ஆவியுடன் பேசும் ஆராய்ச்சியில் நாயகன்..; உண்மைகளை உடைத்த ‘புகைப்படம்’

ஆவியுடன் பேசும் ஆராய்ச்சியில் நாயகன்..; உண்மைகளை உடைத்த ‘புகைப்படம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில்பகலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிக்கும் ‘புகைப்படம்’ படத்தின் பூஜை கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

இப்படத்தில் நாயகனாக மானவ் ஆனந்த் , நாயகியாக கிருபா சேகர் நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, ராகுல் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு லாரன்ஸ் அந்தோணி, இசை சத்யராஜ், படத்தொகுப்பு பாண்டி, கலை இயக்கம் சாஜி,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ் முருகன்..

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சுரேஷ் முருகன் கூறுகையில்,…

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகனுக்கு தாய் தந்தையுடன் பேச ஆசை ஏற்பட்டது அதனால் ஆவியுடன் பேசுவதை பற்றிய ஆராய்ச்சி கதாநாயகன் மேற்கொள்கிறார்.

கதாநாயகியின் தாய் தந்தை திடீரென்று விபத்தில் மரணம் அடைய அவர்களுடைய ஆவியுடன் பேசும்போது பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கிறது..

இதனால் நாயகனும், நாயகியும் பேராபத்தில் சிக்குகிறார்கள் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.

Manav Anand and Kiruba Sekar joins for Pugaippadam

மனீஷாவின் கனவை நிறைவேற்றிய இளையராஜா.; காதலர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கு..!

மனீஷாவின் கனவை நிறைவேற்றிய இளையராஜா.; காதலர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் .

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஐஸ்வர்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.

முதல் காதலை கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் 96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளி ஓவியம் தீட்டுகிறார்.

படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்க, கலையை முனி கிருஷ்ணா கையாளுகிறார் ஸ்டண்ட் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். நடனக் காட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர்.

இந்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் குறிப்பிடும்போது…

“நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம்…. ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை.

நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

“நினைவெல்லாம் நீயடா” ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார் மனிஷா யாதவ்.

Actress Manisha Yadav’s dream come true moment

‘ரைட்டர்’ ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ‘ராக்கி’ ‘பிளட் மணி’ உள்ளிட்ட படங்கள் மோதல்.; ஒரு பார்வை

‘ரைட்டர்’ ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ‘ராக்கி’ ‘பிளட் மணி’ உள்ளிட்ட படங்கள் மோதல்.; ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் விருந்தளிக்க தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர்.

டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள படங்கள் பற்றி ஒரு பார்வை…

அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரைட்டர்’.
இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதிகாரமிக்க காவல்துறையில் அதே துறையில் பணி புரியும் ரைட்டருக்கு ஏற்படும் வலியை சொல்கிறது இந்த படம்.

தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவர் நந்தா பெரியசாமி. இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

இந்த படத்தின் ரங்கநாதன் தயாரிக்க சித்து இசையமைத்துள்ளார்.

இதில் கௌதம் கார்த்திக், சேரன், சரவணன், சிவாத்மிகா, வெண்பா, சௌந்தரராஜா, ஸ்ரீபிரியங்கா சிந்துஜா, சுபா, முனீஷ், மௌனிகா, விக்னேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

விடுமுறை காலம் என்பதால் இந்த குடும்ப படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரதிராஜாவுடன் தரமணி பட நாயகன் வசந்த்ரவி நடித்துள்ள படம் ராக்கி. இவர்களுடன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘சாணிக் காயிதம்’ பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் தான் இந்த ராக்கி. இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் மட்டும் டிசம்பர் 23ஆம் தேதியே ரிலீஸாகவுள்ளது

சர்ஜூன் இயக்கியுள்ள ‘பிளாக் மணி’ என்றொரு படம் ஓடிடியில் வெளியாகிறது. பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் பிளட் மணி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தள்ளிப் போகாதே’.

இந்த படம் தெலுங்கில் நானி நடித்து சூப்பர் ஹிட்டான ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

இசையமைப்பாளராக கோபி சுந்தர், பாடல்கள் மற்றும் வசனம் கபிலன் வைரமுத்து, எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படங்கள் தவிர தெலுங்கில் தயாராகியுள்ள நானி மற்றும் சாய்பல்லவி நடித்துள்ள ‘ஷியாம் சிங்கா ராய்’, ஹிந்தியில் தயாராகியுள்ள ஜீவா நடித்துள்ள ’83’ ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரீலீசாகவுள்ளன.

சத்யராஜ் நடித்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படம் டிசம்பர் 24ம் தேதியன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil movies release on 2021 Christmas special updates

புத்தாண்டுக்கு விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் இணைந்து தரும் விருந்து

புத்தாண்டுக்கு விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் இணைந்து தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

இவர் இதற்கு முன்பு நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படங்களை இயக்கியிருந்தார்.

