்னார்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தீவிர வாசிப்பாளர் என்று. நிர்வாகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்தியாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இந்தியாவில் இருப்பது தான் எனக்கு பெருமை.

கமல், ஐசரி கணேஷ் இருவருமே தனித்துவமாக சிந்திப்பவர்கள், தன்னம்பிக்கையோடு பருந்தை போல பறக்கக் கூடியவர்கள். அவர்களை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார் கௌரவ விருந்தினர் சேவியர் பிரிட்டோ.

வேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது…. கமல் சாரை அழைக்கலாம் என நினைத்தோம்.

அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள்.

மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம்.

அதற்கு வழிவிட்ட வருண பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர்.

என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.

அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு வண்ண பறவைகள் (கமல் மற்றும் ரஜினி) வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன. அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஏற்புரை வழங்கினார் விழா நாயகன் ஐசரி கணேஷ்.

Ishari Ganesh expressed his wish that Kamal and Rajini should join in Politics

kamal at vels family day

 

More Articles
Follows