தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.
டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒன்றாக மேடையேறினர்.
அப்போது ரஜினி பேசியதாவது…
“மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதை அறிந்து படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ஆவது கேட்டிருந்தேன்.
ஆனால் அதை மறுத்து விட்டார் மணிரத்னம்.
பெரிய பழவேட்டையர் கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதையும் மறுத்துவிட்டார்.
உங்களை இது போன்ற கேரக்டர்களில் பயன்படுத்த விரும்பவில்லை. உங்கள் ரசிகர்கள் திட்டி விடுவார்கள் என வேண்டாம்” என்று மறுத்து விட்டார்.
வேறு யாராவது இருந்தால் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பார்கள். ஆனால் மணிரத்னம் முடியாது” என்று மறுத்து விட்டார். அதுதான் மணிரத்னம் என்று பேசினார் ரஜினிகாந்த்.
Manirathnam refuse to give chance for Rajini in PS1 movie.