மருத்துவமனையில் மனோபாலா அனுமதி.; நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்

மருத்துவமனையில் மனோபாலா அனுமதி.; நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர் மனோபாலா.

இதுவரை 1000 படங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது இதய நோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் மனோபாலாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது மனோபாலா சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் உற்சாகமாக உரையாடியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று ஜனவரி 26 மருத்துவமனையில் இருந்து மனோபாலா வீடு திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

Manobala admitted in hospital. Poochi Murugan who inquired about the well-being in person

பட்டைய கிளப்பும் ‘பதான்’.; இந்தியா முழுவதும் மிட் நைட் ஷோஸ்.; உலகெங்கிலும் 8000 திரைகள்

பட்டைய கிளப்பும் ‘பதான்’.; இந்தியா முழுவதும் மிட் நைட் ஷோஸ்.; உலகெங்கிலும் 8000 திரைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலைமோதும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க இந்தியா முழுவதும் பதான் படத்திற்காக நள்ளிரவு 12.30 மணி காட்சிகளை இணைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸ்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் இன்று வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது.

நாளை (ஜன-26) குடியரசு தின விடுமுறையாக என்பதால் படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று முதல் நள்ளிரவு 12.30 மணி காட்சியை இந்தியா முழுவதும் திரையிடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 8,000 திரைகளில் மிகப்பெரிய அளவில் திரையிடப்படும் இந்திப் படம் என்கிற பெயரை பதான் திரைப்படம் பெற்றுள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் என நாட்டின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களை கொண்டுள்ளதுடன், பதான் திரைப்படம் ஆதித்ய சோப்ராவின் லட்சியமான ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகவும் உருவாகி உள்ளது.

பதான் படத்திற்கு உருவான எதிர்பார்ப்பு இதுவரை திரையுலகம் கண்டிராதது. படத்தின் டீசர், “பேஷரம் ரங்” மற்றும் “ஜூமே ஜோ பதான்” என்கிற இரண்டு பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரைலர் என இந்தப்படம் தொடர்பாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அனைத்துமே இணையதளத்தை அதிர வைத்தது.

அதுமட்டுமல்ல.. இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இணைந்தது தான், இந்தப்படம் குறித்து இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாக மற்றுமொரு மிகப்பெரிய காரணம்..

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் என இந்த இருவரும் இணைந்து நடித்த படங்களின் மூலம், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகம் விரும்பப்படும் குறிப்பிட்ட சில திரை ஜோடிகளில் ஒன்றாகவே இவர்களும் கருதப்படுகின்றனர்.

‘Pathan’ Mid Night Shows All over India.; 8000 screens worldwide

Best Versatile Actor விருதை வென்ற நடிகை லக்‌ஷ்மி மஞ்சு

Best Versatile Actor விருதை வென்ற நடிகை லக்‌ஷ்மி மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவையும் தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என பல தளங்களில் வலம் வரும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு, நடிகையாக மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக ஜொலிக்கிறார்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் தெற்கு (Hall of Fame Awards South 2023) சமீபத்தில் வழங்கப்பட்டது.

இதில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சுக்கு ‘மான்ஸ்டர்’ படத்திற்காக சிறந்த பல்சுவை நடிகைக்கான (Best Versatile Actor) விருது வழங்கப்பட்டது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுடன் லக்‌ஷ்மி மஞ்சு இணைந்து நடித்த ‘மான்ஸ்டர்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.

மிக தைரியமான வேடத்தில் லக்‌ஷ்மி மஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றிருந்தார்.

தற்போது ‘மான்ஸ்டர்’ படத்திற்காக விருதுகளை குவிக்க தொடங்கியுள்ள லக்‌ஷ்மி மஞ்சு, தென்னிந்தியாவின் சிறந்த பல்சுவை நடிகையாக ஹால் ஆஃப் ஃபேம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

விருதை பெற்றுக்கொண்ட நடிகை லக்‌ஷ்மி மஞ்சு…

“இந்த விருதை எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பெறுவது உண்மையிலேயே பணிவாகவும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் இருந்தது.

