தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆன்டனி ரஸோ, ஜோரஸோ ஆகியோர் இந்த படத்தை இயக்கி உள்ளனர்.
இப்படத்தில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை ‘3டி’ தொழில்நுட்பத்தில் பார்த்தால் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்கும்.
துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் படத்தை பார்ப்பவர் மீது பாய்வது போன்ற பிரமை ஏற்படும்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படத்தை பார்ப்பதற்கு பாட்ஷா என்பவர் தன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
3டியில் இந்த படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அதிரடி சண்டை காட்சியை ரசித்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதாம்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கிகிச்சை பலனின்றி பாட்ஷா பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