தன் முதல் படத்தில் கஞ்சா கடத்தலையும் 2வது படத்தில் குழந்தைகள் கடத்தலையும் வைத்து கதை அமைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் தங்க கடத்தலை மையப்படுத்தி கதை அமைத்திருக்கிறாராம்.

ராணுவ கமாண்டோவாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் பாடியுள்ள ஓப்பனிங் பாடல் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

Vijay Sivakarthikeyan Anirudh plans to give treat on 2022 new year

மார்கழியை யாரும் மார்த்தட்டி உரிமை கொண்டாட முடியாது – ரஞ்சித்

மார்கழியை யாரும் மார்த்தட்டி உரிமை கொண்டாட முடியாது – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம்.

மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது.
நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம்.

மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான்.

நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான், இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது. சினிமா இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம்.

நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,

நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். சமூக வலைதளங்களின் மூலமாக உருவாகும் வரவேற்பால் கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்”என்றார்.

நிகழ்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக சு.வெங்கடேசன் MP, சமூக செயல்பாட்டாளர் எவிடன்ஸ்கதிர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கலந்துகொண்டனர்.

Director Ranjith speech at Margazhiyil Makkal isai at Madurai event

FIRST TIME IN WORLD ‘சுவை ஆறு’ குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள்

FIRST TIME IN WORLD ‘சுவை ஆறு’ குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை ‘கம்பம்’ மீனா, ஊடகவியலாளர் மணவை பொன். மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்களையும், குறும்பட படைப்பாளிகளையும் குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரான பென்னெட் ஜே ராக்லாண்ட் வரவேற்று, சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மண்டல குழு படைப்பாளிகள் சங்க தலைவராக கணேஷ் ராஜ், துணை தலைவராக திருக்குமரன், செயலாளராக கே. வி. ஆர். கோபி, துணை செயலாளராக சிவராம், பொருளாளராக ஜெயசூர்யா ஒருங்கிணைப்பாளராக செந்தில் குமரன் நிஷாந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விழாவில் குறும்பட படைப்பாளிகள் சங்க செயலாளர் பென்னட் ஜே ராக்லாண்ட் பேசுகையில்…

”குறும்பட படைப்பாளிகள் சங்கம் குறும்பட படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதன்மையாக கருதுகிறது. விரைவில் குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி, அதன் மூலம் குறும்பட படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் குறும்பட படைப்பாளிகள் சங்கம் இணைந்து உருவாக்கிய படைப்புகளை வெளியிடுவதற்காக எதிர் வரும் தமிழ் புத்தாண்டு முதல் புதிய டிஜிட்டல் தளம் தொடங்கப்படும் .

குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் ஒரு அங்கமான பி ஜே ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘சுவை ஆறு’ என்ற பெயரில் குறும்பட தொடர் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன் முதலாக தயாராகும் குறும்பட தொடர் இது .

தமிழில் தயாராவது நம் அனைவருக்கும் பெருமை. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.” என்றார்.
இதனைத் தொடர்ந்து ‘சுவை ஆறு’ என்ற குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்,” முழுநீள திரைப்படங்களை இயக்குவதை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது. குறும்படங்கள் என்பது சூரிய ஒளியை, ஒரு குவி ஆடியில் செலுத்தி, அதனூடாக ஒரு தாளை எரிய விடுவதற்கு சமமானது.

வீரியமான படைப்புகள் தான் குறும்படங்கள். அறிஞர் ஒருவர் ஒரு பக்கத்திற்கும் மேலாக கடிதம் ஒன்றை எழுதி விட்டு, அடிக்குறிப்பாக எனக்கு சிந்திக்க நேரமில்லை. அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று எழுதினார். அதைப் போன்றதுதான் குறும்படங்கள். கால அவகாசத்தில் குறைவாக இருந்தாலும் படைப்பாளி பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய விசயத்தை துல்லியமாக சொல்வதுதான் குறும்படம். குறும்பட படைப்பாளிகள் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் ஸ்ரீராம் பேசுகையில…

” குறும்பட படைப்பாளிகள் சங்கம் போன்ற புதிய முயற்சிகளுக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும். சின்னத்திரை தொடர், வலைதள தொடர், இணையத் தொடர் என்பதைப்போல் புதிதாக அறிமுகமாகவிருக்கும் குறும்பட தொடருக்கும் விரைவில் மக்களின் ஆதரவு கிடைக்கும். ‘சுவை ஆறு’ என்ற குறும்பட தொடரை இயக்கும் இயக்குநர்கள் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை கம்பம் மீனா பேசுகையில்…

”குறும்பட படைப்பாளிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குநர்கள் தங்களது குறும்படங்களில் எமக்கு வாய்ப்பளித்தால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன். திரு பென்னட் அவர்களின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த குறும்பட படைப்பாளிகள் சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் விழாவிற்கு வருகை தந்திருந்த குறும்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், குறும்பட ஆர்வலர்கள்… ஆகியோரிடம் சங்கத்தின் செயல்பாடு குறித்தும், சங்கத்தின் எதிர்கால திட்டம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார்.

First time in world Series for Short films

More Articles
Follows