ஊரடங்கிலும் ‘பூதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த மன்சூர் அலிகான்

ஊரடங்கிலும் ‘பூதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த மன்சூர் அலிகான்

Mansoor Ali khans new movie about politics in Agricultureடெரர் வில்லன், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவர் மன்சூரலிகான்.

சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் அடிக்கடி கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

இன்று ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் மன்சூரலிகான்.

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகானும் நடித்துள்ளார்.

‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரித்துள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினையில், எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும் அவர்களின் முதல் தேவையான காய்கறிகளும், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மட்டுமே இருக்க, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதற்கான இடமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெருகிறது, என்பதை நாட்டு மக்கள் தற்போது ஓரளவு புரிந்திருக்கும் நிலையில், மன்சூரலிகானின் ‘பூதாளம்’ குறும்படம் விவசாய நிலங்களை அழித்து அப்பார்மெண்ட்கள் கட்டும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக போகும் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் சாட்டையடியையும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் உலகமே கொண்டாடும் பூமி தினமான இன்று வெறும் வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல், பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் நடிகர் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கி நடித்து வெளியிட்டிருக்கும் இந்த ‘பூதாளம்’ குறும்படம் ஆபத்தை அறியா மக்களுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது.

Mansoor Ali khans new movie about politics in Agriculture

 

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடிப்பு..? ஏப்ரல் 27ல் பிரதமர் பரிசீலனை

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடிப்பு..? ஏப்ரல் 27ல் பிரதமர் பரிசீலனை

Will Corona lock down extends after 3rd May 2020கொரோனா என்ற கொடிய வைரசால் உலகமே கடும் பாதிப்படைந்துள்ளது.

தினமும் உயிர் பலி பல ஆயிரங்களை தொட்டு வருகிறது.

உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றுக்கு எப்போது முடிவு? என உலகமே காத்திருக்கிறது.

இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் பரவாமல் தடுக்க உலகின் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 2வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும்
ஏப்ரல் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிய வந்துள்ளது.

அப்போது இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும்.

Will Corona lock down extends after 3rd May 2020

BREAKING கொரோனா நிவாரணம்; இந்திய மாநிலங்களுக்கு விஜய் நிதியுதவி

BREAKING கொரோனா நிவாரணம்; இந்திய மாநிலங்களுக்கு விஜய் நிதியுதவி

Thalapathy Vijay donated Rs 1 c 30 lakhs to Corona relief fundகொரோனா வைரஸ் தொற்றால் நிறைய உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.

இதனை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தற்போது (ஒரு மாதத்திற்கு பிறகு) கொரோனா தடுப்பு நிவாரண நிதிகளை வழங்கியுள்ளார்.

இதனை அவரது மக்கள் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் அளித்து நிவாரண நிதி தொகை விவரம் வருமாறு….

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.

தமிழகம் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார்.

கேரளா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம்

பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சம்

ஆந்திரா முதல்வர் ரூ. 5 லட்சம்

தெலுங்கானா முதல்வர் ரூ. 5 லட்சம்

கர்நாடகா முதல்வர் ரூ. 5 லட்சம்

புதுச்சேரி முதல்வர் ரூ. 5 லட்சம்
ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.

இவையில்லாமல் ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் விஜய் உதவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy Vijay donated Rs 1 cr 30 lakhs to Corona relief fund

3 படங்களின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்

3 படங்களின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்

3 movies Sequels of Thirukumaran Entertainment on floorஅட்டக்கத்தி, பீட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, இறுதிச் சுற்று, இன்று நேற்று நாளை உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்.

இதில் பீட்ஸா படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இன்று நேற்று நாளை படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது என அறிவித்திருந்தது.

அது போல் தங்கள் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களில், எந்தப் படத்தின் 2-ம் பாகம் வேண்டும் என ரசிகர்களிடைய கருத்து கணிப்பு நடத்தியது.

அதில் ‘சூது கவ்வும் 2’, ‘தெகிடி 2’ மற்றும் ‘மாயவன் 2’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் சூதுகவ்வும் 2 படத்துக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் சூதுகவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய 3 படங்களின் 2 -ம் பாகத்துக்கான திரைக்கதை உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 movies Sequels of Thirukumaran Entertainment on floor

தண்ணீர் தொட்டிக்குள் வயதான பெண்ணுடன் ஜாலியாக நயன்தாரா தங்கை

தண்ணீர் தொட்டிக்குள் வயதான பெண்ணுடன் ஜாலியாக நயன்தாரா தங்கை

Actress cum Anchor Jacqueline recent video goes viralவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின்.

இவர் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜாக்குலின் ஒரு கிராமத்தில் பம்புசெட் தண்ணீர் தொட்டிக்குள் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருடன் அந்த வீடியோவில் வயதான பெண்மணி ஒருவர் இருக்கிறார்.

ஆரம்பத்தில் தண்ணீர்க்குள் அமர்ந்திருக்கின்றனர். தீடிரென பம்பு செட்டில் இருந்து தண்ணீர் வருகிறது. அதிலும் ஜாக்குலின் ஜாலியாக குளிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Actress cum Anchor Jacqueline recent video goes viral

Here is video link

https://www.instagram.com/p/B_MwrEYJfoD/

அஜித் உதவி செய்வாரு. நானும் செய்றேன்.; தீப்பெட்டி கணேசனுக்கு லாரன்ஸ் ஆறுதல்

அஜித் உதவி செய்வாரு. நானும் செய்றேன்.; தீப்பெட்டி கணேசனுக்கு லாரன்ஸ் ஆறுதல்

Ajith will help you Lawrence promises to Theepetti Ganesanரேனிகுண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

இவர் சமீபத்தில் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் நடிகர் அஜித் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய ஒரிஜினல் பெயரான கார்த்திக் என்ற பெயரை இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் அஜித் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள்.

அஜித் அவர்களிடம் உதவி கேட்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.

ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும்.

அஜித்திடம் இந்த வீடியோ செய்தியை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். என கண்ணீருடன் கூறியிருந்தார் தீப்பெட்டி கணேசன்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில்…

‘நண்பா இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன். அது அஜித்திடம் கிடைத்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார்.

உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உங்கள் விபரங்களை அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார்.

Ajith will help you Lawrence promises to Theepetti Ganesan

More Articles
Follows