விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவ வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் பின்னர் மீண்டும் ஷூட்டிங் சென்ற நடிகர் விஜய் ஒரு பஸ் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதை பிப்ரவரி 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த செல்ஃபி ஒரு ஆண்டை கடந்த போது அதனை கொண்டாடும் வகையில் #1YearOfMasterSelfie ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் 2021 இந்தாண்டில் செய்தனர்.

இந்த நிலையில் மம்மூட்டி ரசிகர்களும் இவர் உடற்பயிற்சி செய்த போது எடுத்த செல்ஃபியை #1YearOfIconicMegastarSelfie என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

1 Year Of @mammukka’s Viral Workout Selfie that Shock the Internet Like Never Before !!

The man who constantly inspires ❤️

#1YearOfIconicMegastarSelfie

#Mammootty #BheeshmaParvam https://t.co/DvQ0Yyuqvt

Mammootty fans follows Vijay fans way

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாராவுடன் இணைந்து அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது.

இதில் நாயகியாக நடித்துள்ளதாலும் தன் சொந்த படம் என்பதாலும் இப்படம் தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நயன்தாரா.

அடுத்த தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அந்த புரோமோ நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா அவரின் பட நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொள்கிறாரே என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இவர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நேற்று விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பானது.

அப்போது..” தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது” என்றார்.

எனவே திருமணம் எப்போது? என தொகுப்பாளர் கேட்டார்

“விரைவில் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன்.

ஆனால், எல்லோருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன்.” எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Actress Nayanthara talks about her marriage

விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ படத்தில் சீர்திருத்த பள்ளி மாணவர்களுக்காக விஜய் ஆடி பாடிக்கொண்டே குட்டி ஸ்டோரி சொல்லி நிறைய அட்வைஸ் செய்வார்.

அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது.

விஜய் படத்திற்காக நடித்து காட்டியதை தற்போது ரோபோ சங்கர் நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார். இனி தொடர்ச்சியாக செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர். காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர்.

வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் , வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என ரோபோ சங்கரின் வழி எப்போதும் தனி வழி தான்.

கரோனா சூழலால் உலகமே மன உளைச்சலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் சிறைக்கைதிகளாக இருக்கும் மனிதர்களுக்காகவும் , சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுக்காகவும் முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ளார்.

75 வது ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்தப்பணியைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப்பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார்.

தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறப்பு நாட்களில் சிறைச் சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.

திரையில் வந்தோமா கல்லாவை நிரப்பினோமா என்று செல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறைச்சாலை கைதிகளுக்காக களத்தில் இறங்கிய ரோபோ சங்கரை சக நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Netizens praises Actor Robo Shankar’s stress relief activities

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.

இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பத்தில், 1979ல் புதிய வார்ப்புகள் , 80ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார் கங்கைஅமரன்.

அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார்.

சூப்பர் ஹிட் படமான கோழிகூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார்.

தொடர்ந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார்.

அதேபோல், 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே, சோழம் விதக்கையிலே.. இந்த பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் .

கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ.. பாடல், முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லு சோறு .. நிழல்கள்- பூங்கதவே.. போற்ற சுமார் 35 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை28, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ஹிட் தான்.

2013 க்கு பிறகு மீண்டும், பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். காரைக்குடியில் அருண்விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

காலையில் கதை காட்சிகளும்.. இரவில் சண்டை காட்சிகளுமாக இரவு பகலாக அருண்குமார் நடித்து வருகிறார்.

அனல் அரசு சண்டை காட்சி அமைத்தார்.
தூத்துக்குடி, காரைக்குடியெய் தொடர்ந்து ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Music: GV.Prakash
Cinematography: Gopinath
Editing: Antony
Stunt: Anl Arasu
Art: Micheal
PRO: Johnson
Co Producer: G.Arun Kumar
Production: Drumsticks Productions
Produced by: Vedikaranpatti S.Sakthivel .

Gangai Amaren joins part of Arun Vijay – Director Hari movie

உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இது கூடுதல் தளர்வுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.

பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களில் 25 பேர்களுடன் திருமணம் செய்யலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம்.

அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Puducherry Karaikal Covid Lockdown extended up to 31st August 2021

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1970-ம் ஆண்டில் அனைத்து சாதியினரும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தைக் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்.

ஆனாலும் பல்வேறு சட்டச் சிக்கல்களால் காரணமாக இந்த சட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேறவில்லை.

தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருணாநிதியின் கனவான இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

அதன்படி நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக திருமதி சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்த இவருக்கு 27 வயதாகிறது. திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சுஹாஞ்சனா.

சைவ திருமுறைகளை தமிழில் பாடி கோயிலில் இவர் அர்ச்சனை செய்யும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamilnadu first female chanter suhanjana at TN temples

Suhanjana Gopi 27 has been appointed as odhuvar at the Dhenupureeswarar temple in Chennai.

More Articles
Follows