எனது பள்ளிப் பருவத்திலிருந்தே நான் அறிந்த ஷாலு பூபாலிடம் இருந்து இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மிக முக்கியமாக மோகன்லால் சாருக்கும், ’மான்ஸ்டர்’ படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

Lakshmi Manchu walks away with the Best Versatile Actor

பாரதியார் பாடலை இசையமைத்து பாடிய ஏ. ஆர். ரஹ்மான் தங்கை.; கனிமொழி வெளியிட்டார்

பாரதியார் பாடலை இசையமைத்து பாடிய ஏ. ஆர். ரஹ்மான் தங்கை.; கனிமொழி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. ரஹ்மானின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” பாடல் இன்று வெளியாக உள்ளது.

நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.

மேலு‌ம் இப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.

தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

Production – Success 11
Music Composed and Sung by – IsshrathQuadhre
Lyrics – Mahakavi Bharathiyar
Direction – Madhesh
Cameraman – Gurudev
Editing – Dinesh PonRaj
Art Director- Iyappan
Stills – Boopathy
Make up – k. S.Venkatesh
Hair stylist – Thenmozhi
Recorded & Mixed – AM Studio
Sound Engineer – Pradeep, A J.Daniel
Set floor – Sasi studio capture lounge
co-ordination – Faiz, Govindan

Bharathiyar song composed and sung by A. R. Rahman’s younger sister

பாடகியும் நடிகையுமான ஷிவாங்கிக்கு ‘குக் வித் கோமாளி’ கொடுத்த புரமோஷன்

பாடகியும் நடிகையுமான ஷிவாங்கிக்கு ‘குக் வித் கோமாளி’ கொடுத்த புரமோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்ஸ்’ என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி.

தன்னுடைய இனிமையான குரலால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் ஷிவாங்கி அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனையடுத்து ஷிவாங்கிக்கு சினிமா வாய்ப்புகளும் வர தொடங்கின.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது ஜனவரி 28ம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கவுள்ளது. தற்போது புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இந்த ப்ரமோவில் கும்பகர்ணன்களாக மாறியுள்ளனர்.

இதுகுறித்து ஷிவாங்கி தன் ட்விட்டரில்…

“முன்னதாக வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை.. தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட் ஆகியுள்ளேன்.. த்ரில்லிங்கான இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை” என பதிவிட்டுள்ளார்.

Promotion for singer and actress Shivangi in ‘Cook with comali’

‘வாரிசு’ வெற்றி விழாவில் நரைத்த தாடி கலைந்த தலையுடன் விஜய்.; நடிக்காமல் பங்கேற்ற பிரபலம்.!

‘வாரிசு’ வெற்றி விழாவில் நரைத்த தாடி கலைந்த தலையுடன் விஜய்.; நடிக்காமல் பங்கேற்ற பிரபலம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான படம் ‘வாரிசு’.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஸ்ரீமன், வி டிவி கணேஷ், பிரகாஷ்ராஜ், கணேஷ் வெங்கட்ராமன் & கௌரவ வேடத்தில் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி ரிலீசான இந்த படம் பெண்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை உலகளவில் ரூ. 250 கோடியை இந்த படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படத்தின் வெற்றி விழாவை விஜய் கொண்டாடியுள்ளார்.

நரைத்த தாடி கலைந்த தலைமுடி என இந்த விழாவில் பங்கேற்றார் விஜய்

இதில் இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், எடிட்டர் பிரவீன் கே எல், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜூ, சரத்குமார், பிரபு, ராஸ்மிகா சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த படத்தில் பணியாற்றாத நடிகையும் சரத்குமார் மனைவியுமான ராதிகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

A celebrity who participated Varisu success party without acting in it

More Articles
Follows