செக்ஸியா டிரெஸ் போட முடியாது; ஆதியுடன் கவர்ச்சி சண்டை போட்ட மாளவிகா

செக்ஸியா டிரெஸ் போட முடியாது; ஆதியுடன் கவர்ச்சி சண்டை போட்ட மாளவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malavika menon fight with her director Adhirajan at Aruva Sandai shooting spotசிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…“ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த உடைகளை அணிய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அப்புறம் என்ன என்று இயக்குநர் ஆதி கேட்க நீங்க சொன்னதை விட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக இருக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை வெட்டி தைத்துக் கொடுத்தார் இயக்குநர்.

பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் அருவா சண்ட திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Malavika menon fight with her director Adhirajan at Aruva Sandai shooting spot

maalavika menon

சென்டிமெண்ட் சீனை கூட காமெடியாக்கிடலாம்.. வீரா பட இசையமைப்பாளர் பிரசாத் பேட்டி

சென்டிமெண்ட் சீனை கூட காமெடியாக்கிடலாம்.. வீரா பட இசையமைப்பாளர் பிரசாத் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veera movie Music Director Prasad SN about his Background music scoreகிருஷ்ணா, கருணாகரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வீரா திரைப்படம் நேற்று வெளியானது.

இப்படத்திற்கு பிரசாத் S.N இசையமைத்துள்ளார். படத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள்.

இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது.

படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான ஓன்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்திற்கு பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கும்.

படத்தில் வரக்கூடிய நகைக்சுவை காட்சியையோ அல்லது சண்டை காட்சியையோ மாற்றியமைக்க கூடிய ஓன்றுதான் பின்னணி இசை.

உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றியமைக்கலாம். படத்திற்கு பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது.

இந்த படத்தில் ரெட்ரோ வரிசையில் இசை வருவது போன்று முயற்சி செய்துள்ளோம் ஒரு புது முயற்சி. ஒரு இசைமைப்பாளருக்கு முழு படத்திற்கும் அல்லது பின்னணி இசையமைப்பதும் மிக முக்கியம்.

படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்திற்கு மிக முக்கியமாக காரணங்கள் இருக்கும் போது கண்டிப்பாக இசையமைப்பேன்.

இப்படத்தில் வட சென்னையில் வாழ கூடிய மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரியான படங்களை அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கும் பட்சத்தில் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் படத்தில் தேவையான இடங்களில் தான் நகைச்சுவை , சண்டை காட்சிகள் அமைந்துள்ளது.

தேவையில்லாமல் திணிப்பது போன்ற காட்சிகள் இல்லை. மிக சிறப்ப்பாக வந்துள்ளது. அடுத்த படமான “காட்டேரி” திரைப்படம் முந்திய படமான “யாமிருக்க பயமே” படத்தை விட மிகுந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீண்டும் அதே படக்குழுவுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.

“யாமிருக்க பயமே” , “காட்டேரி” திரைப்படத்தின் டைரக்டர் என்னுடைய முதல் விளம்பர வீடியோவில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அதையும் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள். வீரா திரைப்படம் 16 ஆம் தேதி வெளியானது.

அதன் பின்பு “காட்டேரி” இந்த வருடத்தின் பாதியில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதை தவிர்த்து இன்னும் 2 திட்டங்கள் உள்ளன.

Independent Music-ல் அதிக ஆர்வம் உள்ளது திட்டங்களும் உள்ளது. தற்போது நிறைய பாடல்கள் வருகின்றன மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சரியான தருணத்தில் கண்டிப்பாக பண்ணலாம்.” என்றார்.

Veera movie Music Director Prasad SN about his Background music score

கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம்; காவிரி விவகாரத்தில் ரஜினி கருத்து

கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம்; காவிரி விவகாரத்தில் ரஜினி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Supreme Court Verdict in Cauvery Water issue disappoints says Rajiniதமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதன்படி 177. 25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது.

தற்போதை தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். ஆனால் தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடாகவிற்கு 284.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிற்கு 280 டிஎம்சி தண்ணீர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதுநாள் வரை காவிரி பிரச்சினையில் பல கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் தற்போது அவர் அரசியலுக்கு வருவதால் அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Supreme Court Verdict in Cauvery Water issue disappoints says Rajini

கோயிலும் குப்பையும் ஒண்ணா.? நாச்சியார் மீது இந்து மக்கள் கட்சி புகார்

கோயிலும் குப்பையும் ஒண்ணா.? நாச்சியார் மீது இந்து மக்கள் கட்சி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police complaint against Jyothikas dialogue in Baalas Naachiyaarஇளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’.

இப்படத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியானபோதே அதில் ஜோதியாக பேசிய தே… பயலே என்ற கெட்ட வார்த்தையால்து பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆன இப்படத்தில், ‘கோயிலும் குப்பை மேடும் ஒண்ணு தான்’ என போலீஸ் அதிகாரி பேசுவது போல் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்துக் கோயில்களை அவமதிக்கும் இந்த வசனத்தை நீக்கக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா மற்றும் படத்தை இயக்கிய பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police complaint against Jyothikas dialogue in Baalas Naachiyaar

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பர்த்டே பாய் சிவகார்த்திகேயன்

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பர்த்டே பாய் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seema Raja first look released on Sivakarthikeyan birth dayவருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன் ஆகிய இரு படங்களையும் இந்த நிறுவனமே தயாரித்திருந்தது.

சிவகார்த்திகேயனின் 12வது படமாக உருவாகிவரும் இப்ப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.

இவர்களுடன் சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் நடிக்க, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் (பிப்ரவரி 17) முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு சீமராஜா என பெயரிட்டுள்ளனர்.

மேலும் இப்படம் இந்த 2018 வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்பதை அந்த பட போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

Seema Raja first look released on Sivakarthikeyan birth day

ஜீவாவின் ஜிப்ஸி-க்கு மெட்டு போடும் ரஜினி-விஜய் பட இசையமைப்பாளர்

ஜீவாவின் ஜிப்ஸி-க்கு மெட்டு போடும் ரஜினி-விஜய் பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Director Santhosh Narayanan‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் கவனிக்க, படத்தொகுப்பை ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் டெரிக் கவனிக்கிறார்.

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

ரஜினியின் கபாலி, காலா, விஜய்யின் பைரவா படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows