யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை டிவியில் ஒளிப்பரப்ப தடை விதிக்க கோரிக்கை

மடோனா அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மண்டேலா’.

இதில் முடிதிருத்தும் தொழிலாளியாக யோகிபாபு நடித்து இருந்தார்.

இந்த படம் தியேட்டரில் ரிலீசாகாமல் கடந்த ஏப்ரல் 4 அன்று தனியார் டிவியில் நேரடியாக வெளியானது மண்டேலா.

ஒய் நாட் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்த நிலையில் மண்டேலா படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஸ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Mandela should be banned Case filed against movie team

Overall Rating : Not available

Latest Post