மனுசனா நீ பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் ஓனர் அரெஸ்ட்

மனுசனா நீ பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் ஓனர் அரெஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manusanaa Nee director Ghazali about piracy issue in Theatresகஸாலி தயாரித்து இயக்கிய மனுசனா நீ திரைப்படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை ஒரு தியேட்டரில் திரையிடும்போது அதன் உரிமையாளரே படம் எடுத்து திருட்டு விசிடி தயாரித்துள்ளார்.

அவர் தற்போது கைது ஆகியுள்ளார். அதுபற்றி கஸாலி கூறியதாவது…

நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம்,

பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன்.

வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை.

தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை.

ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து கீழ்க்கண்ட தகவல்களைக் கொடுத்திருக்கின்றனர்:

திரையரங்கத்தின் பெயர்: முருகன் திரையரங்கம்
ஊர்: கிருஷ்ணகிரி
எடுக்கப்பட்ட நாள்: 16.02.2018
எடுக்கப்பட்ட நேரம்: மாலை 07.05.39 லிருந்து 08.57.01 வரை.

நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்து, மேலும் பல லட்சங்கள் செலவு செய்து சொந்தமாகப் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன்.

நல்லவிதமான எதிர்பார்ப்பு வந்து, படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் “அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு” – க்கு மனு கொடுத்து சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோர்மேல் புகார் கொடுத்தேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனக்கு இப்போது பல கோடி நஷ்டம். கேபிள் மூலமும், வெளிநாடுகளுக்கு சப்டைட்டில் போட்டு பிரித்து விற்பதன் மூலமும், பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எனது எல்லா முயற்சிகளும் வீணாகி, ஏறக்குறைய 5 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல், ஏறக்குறைய எல்லா தமிழ் படங்களையும் சில மூன்றாம் தர சமூக விரோதிகள் தொடர்ந்து திரையங்கங்களில் படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதால் வருடத்துக்கு தமிழ் சினிமா மட்டும் 500 – 600 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது.

இது, தயாரிப்பாளர்களைத் தெருவில் நிறுத்துவது மட்டுமல்லாமல், புதிதாய் திரைப்படம் தயாரிக்க யாரும் முன் வராத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது இந்த முயற்சி அனைத்து தவறான திரையரங்கங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அருகிலிருக்கும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர் பைரஸி அறவே இல்லை. அந்த நிலையை நம் தமிழ் சினிமாவுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டு நம் தமிழ் சினிமாவுக்கு பாதுகாப்பான, சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கடிதத்துடன் கீழ்க்கண்ட நகல்களை இணைத்துள்ளேன்:

1. “கியூப்” நிறுவனத்திடமிருந்து பெற்ற திரையரங்க விபரம்
2. முருகன் திரையரங்க உரிமையாளர் மேல் போட்ட ‘முதல் தகவல் அறிக்கை’

இப்படிக்கு,

கஸாலி
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

ரஜினி ரசிகர்களின் கோபத்தை தணித்த தனுஷ்

ரஜினி ரசிகர்களின் கோபத்தை தணித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Dhanush controlled Rajini fans angryரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா.

இப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் டீசரை இன்று மார்ச் 2ஆம் காலை 10 மணிக்கு வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார்.

ஆனால் சில நபர்களால் டீசர் இணையத்தில் லீக்காகிவிட்டது.

டீசர் லீக்கானவுடன் பலரும் வாட்ஸ் அப்களில் இதை பரப்ப ஆரம்பித்து விட்டனர்.

யூடிப்பில் பலமுறை பார்த்து ரெக்கார்டு செய்ய காத்திருந்த ரஜினி ரசிகர்கள் இதனால் செம கடுப்பில் இருந்தனர்.

இந்நிலையில் இனியும் தாமதித்தால் சரி வராது என நினைத்த தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் டீசரை அதிகாரப்பூர்வமாக நள்ளிரவே வெளியிட்டு விட்டார்.

அவர் இதை ட்விட்டரில் பதிவிடும்போது…

தலைவர் டீசர் எப்போ ரிலீஸானாலும் எப்பிடி ரிலீஸானாலும் தீபாவளிதான். மாஸ் தான் என ரஜினி ரசிகர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Dhanush‏Verified account @dhanushkraja
Here you go !! Kaala teaser. http://bit.ly/KaalaTamilTeaser … thalaivar teaser eppo release aanaalum eppidi release aanaalum diwali dhaan. Mass dhaan.

சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாத தனுஷ்; கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாத தனுஷ்; கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Teaser leaked Rajinikanth fans disappointedரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று மார்ச் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார் தனுஷ்.

இதனால் இரவு நேரம் முன்பே உறங்கி காலையில் எழுந்து டீசரை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் எவரும் எதிர்பாரா வகையில் மார்ச் 2 தொடங்கும் நேரத்தில் இரவு 12.05 மணிக்கு எல்லாம் காலா டீசர் லீக்காகிவிட்டது.

இதனையடுத்து சில நிமிட இடைவெளியில் வேறு வழியில்லாமல் அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார் தனுஷ்.

இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர். எப்படி இது லீக்கானது..? இதை செய்தவர் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த டீசரை முன்பு அறிவித்தப்படி நேற்று மார்ச் 1ஆம் தேதியே வெளியிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த லீக் பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kaala Teaser leaked Rajinikanth fans disappointed

https://www.filmistreet.com/video/kaala-official-teaser/

தொழிலதிபர் மகள் சஞ்சனாவை மணக்கிறார் நடிகர் கதிர்

தொழிலதிபர் மகள் சஞ்சனாவை மணக்கிறார் நடிகர் கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kathir going to get married with Sanjanaமதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கதிர்.

இதனையடுத்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார்.

தற்போது `சிகை’, `சத்ரு’, `பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவை விரைவில் திரைக்கு வரத் தயாராகியுள்ளது.

இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 4-ஆம் தேதி ஈரோட்டில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

மார்ச் இறுதியில் சென்னையில் வரவேற்பு நடைபெறவுள்ளது.

Actor Kathir going to get married with Sanjana

போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஐ-ப்ரோ அழகி பிரியா வாரியர்

போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஐ-ப்ரோ அழகி பிரியா வாரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya warrier in Drug awareness event at Keralaகேரளாவில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதை மருந்து வியாபாரம் களை கட்டியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் செய்து வருகிறார்.

இந்நிலையில் போதை மருந்து இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கேரள மாநில போலீஸ் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா, நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் இணையத்தின் சென்சேஷன் பெண்ணான நடிகை பிரியா வாரியரும் கலந்துக் கொண்டார்.

Priya warrier in Drug awareness event at Kerala

priya warrier

தென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது

தென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 1st March new films wont be released in South India

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக அந்த அமைப்புகள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்ச் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த மாதம் திரைக்கு வரவுள்ள கரு, பக்கா, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

From 1st March new films wont be released in South India

More Articles
Follows