தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.
நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் அவரது கெட்டப் போட்டு காமெடி செய்வதாலும் ‘வடிவேல்’ பாலாஜி என அழைக்கப்பட்டார் இவர்.
இந்த மரண செய்தி அவரது ரசிகர்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது.
வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் & பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் வழங்கினார்.
வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளது.
Makkal Selvan Vijay Sethupathi pays last respect to Vadivel Balaji